How to Start Trust in Tamil

டிரஸ்ட் தொடங்குவது எப்படி

8059

டிரஸ்ட் தொடங்குவது எப்படி : How to Start Trust in Tamil :

’’டிரஸ்ட் என்பதற்கு ’பொறுப்பணம்’ என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்கட்டளை என்று பெயர்.ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு வகையான டிரஸ்ட்டுகள் உள்ளன. ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட்.


நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணையதளம், விவசாயிகள் மற்றும் விவசாய பொருள்கள் உற்பத்தி செய்போவர்களுக்கு, தங்கள் பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யவும், மேலும் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கவும் இந்த விவசாய சந்தை பகுதி இலவச இணைப்பு பலமாக செயல்படுகிறது. விவசாயிகள் நமது இணையத்தை பயன்படுத்தி, தங்கள் விற்பனையை பெருக்க அழைக்கிறோம், நன்றி

நமது இணையத்தில், தங்கள் பொருள்களை விற்பனை செய்ய, வாட்ஸஅப் மூலம் பதிவு செய்ய, கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.


டிரஸ்ட் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம்.

குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில் ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு தனியார் டிரஸ்ட் என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக இத்தகைய தனியார் டிரஸ்ட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

பொதுமக்கள் அனைவரும் அல்லது பொதுமக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயனடையும் வகையில் ஏற்படுத்தப்படுவது பொது டிரஸ்ட். உதாரணமாக கோயில், மசூதி, தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கான சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு பொது டிரஸ்ட்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

சட்டப்படியான நோக்கங்களுக்காக மட்டுமே டிரஸ்ட்டை உருவாக்க முடியும். டிரஸ்ட்டின் நோக்கமானது சட்டவிரோதமாகவோ மோசடியானதாகவே இருக்கக்கூடாது. பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும், நெறியற்றதாகவும்கூட இருக்கக்கூடாது. ஒரு டிரஸ்ட் அமைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் அவசியம். அதிகபட்சமாக எத்தனை பேர் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்கலாம். ஆனாலும் கூட இரண்டு பேருக்கு மேல் தேவையான எண்ணிக்கையில் மட்டுமே உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது எதார்த்தம்.

எந்தவொரு டிரஸ்ட்டாக இருந்தாலும் அதில் நிர்வாக அறங்காவலர் (Managing Trustee) ஒருவர் இருக்க வேண்டும். பொருளாளர் ஒருவர் இருப்பார். மற்ற உறுப்பினர்கள் டிரஸ்ட்டிகளாக இருப்பார்கள்.

டிரஸ்ட் உருவாக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். டிரஸ்ட்டினுடைய நோக்கம், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்,சொத்து மதிப்பு,சொத்து குறித்த விளக்கம் மற்றும் பிரிவுகள், உரிமைகள், கடமைகள், விதிமுறைகள் போன்ற விவரங்களை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

ஆவணத்தில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும். பொறுப்பாளர்கள் அனைவரும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.

இவ்வாறு டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்ட பிறகு அதற்கு ஒரு பெயரிட்டு பதிவாளர் அலுவலகத்தில் (Registrar office) பதிவு செய்ய வேண்டும்.

டிரஸ்ட் செயல்படும் அலவலகம் அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குட்பட்ட பதிவாளர் அலவலகத்தில் டிரஸ்ட்டை பதிவு செய்யலாம்.

உயர்திரு :
M.ஞானசேகர் அவர்கள் 95662 53929
அறக்கட்டளை ஆலோசகர்
சென்னை

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




2 thoughts on “டிரஸ்ட் தொடங்குவது எப்படி

  1. SURESH

    SURESH: மக்கள் சேவை மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆறு வருடங்கள் என்னால் முடிந்த அளவு மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்…

    இலவச உணவு , கல்விக்கான கண்டனம்,
    கோவில்களில் அன்னதானம்,
    கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்,
    கடலூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்,

    இன்னும் பல சேவைகள் செய்து வருகிறேன்.

    ஆனால் இன்னும் முறையாக பதிவு செய்யவில்லை…

    அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? WHATSAPP & CALL – 94436 36810, CALL – 7708833441

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *