How to apply needs loan in Tamil

வேளாண் கடன் வழங்கும் இந்திய நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள்

1970

வேளாண் கடன் வழங்கும் இந்திய நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் : Agriculture loan details in Tamil

வேளாண் கடன் வழங்கும் இந்திய வங்கிகள்

வங்கிகளின் தேசியமயமாக்கல் என்பது, வேளாண்மையை பிரதானத் தொழிலாகக் கொண்ட பல்வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதார மண்டலங்களுக்கு கடன்வசதி செய்து தருவதற்கான சிறந்த நடவடிக்கையாகும். ஆற்றல் வாய்ந்த வளர்ந்துவரும் வேளாண் துறைக்கு, அதன் எல்லாவித வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்கு வங்கிகள் மூலம் போதுமான நிதி தேவைப்படுகிறது. 05 லிருந்து தொடங்கும் மூன்று வருடங்களுக்கு, வேளாண்துறைக்கான கடனை இரட்டிப்பாக்கும்படி இந்த வங்கிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், அரசு விவசாயத்திற்கு அளித்துள்ள சிறப்பு கவனம் மற்றும் நிதி ஒதிக்கீடு, இவற்றுடன் வங்கிகளால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பயன்களைப் பெறுவது இப்போது விவசாயிகளின் கையில்தான் உள்ளது. பின்வருபவை, சில தேசியமமாக்கப்பட்ட வங்களின் கடன் வாய்ப்புகளின் பட்டியலாகும்.

 

ஆந்திரா வங்கி(www.andhrabank.in)

ஆந்திர வங்கியின் கிசான் பச்சை அட்டை
தனிமனித விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு

 

பரோடாவங்கி(www.bankofbaroda.com )

மானாவாரி விவசாயத்திற்கு பழைய டிராக்டர்களை வாங்குதல்
வேளாண் மற்றும் கால்நடை இடுபொருட்கள் வழங்கும் முகவர்கள்/ விநியோகஸ்தர்கள்/ விற்பனையாளர்களுக்கான நடப்பு முதலீடு
வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளுதல்
தோட்டக்கலை வளர்ச்சி
கறவை மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு நடப்பு முதலீடு
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வேளாண் உபகரணங்கள், கருவிகள், உழவு மாடுகள் வாங்குவதற்ககும், நீர்ப்பசானவசதிகளை உருவாக்குவதற்குமான நிதி உதவி.

 

பாங்க் ஆப் இந்தியா (www.bankofindia.com)

ஸ்டார் பூமீஹீன் கிஸான் அட்டை – கூட்டு முறையில் விவசாயம் செய்வோர், எழுத்தின் படி மற்றும் எழுத்து மூலமற்ற குத்தைதாரர்கள் ஆகியோருக்கு
கிஸான் சமாதான் அட்டை – பயிர் சாகுபடி மற்றும் அதை சார்ந்த இதர முதலீடுகளுக்கு
பி.ஓ.ஐ. ஷதாப்தி கிருஷி விகாஸ் அட்டை – விவசாயிகளுக்கான எந்நேரமும் எவ்விடத்திலுமான மின்னணு வங்கி அட்டை
வீரிய ஒட்டு விதை உற்பத்தி, பருத்தி ஆலை, சர்க்கரை ஆலை ஆகியவற்றிற்கு ஓப்பந்த வேளாண்மைக்கான நிதி உதவி
சுய உதவிக்குழுக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிருக்கான சிறப்புத் திட்டங்கள்.
ஸ்டார் ஸ்வராஜ்கர் பிரஷிக்ஷன் சன்ஸ்தான்விவசாயிகளுக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்குவதற்கான ஒரு புதிய முயற்சி
பயிர்க் கடன்கள் – மூன்று லட்சம் வரை (வருடத்திற்கு ஏழு சதவீத வட்டியில்)
பிணை உத்தரவாதம்: 50000 ரூபாய் வரை, பிணை உத்தரவாதம் எதுவும் தேவையில்லை. ஆனால் 50000 ரூபாய்க்கு மேல், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் கடைபிடிக்கப்படும்.

 

தேனாவங்கி (www.denabank.com)

தேனா குஜராத், மகாராஷ்ரா, சட்டீஸ்கர் மற்றும் யாத்ராவின் யு.டி. மற்றும் நகர் ஹாவேலி ஆகியற்றில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் வங்கி தேனா வங்கியாகும்.

தேனா கிஸான் தங்கக்கடன் அட்டைத் திட்டம்
அதிகபட்சம் பத்துலட்சம் ரூபாய்வரை கடன் அளிக்கப்படும்
குழந்தைகளின் கல்வி உட்பட வீட்டுச் செலவுகளுக்காக பத்து சதவீதம்வரை அளிக்கப்படும்
ஒன்பது வருடம்வரை திருப்பிச் செலுத்த நீண்ட கால அவகாசம்
வேளாண் உபகரணங்கள், டிராக்டர்கள், நீர்தெளிப்பு/ சொட்டுநீர் பாசனமுறைகள், மின்சார பம்ப் செட்டுகள் போன்ற எல்லா விதமான வேளாண் முதலீட்டிற்கும் கடன் கிடைக்கும்
ஏழு சதவீத வட்டியில் மூன்று லட்சம் ரூபாய்வரை குறுகிய காலப் பயிர்க் கடன்
விண்ணப்பபித்த பதினைந்து நாட்களுக்குள் கடன்கள் வழங்கப்படும்
50000 ரூபாய் வரையிலான வேளாண் கடன் மற்றும் வேளாண் ஆலோசனை மையம், வேளாண் வர்த்தக மையங்களுக்கான கடனுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலும் பணய உத்தரவாதம் தேவையில்லை

 

ஒரியண்டல் காமர்ஸ்வங்கி (www.obcindia.co.in)

ஓரியண்ட்ல் பச்சை அட்டைத் திட்டம்
வேளாண் கடன்களுக்கான ஒருங்கிணைந்த கடன் திட்டம்
குளிர்பதன அறைகள் / பண்டக சாலைகள் நிறுவுதல்
முகவர்களுக்கான நிதி உதவி

 

இந்திய ஸ்டேட் வங்கி (www.statebankofindia.com )

பயிர்க் கடன் திட்டம்
சொந்த நிலத்தில் தயாரித்தவற்றைப் பாதுகாத்துவைத்தல் மற்றும் அடுத்த பருவகாலத்திற்கான கடன்களைப் புதுப்பித்தல்.
கிஸான் கடன் அட்டை திட்டம்
நில மேம்பாட்டுத் திட்டம்
குறு நீர்ப்பாசனத் திட்டம்
ஒருங்கிணைந்த அறுவடைக்கான இயந்திரங்கள் வாங்குதல்
கிஸான் தங்க அட்டை திட்டம்
கிருஷி ப்ளஸ் திட்டம் – கிராமப்புற இளைஞர்களுக்கு தேவைக்கேற்ப்ப டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க
பிராய்லர் ப்ளஸ் திட்டம் – கோழி வளர்ப்பு
முன்னோடி வங்கித் திட்டம்

 

சிண்டிகேட்வங்கி (www.syndicatebank.com)

சிண்டிகேட் கிஸான் கடன் அட்டை
சூரிய அடுப்பு திட்டம்
வேளாண் ஆலோசனை மையம மற்றும் வேளாண் வியாரபார மையங்கள்

 

விஜயா வங்கி (www.vijayabank.com)

சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள்
விஜயா கிஸான் அட்டை
விஜயா பிளான்டர்ஸ் அட்டை
கிராமத் தொழிற்சாலைகள் மற்றும் கைவினை கஞைர்களுக்கான கே.வி.ஐ.சி. திட்டம்

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *