ஹைட்ரோபோனிக்ஸ்

தோட்டக்கலைத் துறை மானியம் 2022-23 – உடனே விண்ணப்பம் செய்க

241

தோட்டக்கலைத் துறை மானியம் – உடனே விண்ணப்பம் செய்க

மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் தொடர்ந்து விவசாயத்திற்கென பல்வேறு மானியத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தோட்டக்கலையில் மானியம் வழங்கப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தோட்டக்கலைத் துறை மானியம்

தோட்டக்கலையில் மானியம் வழங்கப்படுவது தொடர்பாக கோவை துணை இயக்குநர் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது விவசாயிகளுக்குப் பெரிதும் பலன் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் விரிவான தகவல்கள் இப்பதிவில் பின்வரும் பத்திகளில் கொடுக்கப்படுகின்றன.

2022-23ஆம் நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களிலும் இணையதளம் வழியாகப் பதிவு செய்த விவசாயிகளுக்கே மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி tnhorticulture.tn.gov.in/tnhortnet எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைதள முகவரியில் முறைப்படி பதிவு செய்து விவசாயிகள் பயன் அடையலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தாங்களாகப் பதிவு செய்ய தெரியாத மற்றும் இயலாத விவசாயிகள் அவரவர் வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகிப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள்

 • ஆதார் எண்
 • விவசாயி பெயர்
 • கைபேசி எண்
 • மாவட்டம்
 • வட்டம்
 • கிராமம்
 • வீட்டு முகவரி
 • அஞ்சல் குறியீடு

செயல்படுத்தப்படும் திட்டங்கள்

 • தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM)
 • தேசிய விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (NADP)
 • நிலையான விவசாயத்திற்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பரப்பு மேம்பாடு (RAD
 • ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் (IHDS)
 • தேசிய மூங்கில் இயக்கம் (NBM)
 • தேசிய ஆயுஷ் இயக்கம் (NAM)
 • தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் (TNIAMP) முதலான திட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

செயல்முறை

 • இவற்றில் விவசாயியகள் தங்களுக்கு உரிய திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • திட்ட இனம், உப இனம், முன்மொழியப்பட்ட பயிர், தேவையான அளவு (சாகுபடி பரப்பு) ஆகியனவற்றைப் பூர்த்திச் செய்தல் வேண்டும்.
 • விண்ணப்பத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து Submit செய்தல் வேண்டும்.
 • அடுத்ததாக, பதிவு தொடர்பான எஸ்.எம்.எஸ் மொபைல் எண்ணிற்கு வரும்.
 • அடுத்த சில வாரங்களில் மானியம் கிடைப்பதற்கான வழிமுறைகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published.