Iyarkai Uram

ஆர்கானிக் சான்றிதழ் வேண்டுமா

875

ஆர்கானிக் சான்றிதழ் | அங்ககச் சான்றளிப்பு

அங்ககச்சான்று திட்டத்தில் அங்கக வேளாண் முறையில் உற்பத்தி செய்ய விரும்பும் எவர் வேண்டுமானாலும் அங்ககச்சான்று துறையின் கீழ் பதிவு செய்து உற்பத்தி செய்யலாம். பதிவுக் கட்டணமாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.500/-ம் இதர விவசாயிகளுக்கு ரூ.1000/-ம் இத்துடன் ஆய்வு மற்றும் சான்றுக் கட்டணமாக ரூ.1000/- மற்றும் பயணக் கட்டணமாக ரூ.200/-ம் தனிநபர் பதிவிற்கு செலுத்த வேண்டும். குழுவாக பதிவு செய்வதற்கு பதிவுக்கட்டணமாக ரூ.5000/- ஆய்வு மற்றும் சான்றுக் கட்டணமாக ரூ.1000/-, பயணக்கட்டணமாக ரூ.200/-ம் செலுத்த வேண்டும். இதேபோல் வணிக நிறுவனங்கள் பதிவு செய்யக்கட்டணமாக ரூ.5000/-, ஆய்வு மற்றும் சான்றுக் கட்டணமாக ரூ.2000/-, பயணக்கட்டணமாக ரூ.400/- செலுத்த வேண்டும். அனைத்து வகை பயிர்களும் அங்ககச்சான்று  / ஆர்கானிக் சான்றிதழ் பெற தகுதியுடையவையாகும்.

 

ஆர்கானிக் சான்றிதழ் எப்படி பெறுவது

தர மேலாளர், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்குநரகம், கோவை 641 013. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், 1424ஏ, தடாகம் சாலை, கோவை – 641 013. தொலைபேசி எண். – 0422 2435080 நிகரி – 0422 2457554 மின்னஞ்சல் – tnocdcbe(at)gmail.com இணைய தளம் – www.tnocd.com

விரிவாக்கம்

தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின்படியும் ஐஎஸ்ஓ 65 தரத்தின் அடிப்படையிலும் அங்ககச் சான்றளிப்பு வழங்கப்படுகிறது. அங்ககச்சான்றளிப்பு பணி கீழ்குறிப்பிட்ட வழிமுறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.

அங்ககச்சான்றுக்கு விண்ணப்பங்கள் ஏற்பு செய்தல் மற்றும் கூர்ந்தாய்வு செய்தல்
வயல் ஆய்வுகள்
அறுவடைக்கு பிந்தய நிலையில் ஆய்வுகள்.
மாதிரி எடுத்தலும் பகுப்பாய்வு செய்தலும்
சான்றளிப்பு வழங்குதல் விண்ணப்பங்கள் ஏற்பு/மறுப்பு தொடர்பான விபரம் உரிய உற்பத்தியாளருக்கு 10 தினங்களில் தெரிவிக்கப்படும்.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *