nursery biz tamil

5000 முதலீட்டில் நர்சரி சுயதொழில் இலாபம் மாதம் 25000

3438

கிராமப்புறங்களில் பசுமை இயற்கையாகவே கொட்டிக் கிடக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் பசுமை என்பது எட்டாக்கனிதான். நகர்ப்புற வீடுகள் கான்கிரீட் வனங்களாகிவிட்டன என்று சொன்னால் அது மிகையில்லை.

எனவேதான் வீட்டில் பசுமையை ஏற்படுத்த ஜன்னல், முகப்பு, முற்றம், வராந்தா, வரவேற்பறை, கார் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் என பல இடங்களில் பூச்செடிகள், பசுமை தரும் செடிகள் இவற்றை வைப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

உயர்தட்டு மக்கள், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என அனைத்து தரப்பிலும் இவற்றை வைப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
மக்களிடையே வரவேற்பு அதிகம் இருப்பதால்,நர்சரி தோட்டம் வளர்ப்புத் தொழில் நல்ல லாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.

நர்சரி என்றால் தமிழில் நாற்றுப்பண்ணை என்று பொருள். செடி வளர்க்கும் முறையை கற்றுக் கொண்டு இந்த நர்சரி கார்டன் தொழிலை நடத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம்.
வருடம் முழுவதும் வருமானம் தரக்கூடிய நர்சரி கார்டன் தொழிலுக்கு பெரிய அளவில் முன் அனுபவம் தேவையில்லை.

அருகில் உள்ள தோட்டக்கலை பண்ணையை அணுகி, செடி வளர்க்கும் முறையை எளிதாக கற்றுக்கொள்ள முடியும். முதலீடும் குறைந்த அளவே தேவைப்படும். தோட்டம் தொடர்பான அழகியல் உணர்வு இருந்தால் இத்தொழிலில் கொடிகட்டி பறக்கலாம்.

இந்த தொழிலை முழுமையாக கற்று கொடுக்க திருமயம் அருகில் உள்ள கல்லுகுடியிருப்பு என்னும் ஊரில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர். இவர்களின் குடும்ப தொழிலே நர்சரி செடிகள் வளர்த்து இந்தியா முழுமைக்கும் விற்பனை செய்வதே ஆகும்.

இந்த ஊரை சேர்ந்த திரு.ராஜா அவர்கள் கௌஷிக் நர்சரி என்ற பெயரில் நர்சரி தொழில் செய்து வருகிறார். புதிதாக நர்சரி தொழிலில் ஈடுபட விரும்புவர்களுக்கு பயிற்சி அளித்து மேலும் தேவையான செடிகளை ரூபாய் 5 முதல் விற்பனை செய்து வருகிறார்.

உதாரணமாக ரூபாய் 5 வீதம் ரூபாய் 10000 துக்கு செடிகள் வாங்கி 30 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்தால் கூட மாதம் 50000 வரை எளிதாக விற்பனை செய்ய முடியும். மிகவும் குறைந்த அளவு இலாபம் என்றல் கூட 25000 என்பது உறுதி.

மேலும் திருமணம் மற்றும் அன்பளிப்பு கொடுக்க செடிகள் வேண்டும் என்றாலும், மாடி தோட்டம், முகப்பு அலங்காரம் அமைக்க இவரை தொடர்பு கொள்ளவும்.

முகவரி
திரு . ராஜா
கல்லுகுடியிருப்பு
புதுகை மாவட்டம்
போன் : 63691 39990
98430 66132

www.gowshiknursery.in

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *