ஹைட்ரோபோனிக்ஸ்

வேளாண் மானியம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி

1309

வேளாண் மானியம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி

தோட்டக்கலைத்துறை மானியத்தைப் பெற விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து விவசாயிகளும் தெரிந்துகொள்வதன் மூலம் எளிமையான முறையில் மானியத்தைப் பெற முடியும்.

இது தொடர்பாக கோவை தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குநர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் 2022-23ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் இணையதளம் வழியாக பதிவு செய்த விவசாயிகளுக்கே மானியம் வழங்கப்படும். இதற்காக பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி tnhorticulture.tn.gov.in/tnhortnet ஆகும்.

இணையதள பதிவு அவசியம்
இதில் முறைப்படி பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். தாங்களாக பதிவு செய்ய தெரியாத மற்றும் இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆவணங்கள்
ஆதார் எண்
விவசாயி பெயர்
கைபேசி எண்
வீட்டு முகவரி
(இதில் மாவட்டம், வட்டம், கிராமம், அஞ்சல் குறியீடு ஆகியவை இடம்பெற வேண்டும்)

விண்ணப்பிப்பது எப்படி?
தோட்டக்கலை மானிய விண்ணப்பத்தில் விவசாயிகள் மேற்கூறிய அனைத்து விவரங்களையும் முதலில் பதிவு செய்ய வேண்டும்.

திட்டம் தேர்வு
இதையடுத்து தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM), தேசிய விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (NADP), நிலையான விவசாயத்திற்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பரப்பு மேம்பாடு (RAD), ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் (IHDS), தேசிய மூங்கில் இயக்கம் (NBM), தேசிய ஆயுஷ் இயக்கம் (NAM), தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் (TNIAMP) ஆகிய திட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் உரிய திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் திட்ட இனம், உப இனம், முன்மொழியப்பட்ட பயிர், தேவையான அளவு (சாகுபடி பரப்பு) ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியாக விவசாயி புகைப்படத்தை பதிவேற்றம் செய்து Submit செய்ய வேண்டும்.

எஸ்.எம்.எஸ்
இந்த பதிவு தொடர்பான எஸ்.எம்.எஸ் மொபைல் எண்ணிற்கு வரும்.
அடுத்த சில வாரங்களில் மானியம் கிடைப்பதற்கான வழிமுறைகள் தொடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *