management tips in tamil

வீட்டிலிருந்து சம்பாதிக்க சிறந்த வழிகள்

வீட்டிலிருந்து சம்பாதிக்க சிறந்த வழிகள்: how to earn money from home in tamil:

சிறந்தது மட்டுமல்ல எளிமையான வழி ஒன்றைக் கூறுகிறேன்:

மூன்று அல்லது நான்கு விதமான உணவுவகைகள் – புளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் என நாள்தோறும் தயாரித்து விற்கலாம்.

வாடிக்கையாளர்கள்:

உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள மணமாகாதோர் (bachelors).

விடுதியில் தங்கியிருப்போர். அவர்களால் சமைக்க முடியாது; நாள்தோறும் உணவகங்களிலும் சாப்பிட முடியாது.

அருகிலுள்ள சிறிய அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள். எல்லா நாட்களிலும் அவர்களால் உணவு கொண்டுவர முடியாது.

சென்னை போன்ற பெருநகரங்களில், ஐ.டி.யில் இரவு நேரங்களில் வேலை செய்யும் ஆண்கள், பெண்கள்.

ஒரேயொருவர் நாளொன்றுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்தால் போதும். உணவு தயாரிப்பதற்கு 2 – 3 மணி நேரமும், அதை ஒவ்வொருவரிடமும் விநியோகிப்பதற்கு 2 மணி நேரமும் என்று கணக்கிடுங்கள்.

நாளொன்றுக்கு சுமார் 100 பேருக்கு உணவு தயாரித்து விற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஓர் ஆளுக்கு 10 ரூபாய் லாபம் (இது மிகவும் குறைவான கணக்கே) என்று கொண்டாலும், 1000 ரூபாய் சம்பாதிக்கலாம். சனி, ஞாயிறு விடுமுறை எடுத்துக்கொண்டாலும் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிக்க முடியும்.

நன்றாக யோசியுங்கள்: மற்றவர்களின் நேரமின்மையை முதலீடாகக் கொண்டால், மிகச் சாதாரணமாக 20,000 ரூபாய் சம்பாதிக்க முடியும்.

நன்றி quora-வில் இருந்து :
கார்த்திக் சரவணன்,
Accountant at Chennai

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி