மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள்

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள்: how to earn money from facebook tamil

பேஸ்புக் பற்றி தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பேஸ்புக்கில் செலவிடும் கோடிக்கணக்கான நபர்கள் உலகமெங்கும் உள்ளனர். சிலருக்கு பேஸ்புக்கில் பதிவிடப்படும் வீடியோக்கள், செய்திகள், மீம்ஸ்களை பார்ப்பது பொழுதுபோக்காக உள்ளது.

பொதுவாக நாம் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்துகிறோம்? எதற்காக பயன்படுத்துகிறோம்? சற்று யோசித்துப் பாருங்கள்… நம் செல்ஃபி புகைப்படத்தை நண்பர்களிடம் பகிரவோ அல்லது சுவாரஸ்யமாக செய்திகளை பொதுமக்களிடம் பகிரவோ அல்லது நமது சந்தோஷமான தருணங்களை வெளிக்காட்டிக் கொள்ளவோ பயன்படுத்தி வருகிறோம்.

ஆன்லைனில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆனால் ஃபேஸ்புக் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், நிச்சியம் முடியும்!

இதில் பல வழிகள் உள்ளது. எந்த முதலீடும் இன்றி (உங்கள் நேரமும் உழைப்பும் அவசியம் தேவை) பேஸ்புக்கில் சம்பாதிக்க சிறந்த வழிகளை உங்களுக்காக இங்கு கூறுகிறேன்.

இதன் மூலம் பகுதி நேரமாக கூட நீங்கள் சம்பாதிக்கலாம்.

பேஸ்புக் பக்கம் (Facebook Page) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

இந்தியாவில் பேஸ்புக் பக்கம் மூலமாகவே லட்சக்கணக்காக சம்பாதித்த பல பேரை உதாரணமாக கூறலாம்.

முதலில், இதற்கென்று தனியாக நீங்கள் பேஸ்புக்கில் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அதன்பிறகு, உங்களுக்கு நங்கு தெரிந்த, பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். (உதாரணம்: கிரிக்கெட், சினிமா, அரசியல்). இது தான் மிகவும் முக்கியம்.

தொடர்ந்து உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த துறை தொடர்பான சுவாரஸ்யமான உள்ளடக்கங்களை (Content) பதிவிட வேண்டும். அப்போது தான் பலர் உங்கள் பக்கத்தை விரும்பி பின் தொடர்வார்கள்.

நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு உள்ளடக்கமும் மற்றவர்கள் பகிரும்படியாக இருக்க வேண்டும். அது வீடியோவாகவோ அல்லது மீம்ஸாக கூட இருக்கலாம்.


ஒரு இல்லத்தரசியாக எப்படி பணம் சம்பாதிக்கலாம்

Affiliate Marketing

உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி, அதிக பாலோயர்ஸ் (Followers) பெற்ற பிறகு, Amazon, ShareAsale, Clickbank, Cuelinks போன்ற பிரபலமான தளங்களில் விண்ணப்பித்து அஃப்ளியேட் மார்கெட்டிங் (Affiliate Marketing) மூலம் பணம் ஈட்டலாம்.

அதாவது உங்கள் பேஸ்புக் பக்கத்தின் மூலம் பொருட்களை சலுகை விலையில் விற்று, அதன் மூலம் கமிஷன் தொகை பெறலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பேஸ்புக் பேஜில் உள்ள Offers பகுதியில் நீங்கள் பதிவு செய்துள்ள இ-காமர்ஸ் தளத்தின் (Amazon, Flipkart, Cuelinks) லின்க்கை பதிவிடுவது மட்டும் தான்.


நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்

உங்கள் பேஜிற்கு வரும் ஒருவர், இந்த லின்க்கை கிளிக் செய்து அதிலுள்ள பொருட்களை வாங்கினால் அதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும். ஒருவேளை அவர் லின்க்கை கிளிக் செய்து பொருட்கள் ஏதும் வாங்காவிட்டால் உங்களுக்கு பணம் கிடைக்காது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

Sponsored Post

அடுத்து, உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் எந்த ஒரு பிராண்டையாவது (Brand) பிரபலபடுத்த பணம் வாங்கி கொண்டு (Sponsered Post) பதிவு போடலாம். உங்கள் பேஜ் எந்தளவிற்கு பிரபலமோ அந்தளவிற்கு உங்களை தேடி பல பிராண்டுகள் வரும்.

உதாரணத்திற்கு, உங்கள் ஊரில் சிறிய குளிர்பான நிறுவனம் ஒன்று இருக்கிறது. டிவியிலோ அல்லது நியூஸ் பேப்பரிலோ விளம்பரம் செய்ய நிறைய தொகை ஆகும் என்பதால் தங்களது பிராண்டை பிரபலபடுத்த வேறு வழி தேடிக் கொண்டிருகிறது அந்த நிறுவனம்.

அப்போது ஒரு லட்சம் பாலோயர்ஸ் கொண்ட உங்கள் ஃபேஸ்புக் பேஜ் அவர்கள் கன்ணில் படுகிறது. உங்களிடம் வந்து, எங்களுடைய பிராண்டை பற்றி உங்கள் பக்கத்தில் பதிவு போட எவ்வுளவு தொகை ஆகும் என அவர்களே கேட்பார்கள். இதை சரியாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது உங்கள் கையில் தான் உள்ளது.

பேஸ்புக் பக்கத்தை நல்ல தொகைக்கு விற்பது

நீங்கள் இரண்டு வருடமாக கிரிக்கெட் தொடர்பான ஒரு பேஸ்புக் பேஜை நடத்தி வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பேஜை 10 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

கிரிக்கெட் பேட், பந்து, கிளவுஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் பேஸ்புக் பேஜ் ஒன்றை தொடங்க முடிவெடுக்கிறது. புதிய பேஜ் தொடங்கி பாலோயர்ஸ்களை பெறுவது மிக கடினம். ஆகையால் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் ஒரு பேஜை வாங்கினால் எளிதில் தனது பொருளை விற்பனை செய்யலாம் என்பது அந்த நிறுவனத்திற்கு தெரியும்.

இதனால் கிரிக்கெட் தொடர்பான பேஜ் ஏதாவது நல்ல தொகைக்கு வந்தால் விலைக்கு வாங்கும் முடிவில் இருக்கிறது அந்த நிறுவனம். இது சமந்தமாக பேஸ்புக்கில் விளம்பரமும் செய்கிறது.

இதை பார்க்கும் நீங்கள், உங்கள் பேஜை நல்ல தொகைக்கு விற்பனை செய்து இருந்த இடத்திலிருந்தே சம்பாதிக்கலாம். ஆனால் உங்கள் பேஜ் எத்தனை Likes பெற்றுள்ளதோ, அதைப் பொருத்தே உங்கள் தொகை கணக்கிடப்படும்.

இதுபோல் பேஸ்புக்கில் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. எனக்கு தெரிந்த சில வழிகளை இங்கு கூறியுள்ளேன்.

நன்றி:
மாவடிராஜா
கேமிங் உலகம்


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி


Comments

One response to “பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள்”

  1. […] முகநூல் மூலம் வருமானம் பெறுவது எப்பட… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *