areca leaf plates

வங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு

4848

வங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு | areca leaf plates machine manufacturers in salem

இயற்கை வழி விளைந்த, மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கான மவுசு கூடிக்கிட்டே வர இந்த வேளையிலே, தமிழக அரசோட அறிவிப்பான பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கான தடை, தொழில் முனைவோர்களை Use and Throw எனப்படும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை தட்டு போன்ற எளிதில் மட்கும் பொருட்களின் பக்கம் பார்வைய திருப்பி இருக்கு. அதிலும் குறிப்பாக பாக்கு மட்டை தட்டுகளுக்கு கொஞ்சம் கூடுதலாவே வரவேற்பு இருக்கு.

ஏன்னா இதுல சூடான உணவுப்பொருட்களை வைப்பதற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் தடிமமாவும் கனமாகவும் இருக்கு, அதுமட்டுமில்லாம இதோட சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத, மற்றும் சுகாதாரமான தயாரிப்பு முறை நம்ம ஊர்ல மட்டுமில்ல வெளிநாடுகளிலேயும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள்லயும் விருப்பத்திற்குரியதா இருக்கு.


நல்ல இலாபம் தரும் பாக்குமட்டை தொழில் தொடங்க வங்கிக்கடன் பெற உதவி மற்றும் எந்திரம் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் தாங்கள் தயாரிக்கும் பாக்குமட்டை தட்டுகளை நாங்களே வாங்கிக்கொள்ளுகிறோம்.

விமலாதேவி இன்ஜினியரிங் ஒர்க்ஸ்
365A , அன்புநகர், கோரிமேடு
சேலம்
தொலைபேசி எண் : 93610 38661, 88384 03332

(விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்)


இடவசதி:
இந்த பாக்கு மட்டை தொழிலுக்கான இட அமைப்பானது குறைந்தபட்சம் 500 சதுர அடிகளாவது சொந்தமாக இருக்க வேண்டும்.

மின் இணைப்பு:
மின் இணைப்பை பொறுத்தவரைக்கும் ஒருமுனை இணைப்பு (single phase connection) சிறந்தது. இதற்கு நீங்கள் single phase மோட்டர் பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தை வாங்க வேண்டும்.

மிஷின் :
பாக்கு மட்டை மிஷின்ல மூன்று முக்கிய பாகங்கள் இருக்கு முதலாவது ஃப்ரேம். பாக்கு மட்டை மிஷின பொறுத்த வரைக்கும் ஃப்ரேமோட தடிமன பொருத்து மிஷினோட விலை மாறுபடலாம். நீண்ட கால business ku ஃப்ரேமோட திக்னஸ் அதிகமா இருந்தா நல்லது ஏன்னா இது அதிர்வ கட்டுப்படுத்தி மிஷின நீண்ட காலம் உழைக்க கூடியதா ஆக்குது.

1. Manual – இதுல மோட்டார் எதுவும் பொருத்தப்பட்டிருக்காது மட்டைய டைல வச்சிட்டு கால்ல பெடல்ல press பண்ணி cut பண்ண வேண்டியிருக்கும்.இதுல கொஞ்சம் உற்பத்தி குறைவாகத்தான் இருக்கும்.

2. இரண்டாவது Hydraulic Machine இது Motor மூலமாக இயங்கக் கூடியது. இந்த மிஷின பெடல் அல்லது ஸ்விட்ச் மூலமா ஈசியா இயக்கலாம்.

3. மூன்றாவது ஆட்டோமேட்டிக் மிஷின் இதில் உள்ள டைமர் தட்டு ரெடி ஆனதும் தானாகவே டையை இயக்கும். பெரும்பாலும் ஒவ்வொரு டையும் தனித்தனி மோட்டர்ல இயங்கக்கூடியது, விலை அதிகமானது.

மூலப்பொருட்கள் :

இந்த பாக்கு மட்டை தட்டு தயாரிப்பில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியதும் ரொம்பவே சிக்கல் நிறைந்ததும் இதோட மூலப்பொருளான பாக்கு மட்டை கொள்முதல்தான்.

முதலாவது இது நம்ம தமிழ் நாட்டுல சேலம், போன்ற பகுதிகள்ல கிடைக்குது, ஆனா இதோட தேவைகள் அதிகரிச்சதுனால இப்ப ரொம்ப அரிதாகிட்டே வருது. அது மட்டுமில்லாம் இது season பயிர் அப்படின்ரதுனால வருடத்திற்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு கிடைக்காமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் முன்கூட்டியே நீங்கள் சேமித்து வைக்க வேண்டுமானால் அதிக இடவசதியும் அதற்கென்று தனியாக முதலீடும் வேண்டும்.

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில் அதிக அளவில் விளைச்சல் உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் தும்கூர் (Tumkur ) மற்றும் ஷிமோகா (Shimoga ) போன்ற நகரங்களில் மட்டையின் விளைச்சல் அதிகம் மற்றும் விலையும் குறைவாக உள்ளதால் அதிக அளவில் அங்கிருந்துதான் கொண்டு வரப்படுகிறது.

மனிதவளம் (Manpower) :
இந்த தொழில பொறுத்த வரைக்கும் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.

 

மார்க்கெட்டிங் :
பாக்கு மட்டை தட்டுகள பொறுத்த வரைக்கும் Demand அதிகமாக இருகிறதுனால அது இருகிற இடத்துக்கே வந்து வாங்கிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க இருந்தாலும் நீங்க கேட்டரிங் பண்றவங்க , நாட்டு மருந்து கடைகள், பெரிய ஹோட்டல்கள் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியா சென்று சாம்பிள் கொடுத்து Canvas பண்ணீங்கன்னா ஆதாயம் அதிகமாக இருக்கும்.

பராமரிப்பு (Maintenance):
இரண்டு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை டைக்கு உள்ளே உள்ள Heater காயில மாத்த வேண்டியிருக்கும், அதனால எல்லா டை சைஸ்லயும் ஒவ்வொரு காயில் ஸ்பேர் வச்சிக்கரது நல்லது. ஈரம் அதிகமா உள்ள மட்டைய டைக்குள்ள வச்சிங்கன்னா காயில அடிக்கடி மாத்த வேண்டியிருக்கும். தட்ட கட் பண்ற பிளேடு வருடதிற்கொரு முறை சாணை பிடிக்க வேண்டியிருக்கும், மட்டை சீசன் இல்லாத சமயங்களில் இத நீங்க பண்ணிக்கலாம்.

 

 

நல்ல இலாபம் தரும் பாக்குமட்டை தொழில் தொடங்க வங்கிக்கடன் பெற உதவி மற்றும் எந்திரம் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் தாங்கள் தயாரிக்கும் பாக்குமட்டை தட்டுகளை நாங்களே வாங்கிக்கொள்ளுகிறோம்.

விமலாதேவி இன்ஜினியரிங் ஒர்க்ஸ்
365A , அன்புநகர், கோரிமேடு
சேலம்
தொலைபேசி எண் : 93610 38661, 88384 03332 (விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்)

Keywords: பாக்குமட்டை தட்டு தயாரிப்பு, பாக்கு மட்டை சேலம், பாக்கு மட்டை மெஷின், பாக்கு மட்டை தட்டு விற்பனை, பாக்கு மட்டை தட்டு கிடைக்கும் இடம், பாக்கு தட்டு மெஷின், Pakku Mattai Thattu Machine, areca leaf plates machine manufacturers in salem, areca leaf plates machine manufacturers in salem tamilnadu

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *