கோடை உழவுக்கு ரூ.500 மானியம்

கோடை உழவுக்கு ரூ.500 மானியம்:

திண்டுக்கல், திண்டுக்கல்லில் கோடை உழவின் போது, கடைபிடிக்க வேண்டியவை குறித்து வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கோடை வெப்பத்தில் மண்அடியிலுள்ள ஈரம் ஆவியாகி வெளியேறிவிடும். இந்நிலையில் மேல் மண்ணை உழவு செய்து புழுதிப்படலமாக்கி விட்டால், அது போர்வையாக மாறி நிலத்தடியில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் தடுத்து விடும்.உழவில் மண் துகள்களாக்கப்படும் போது நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும்.

 

மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரித்து மண் வளம் பெருகும். கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் உள்ள கூட்டுப் புழுக்கள், உழவின் போது நிலத்தின் மேற்புறம் வந்துவிடும். அவற்றை பறவைகள் இரையாக்கிக் கொள்ளும்.கோடை உழவை சரிவுபகுதியில் குறுக்கே உழவு செய்ய வேண்டும். இதன் மூலம் மழைநீர் வழிந்தோடி மண் அரிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். துவரை போன்ற ஆழமான வேர் கொண்ட பயிர்களுக்கு 25–30 செ.மீ., ஆழ உழவும், சோளம் போன்ற மேலோட்டமான வேர் கொண்ட பயிர்களுக்கு 15–20 செ.மீ., ஆழ உழவும் அவசியம். மானாவாரி மேம்பாட்டு திட்டத்தில் கோடை உழவு செய்ய ஏக்கருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படுகிறது.

 

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி