how to start new business in tamil

கொரோனா-விற்கு பிறகு என்ன சுயதொழில் தொடங்கலாம்

கொரோனா-விற்கு பிறகு என்ன சுயதொழில் தொடங்கலாம்: New Business Ideas in Tamil 2021 :

சிறுதொழில்முனைவோர்.காம் தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் பல நல்ல தகவல்களை வழங்கி வருகிறது. அதே வரிசையில் கொரோனா-விற்கு பிறகு அல்லது வரும் காலங்களில் அதிக தேவை மதிப்புள்ள தொழில்களை இங்கு வகைப்படுத்தி உள்ளோம். வெளிநாட்டு வாழ் உறவுகளுக்கு என இந்த இந்த சிறப்பு பதிவு. ஏனெனில் தற்போது உள்ள சூழ்நிலையில் இந்தியா திரும்பினாள் இந்த பதிவு அவர்களுக்கு சிறிய ஐடியா மற்றும் கொஞ்சம் தன்னம்பிக்கை அளிக்கும் என்று நம்புகிறோம்.


விவசாயிகளுக்கு இலவச டிராக்டர், பெறுவது எப்படி

பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்

 

இந்த தொழில்கள் குறைந்த முதலீட்டில் இருந்து நடுத்தர முதலீட்டில் ஆரம்பிக்கக் கூடிய தொழில்கள் ஆகும்.

சோலார் எனர்ஜி:
இன்று மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் அதிகம் தேவை உள்ள தொழில் மாற்று எரிசக்தி அல்லது இந்த சோலார் எனர்ஜி தொழில் ஆகும். இந்த தொழில் வகையில் வீடுகளுக்கு சோலார் எனர்ஜி அமைத்துக் கொடுப்பது அல்லது பெரிய அப்பார்ட்மெண்ட்களுக்கு நாமே சூரியசக்தி மின்சாரம் தயாரித்து விற்பனை செய்வது அல்லது ஜென்செட் அமைத்து மின்சாரம் விற்பனை செய்வது போன்ற தொழில்களுக்கு நல்ல எதிர்கால வாய்ப்புகள் உள்ளன.

இந்த தொழில்கள் சற்று அதிக முதலீடு தேவைப்படும் அதேபோல் இது சார்ந்த தொழில் நுட்பத்தை கற்று கொண்டு சர்வீசில் ஈடுபட்டால் மிகக் குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் பெற முடியும்.

 

இந்த தொழிலை பற்றி மேலும் அறிய அல்லது மெஷின்ஸ் / பொருள்கள் வாங்க / பயிற்சி பெற :

No.42/25, GEE GEE Complex,
IInd Floor,
(Indian Bank Upstairs),
Anna Salai,Chennai-600 002
044 28527579 / 28414736

இ பைக் ஏஜென்சி:

வருங்காலங்களில் சுற்றுப்புறத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்படும் e-bike எனப்படும் மின்சார இருசக்கர வாகன முகவர் வாய்ப்பு எடுத்தால் தங்கள் பகுதியில் அதிக விற்பனை செய்து அதிக வருமானம் பெற முடியும்.


5000 முதலீட்டில் நர்சரி சுயதொழில் இலாபம் மாதம் 25000

 

கிளீனிங் பொருள் தயாரிப்பு:

இந்தத் தொழில் மிக குறைந்த முதலீட்டில் தொடங்கலாம் மேலும் தங்களுக்கு தெரிந்திருக்கும், இதுவரை ஹேர் வாஷ் லிக்விட் ஹாண்ட் சானிட்டரி லிக்யூட் போட்டு கை கழுவாத மக்கள் இன்று அதை அதிகம் பயன்படுத்துவதை பார்த்திருப்பீர்கள்.

அதேபோல் வீட்டு உபகரணங்கள் ஆன தரையை சுத்தப்படுத்தும் லிக்யூட் மற்றும் டாய்லெட் சுத்தப்படுத்தும் லிக்யூட் போன்ற பொருள்களுக்கு விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ளது இதில் தாங்கள் கவனம் செலுத்த வேண்டியது பேக்கிங் செய்வதில் புதிய முயற்சிகளை கையாள வேண்டும்.

ஏனெனில் லோக்கலில் தயாரிக்கப்படும் பொருள்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கும் இதிலிருந்து நமது பொருள்களை தரத்திலும் பேக்கிங் வேறுபடுத்திக் காட்டினால் நல்ல விற்பனை வாய்ப்பை பெற முடியும்.

இந்த தொழிலை பற்றி மேலும் அறிய அல்லது இலவச பயிற்சி பெற :
தொடர்புக்கு –9488565617, 7708820505
இயக்குநர்
பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம்
பிள்ளையார்பட்டி

KRISHI VIGYAN KENDRA
Kundrakudi – 630 206
Sivagangai District, Tamil Nadu
Phone: 04577 – 264288 | Fax: 04577 – 264288

 

இந்த தொழிலை பற்றி மேலும் அறிய அல்லது மெஷின்ஸ் / பொருள்கள் வாங்க :
Guardian Anti Corrosives Private Limited
Ambattur, Chennai
08048763663

 

ஸ்பிரே பெயிண்டிங்:

வெளிநாட்டில் பணிபுரிந்து திரும்பும் தமிழ் உறவுகள் அனேக நபர்களுக்கு இந்த ஸ்பிரே பெயிண்டிங் தொழில்நுட்பம் நல்லாவே தெரியும். ஆனால் நமது நாட்டில் இந்த சேவை மிகக்குறைவாகவே உள்ளது. ஆகையால் ஸ்பிரே பெயிண்டிங் வீடுகளுக்கு அடித்து கொடுத்தும் அல்லது ஸ்பிரே பெயிண்டிங் மிஷின்கள் வாடகைக்கு விடுவதன் மூலமும் நல்ல வருமானம் பெற முடியும்.

இந்த தொழிலை பற்றி மேலும் அறிய அல்லது மெஷின்ஸ் / பொருள்கள் வாங்க :

BUVICO SPRAYING EQUIPMENTS
Mr. Vidhyakar N.
No: 63, Sulochana Nagar, Moulivakkam,
Porur, Chennai-600125.
Email: sales@buvicoairless.in
Mobile: +91 8807-888818 / 8807-888848

கிளினிங் சர்வீஸ்:
சுத்தத்தின் முக்கியத்துவம் இந்த கொரோனா காலத்தில் அனைவருமே அறிந்து இருப்பார்கள்.. பெரும்பாலும் பெரிய நகரங்களில் உள்ள டாய்லெட் கிளீனிங் பாத்ரூம் கிளீனிங் போன்ற சர்வீஸ் சிறிய நகரங்கள் மற்றும் மக்கள் தொகை குறைந்த ஊர்களில் இந்தத் தொழிலில் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை.

இந்த தொழில் தொடங்குவதற்கு ஹை பிரஷர் வாஷிங் மெஷின் இருந்தாலே இந்த தொழிலை மிகக் குறைந்த முதலீட்டில் தொடங்கி மிகப் பெரிய வருமானம் பெற முடியும். உதாரணமாக பேங்க் கல்லூரி பெரிய தொழிற்சாலைகள் பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளில் அதிக அளவு ஆர்டர் பெறமுடியும். ஹை பிரஷர் வாஷிங்மெஷினை பற்றி வெளிநாட்டில் பணிபுரிந்து இந்தியா திரும்பும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

கைவினை பொருள்கள் தயாரிப்பு:

இந்த தொழிலுக்கு உலகம் முழுவதும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது கைகளால் தயாரிக்கப்பட்ட மூங்கில் கூடை பொம்மைகள் மற்றும் மண்பாண்ட பொருட்கள் உலக அளவில் தேவை அதிகமாக உள்ளது. இந்தத் தொழிலில் தயாரிப்பு அல்லது விற்பனை அல்லது தயாரிப்பு விற்பனை இரண்டிலுமே ஈடுபட்டால் நல்ல வருமானம் பெற முடியும்.

இந்த தொழிலை பற்றி மேலும் அறிய அல்லது இலவச பயிற்சி பெற :
தொடர்புக்கு –9488565617, 7708820505
இயக்குநர்
பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம்
பிள்ளையார்பட்டி

KRISHI VIGYAN KENDRA
Kundrakudi – 630 206
Sivagangai District, Tamil Nadu
Phone: 04577 – 264288 | Fax: 04577 – 264288


சிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி?

டிராப்ஷிப்பிங்:

டிராப்ஷிப்பிங் எனப்படுவது இணைய தளத்தின் வழியே பொருட்களை விற்பனை செய்யும் ஓர் முறையாகும். இந்த தொழிலை கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு இருந்தால் அல்லது கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் இருந்தால் மிக மிக குறைந்த முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கி உலகம் முழுவதும் பொருள்களை விற்று வருமானம் பெற முடியும்.

இந்த தொழில் எப்படி செயல்படும் என்றால் பெரிய நிறுவனங்கள் தங்கள் பொருட்களை உங்கள் இணையதளத்தின் மூலம் விற்பனை செய்யும் இதற்கு தேவையான இணையதளதை அவர்களை தருவார்கள். தங்களுக்குத் தேவையான பொருட்களை அந்த இணையதளத்தில் இருந்து உங்கள் இணையதளத்தில் நீங்கள் சேர்த்துக்கொள்ள முடியும், உதாரணமாக ஒரு டீ-சர்ட் அந்த இணையதளத்தின் வழியே பத்து ரூபாய் என்றால் உங்கள் இணையதளத்தின் மூலம் 30 ரூபாய்க்கு விற்பனை நடக்கும் மேலும் டெலிவரி பேக்கிங் போன்றவற்றை அந்த நிறுவனமே பார்த்துக்கொள்ளும்.

இதில் தாங்கள் செய்ய வேண்டியது உங்கள் இணையதளத்தை பிரபலப்படுத்தும் விளம்பரப் படுத்துவது மட்டுமே.

இன்று இணையத்தில் விற்பனை பெருகி வரும் இந்தக் காலத்தில் மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தொழிலுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த தொழிலை பற்றி மேலும் அறிய
7867834566

பிளாக்கிங் :
இந்த முறை இணையம் அனைவருக்கும் தெரிந்த தொழில் முறையாக ஆகும். தங்களுக்கு தெரிந்த அல்லது மக்கள் தெரிந்துகொள்ள ஆர்வமா இருக்கும் ஒரு துறையை பற்றியோ அல்லது பல துறையை பற்றியோ தேவையான கருத்துக்களை தங்களது இணையத்தின் வழியாக பதிவு செய்வது ஆகும்.

இன்று கூகுள் தமிழ் வழி இணையத்திற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைக்கப் படுகிறது. இதன் மூலமும் நல்ல வருமானம் பெற முடியும். மேலும் ஒரு மாவட்டத்திற்கு என்ன ஒரு இணைய தளம் ஆரம்பித்து அந்த மாவட்ட செய்திகள் அழகுக் குறிப்புகள் மருத்துவ குறிப்புகள் போன்றவற்றை பதிவு செய்வதன் மூலமும் உள்ளூர் விளம்பரம் மற்றும் கூகிள் விளம்பரம் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

இந்த தொழிலை பற்றி மேலும் அறிய
7867834566

இணையதள அங்காடி:
என்னதான் அமேசன் போன்ற மிகப்பெரிய இணையங்கள் வளர்ந்திருந்தாலும் புதிய ஐடியாக்கள் உடன் வரும் புதிய மின் வணிக கடைகளும் சாதிக்க முடியும். உதாரணமாக தங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்களை தங்கள் இணையத்தின் மூலமாக குறைந்த விலையில் விற்பனை செய்வதன் மூலமாக அல்லது நேரடியாக விற்பனை செய்வதன் மூலமாக அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று அதிக வருமானம் பெற முடியும்.

இந்த தொழிலை தொடங்க கொஞ்சம் தொழில்நுட்ப அறிவும் அல்லது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே மிகக் குறைந்த முதலீட்டில் இந்தத் தொழிலை தொடங்க முடியும் தொடங்கி நல்ல வருமானம் பெற முடியும்.

இந்த தொழிலை பற்றி மேலும் அறிய
7867834566

மற்றும் கோழிப் பண்ணை முயல் பண்ணை காடை பண்ணை பால் பண்ணை போன்ற உணவு சார்ந்த தொழில்களுக்கும் நல்ல வாய்ப்புள்ளது இதற்கு அரசாங்கமும் கடன் மற்றும் மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது.


மேலே உள்ள தொடர்பு முகவரிகளை தொடர்பு கொள்வது தங்களது விருப்பம். வாங்குவோர் மற்றும் விற்பவருக்கு இடையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாமும் நமது இணையமும் பொறுப்பாகாது.

தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய விவரங்களை கீழே உள்ள நமது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். siruthozhilmunaivor@gmail.com 

 


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி