பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

தரிசு நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்ற ரூபாய் 18000/- மானியம்

தரிசு நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்ற ரூபாய் 18000/- மானியம் | விவசாய மானியம் 2020

அனைத்து மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. உடனே விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வேளாண்விரிவாக்க மையத்தை அணுகவும்.பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தரிசாக உள்ள நிலங்களை மேம்படுத்தி பயிர் சாகுபடி மேற்கொள்வதற்க்கு விவசாயிகளுக்கு 50% சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயலபடுத்தபடுகிறது.

ஒரு கிராமத்தில் குறைந்தபட்ச தொகுப்பாக 10 ஹெக்டர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா அடங்கள் மற்றும் ஐந்து ஆண்டுக்கு மேல் தரிசு நிலங்களாக இருந்ததற்கான சான்றிதல் கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெற்று, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக்தில் வழங்கி பயன்பெறலாம்.

ரூபாய் 55000 முதலீட்டில் ஆடு வளர்ப்பு, மாதம் இலாபம் 13000

இந்த திட்டத்தின் கீழ் புதர்களை அகற்றுதல் நிலத்தை சமன்செய்தல் உழவு மற்றும் விதைப்பு செய்தல் பயிர் பாதுகாப்பு போன்ற பணிகளுக்கு பின்னேற்ப்பு மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் விதைகள் உயிர் உரங்கள் நுண்ணூட்ட சத்துக்கள் ஆகியவற்றை வேளாண் விரிவாக்க மையம் மூலம் வழங்கப்படும்.ஒரு விவசாயிகளுக்கு அதிகபடியாக 2 ஹெக்டர் வரை மானியம் வழங்கப்படும்.

 

இந்த திட்டத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி பயிர் சாகுபடி செய்வதற்க்கு எண்ணை வித்து பயிர்களான நிலக்கடலைக்கு ஒருஹெக்டருக்கு ரூபாய் 18000 ஆயிரம்.எள் பயிருக்கு ரூபாய் 10000 ஆயிரம் சிறுதானிய பயிர் சாகுபடிக்கு ரூபாய் 10000 ஆயிரம்.மற்றும் பயிறு வகை சாகுபடிக்கு ரூபாய் 9250 வீதம் 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வேளாண்விரிவாக்க மையத்தை அணுகலாம்.

 

Keywords: விவசாய மானியம் 2020, விவசாய மானியம், விவசாயம் அரசு மானியம் 2020, கிணறு வெட்ட மானியம் 2020, அரசு விவசாய மானியம், அரசு மானியம் பெற, உழவு மானியம், மத்திய அரசின் விவசாய திட்டங்கள்

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி