சாவி 1

டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்

4296

டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம் Suya Thozhil :

நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழுக்காக, கோவையை சார்ந்த சக்தி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் திரு. கிரிராஜா அவர்கள் டுப்ளிகாட் சாவி தயாரிப்பு தொழிலுக்கு உள்ள வாய்ப்பு மற்றும் தேவைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டதை இங்கு பதிவு செய்து உள்ளோம்.

இன்று வளர்ந்து வரும் நகர சுழலில் துணை சாவி எனப்படும், டுப்ளிகாட் சாவிக்கு அதிக தேவை உள்ளது, ஏன்னெனில், ஒரே அறையில் 5 துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்கும் சுழல் உள்ளது . மேலும் அவர்களின் வேலை நேரம் மாறு படும் . எனவே அவர்கள் அறைக்கு வந்து போகும் நேரமும் மாறுபடும், ஆகையால் அனைவர்க்கும் ஒவ்வொரு சாவி தேவை. மேலும் புதிய பூட்டு வாங்கும் போது 3 சாவிகள் மட்டுமே தரப்படும். எனவே அதிக சாவி தேவையெனில், டுப்ளிகாட் சாவிதான் செய்ய வேண்டும்.
மேலும் சாவிகள் தொலைந்து போவதால், முன்னதாகவே டுப்ளிகாட் சாவிகள் தயாரித்து வைத்து கொள்ளுதல், போன்ற காரணங்களால் டுப்ளிகாட் சாவி தயாரிப்பு நல்ல இலாபம் தரும் ஓர் தொழிலாக வளர்ந்து வருகிறது.
[su_highlight]யாருக்கு ஏற்ற தொழில் : முன்னதாக எதாவது ஓர் கடை வைத்து உள்ளவர்கள், இதை ஓர் துணை தொழிலாக செய்தால் மிக நன்று. புதிதாக, தனியாக பெரு நகரங்களில் செய்ய ஏற்றது. ஆனால், உங்களுக்கு எல்லா வகையான சாவிகளும் செய்ய தெரிந்து இருக்க வேண்டும். மேலும் மகளிர்க்கு ஏற்ற தொழில்களில் இதுவும் ஒன்று.[/su_highlight]
முதலீடு :
வாகனகளுக்கு மட்டும் டுப்ளிகாட் சாவி செய்ய எந்திரம் ரூபாய் 25000 மற்றும் இதர செலவிற்கு 5000 வரை தேவைப்படும், அனைத்து வகையான டுப்ளிகாட் சாவிகளும் செய்ய மொத்த முதலீடு ரூபாய் 60000 வரை தேவை. இடம் என்று பார்த்தல் 5*5 சதுர அடிகள் போதும்.
இலாபம் :
நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 முதல், உங்களுக்கு தொழிலில் உள்ள ஈடுபாட்டை பொருத்து ரூபாய் 2000 வரை எளிதாக வருமானம் பெற முடியும். ஏன்னெனில் ஒரு சாவி தயாரிக்க செலவு ரூபாய் 10 மட்டுமே. ஆனால் நாம் வாங்குவது 60 முதல் 150 வரை. மேலும் இந்த தொழிலில் போட்டி குறைவு என்பதால் ஓர் சிறிய ஊரில் கூட தினமும் குறைந்தது ரூபாய் 500 என்பது எளிதாக வருமானம் பார்க்கலாம்.
குறிப்பு :
உங்களிடம் சாவி கேட்டு வரும் நபர்களிடம், அவர்களின் முவரி சான்று நகல் வாங்கி வைத்து கொள்வது நன்று. ஏன்னெனில், போலீஸ் சமந்தமாக ஏதாவது விசாரணை வந்தால் உதவும்.
இந்த தொழிலை பற்றி மேலும்  விவரம் அறிய :
திரு. கிரிராஜா அவர்கள்
சக்தி இண்டஸ்ட்ரீஸ்
கோவை.
தொலைபேசி : 9790006986
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *