தந்திரங்கள் scaled

பொதுமக்கள் அறியாத அளவில் நிறுவனங்கள் செய்யும் வியாபாரத் தந்திரங்கள்

வியாபாரத் தந்திரங்கள்:

நிறுவனங்கள் நுகர்வுப் பொருள்கள் தயாரிக்கும் செலவு, தொழிலாளர்கள் சம்பள உயர்வு, போக்குவரத்து வரத்து செலவினங்கள் என அவ்வப்போது, கூடிக்கொண்டே போகும்.

அதற்கேற்ப பொருள்களின் விலையைக் கூட்ட வேண்டும்.

விலையை அடிக்கடி கூட்டினால் , வாடிக்கையாளர்கள், வேறு பிராண்டுக்கு மாறிவிடுவார்கள் .

ஒருசிலர் வேண்டுமானால், விலை கூடினாலும் அதே பிராண்டுகளை மட்டும் விரும்புவார்கள். பெரும்பாலானவர்கள் விலையேற்றத்தை விரும்புவதில்லை. வேறு பிராண்டுக்கு மாறவே விரும்புவார்கள்.

அதே விலையை வைத்தால், நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.

அதனால், வியாபார நிறுவனங்கள் ஒரு தந்திரத்தைக் கையாளும்.

தாங்கள் ஏற்கனவே தயாரிக்கும் பொருளையே புதிய வடிவில் பேவரட்டாக அறிவிக்கும். அதில் , விலையை கூட்டுவதற்குப் பதில் சிறிதளவு எடையை மட்டும் குறைத்து விடுவார்கள். வெளியில் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு வித்தியாசம் ஒன்றும் தெரியாது.

உதாரணத்திற்கு கோல்கேட் பற்பசையில் பல வகைகளைப் பாருங்கள்

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி