ld1526

வீடு கட்ட மானியம்…

3730

வீடு கட்ட மானியம்… ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

வீடு கட்ட மானியம்… ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? Housing subsidy … How to apply online?

மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மானியம் வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பிப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Housing subsidy … How to apply online?

வீட்டு வசதித் திட்டம்!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது 2015ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். மலிவு விலையில் வீடுகளைக் கட்டித் தருவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டி முடிக்க இத்திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இத்திட்டம் வழங்குகிறது. இந்தத் திட்டம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் PMAY Urban மற்றும் PMAY Gramin என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்குத் தகுதி பெற்றிருந்தால் இத்திட்டத்தின் http://pmaymis.gov.in. என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செல்லவும்.

மெயின் மெனுவின் கீழ் உள்ள ‘Citizen Assessment’ என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பதாரர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

அதன் பின்னர் வரும் திரையில் உங்களது ஆதார் விவரங்களைப் பதிவிட வேண்டும். உங்களது தனிப்பட்ட விவரங்கள், வருமானம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய குடியிருப்பு முகவரியுடன் ஆன்லைன் PMAY விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு விவரங்களைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்கவும்.

உங்களது விண்ணப்ப நிலவரத்தை Track your Assessment Status என்ற வசதியில் சென்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

நேரடியாக விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாவிட்டால், நேரடியாக எவ்வாறு விண்ணப்பிப்பது பார்க்கலாம். மாநில அரசுகள் நடத்தும் பொதுச் சேவை மையத்தைப் பார்வையிட்டு விண்ணப்பப் படிவத்தை ஜிஎஸ்டி மற்றும் ரூ.25 கொடுத்து நிரப்பவும். ஆஃப்லைன் PMAY விண்ணப்பங்களை ஏற்க எந்த தனியார் மையங்களும் வங்கிகளும் அனுமதிக்கப்படவில்லை.

Source – Samayam




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *