SOLAR PUMP MANIYAM

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம்.

2012

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு மானியம் | solar pump subsidy in tamilnadu 2020

நிதி ஆதாரம்

மாநில அரசு நிதி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி மற்றும் மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை திட்டம் (MNRE).

திட்டப் பகுதி
அனைத்து மாவட்டங்கள் ( சென்னை நீங்கலாக)

நோக்கம்
வேளாண்மையில் வழக்கமான ஆற்றலுக்கு மாற்றாக உள்ள சுற்றுசூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல் (சூரிய ஆற்றல்)
விவசாயிகளுக்கு பாசனத்திற்கான எரிசக்தி பாதுகாப்பினை வழங்குதல்
விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல்

செயல்படுத்தப்படும் பணிகள்
பாசன வசதிக்காக சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை தனிப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குதல்.

மானியங்களும் சலுகைகளும்
2019-20 ஆம் ஆண்டுக்கான மானியம் 70 சதவீதம் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை 30 சதவீதம் மற்றும் மாநிலம் 40 சதவீதம்) விவசாயிகளின் பங்களிப்பு 30 சதவீதம்

மின்கட்டமைப்பு சாராத தனித்தியங்கும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பினை பெற விரும்பும் விவசாயிகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) மூலம் இலவச மின் இணைப்புக்கோரி ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தால் அவர்களுடைய மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை (normal priority) வரும்பொழுது சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளலாம்.

தகுதி
பாசன ஆதாரங்களுடன் (ஆழ்குழாய் கிணறு / திறந்தவெளி கிணறு / தரைநிலை நீர் தொட்டி) அமைந்துள்ள விவசாய நிலங்களைக் கொண்ட அனைத்து விவசாயிகள், பாசன ஆதாரத்தின் அருகில் சூரிய தகடுகள் நிறுவிட ஏதுவாக நிழலில்லா பரப்பு அமைத்திருக்க வேண்டும்.

திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம்

நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.

அணுக வேண்டிய அலுவலர்

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)
மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

Keywords: solar pump subsidy in tamilnadu 2020, how to apply solar subsidy for agriculture in tamilnadu, borewell subsidy in tamilnadu, agriculture subsidy in tamilnadu 2020 in tamil, agriculture schemes in tamilnadu in tamil

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com

மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *