வேளாண்மைச் சான்றிதழ்

ஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி?

1138
அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள்
 1. சான்றளிப்புக்கான பொதுவான விதிமுறைகள்
 2. சான்றளிப்புக்கான விண்ணப்ப படிவம்
 3. விண்ணப்படிவத்தை மதிப்பீடு செய்தல்
 4. ஆய்வுக்கான நேரத்தை அட்டவணையிடுதல்
 5. ஆய்வின் போது ஆவணங்களை சரிபார்த்தல்
 6. குழு சான்றளிப்பு வழிமுறைகள்
 7. சான்றளிப்பை தொடருதல்
 8. அங்கக சான்றளிப்புக்கான தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழிமுறைகள்

 1. சான்றளிப்புக்கான பொதுவான வழிமுறைகள்
 1. அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பதிவுசெய்தவர் இயங்க வேண்டும். அங்கக உற்பத்திக்கான தேசிய வழிமுறைகளின் படி நடக்க வேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை, அங்கக வேளாண் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, தேன், சேகரித்தல், பதப்படுத்துதல், பொதி கட்டுதல், சேமிப்பு, அட்டையிடுதல் மற்றும் போக்குவரத்துக்கான பொதுவான வழிமுறைகளை வழங்கியுள்ளது.
 2. அங்கக உற்பத்திக்கான திட்டத்தை ஆண்டுதோறும் தயாரித்து, அமல்படுத்தி, மேம்படுத்த வேண்டும். அதை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு வருடந்தோறும் அனுப்ப வேண்டும்.
 3. உற்பத்தி மற்றும் அதை கையாளும் முறை, அங்ககமில்லாத சான்று உற்பத்தி மற்றும் அதை கையாளும் முறை, பகுதிகள், அமைப்புகள் போன்றவற்றை அந்தந்த இடத்தில் அங்கக சான்றளிப்பு ஆய்வாளர்கள், தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை உயர் அதிகாரிகள், அபிடா அதிகாரிகளால் கள ஆய்வு செய்ய வேண்டும்.
 4. 5 வருடங்களுக்கு குறையாமல் உள்ள அங்கக செயல்முறைக்காக பராமரிக்க வேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் அங்கரிக்கப்பட்ட அலுவலர்கள், மாநில (அ) மத்திய அரசு அதிகாரிகளை பதிவேடுகளை வேலை நேரங்களில் மறு ஆய்வு செய்யவும், தேசிய அங்கக உற்பத்தி திட்டம் விதிகள் மற்றும் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
 5. குறிப்பிட்ட நேரத்திற்குள் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையால் விதிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.
 6. செயல்படுத்துபவர் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு தகவல் பின்வருவனவற்றை பற்றி தெரிவிக்க வேண்டும்.
 1. விண்ணப்பத்தில், உற்பத்தி பிரிவு, அமைந்துள்ள இடம், வசதிகள், கால்நடை(அ)ஏதாவது ஒரு பொருள் செயலில் உள்ளதா என்றும்
 2. சான்றளிப்பு செயல்களில் (அ) சான்றளிப்பு செயல்களின் ஏதாவது ஒரு பகுதியில் மாற்றம் ஏற்பட்டால், அது தேசிய அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகளின் வழிப்படி உற்பத்தி செய்யப்படுவது பாதிக்கப்படும்.

 1. சான்றளிப்புக்கான விண்ணப்ப படிவம்
  அங்கக உற்பத்தி செய்வதை பதிவு செய்யவதற்காக விண்ணப்பத்தை உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தில் பின்வரும் தகவல்கள் இடம் பெற வேண்டும்.
 1. அங்கக உற்பத்தி (அ) கையாளும் முறை திட்டம்
 2. விண்ணப்பத்தில் அனைத்து தகவல்களான பெயர், முகவரி, தகவல் பெறும் நபரின் விபரம், தொலைபேசி எண் போன்றவை இடம் வேண்டும்
 3. முன்பே விண்ணப்பம் அளித்தவர்களின்  பெயர் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
 4. வேறு ஏதாவது தகவல் இருந்தாலும் குறிப்பிட வேண்டும்.
 5. பதிவு கட்டணம், ஆய்வு கட்டணம் ஒரு முறை, பயணச் செலவு ஒரு முறை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையில் குறிப்பிடப்படும் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

3.விண்ணப்பத்தை மறு ஆய்வு செய்தல்
 1. விண்ணப்பத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
 2. எந்த தகவலாக இருந்தாலும் செயல்படுத்துபவருக்கு தெரிவிக்க வேண்டும். செயல்படுத்து பவரும் உடனடியாக தேவைப்படும் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
 3. கட்டணம் செலுத்தாத விண்ணப்பங்கள் மறு ஆய்வு செய்யப்படாது.
 4. தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையால் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுதல் தவிர்த்தல் போன்றவை முடிவு எடுக்கப்பட வேண்டும்.
 5. மறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் விண்ணப்பித்தவருக்கு திருப்பி அனுப்பப்படும்
 6. விண்ணப்பங்களுக்காக செலுத்தப்பட்ட கட்டணங்கள் திருப்பி தரப்படமாட்டாது
 7. பதிவிற்குப்பிறகு (அ) பதிவு செய்த விண்ணப்பத்தில் கள ஆய்வு பற்றி தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால் கட்டணம் மட்டும் திருப்பி தரப்படமாட்டாது.

4.ஆய்வை அட்டவணையிடுதல்
 1. முதல்கட்ட கள ஆய்வு நடைபெறும் நேரத்தை குறிக்க வேண்டும். நிலம், வசதிகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்யும்போது செயல்படுத்துபவர் அந்த அமைப்பை பற்றி விவரிக்க வேண்டும். பதிவு செய்த நாளிலிருந்து 6 மாதம் வரை முதல்கட்ட ஆய்வு தாமதிப்படலாம். அதனால் அங்கக உற்பத்தி செய்பவர்கள் அதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும்.
 2. அங்கக உற்பத்தி செய்பவர் முன்னிலையே கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வருடாந்திர ஆய்வு ஒரு முறையும், கூடுதலாக ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படும்.

5.ஆய்வின் போது ஆவணங்களை சரிபார்த்தல்
 1. ஆய்வின் போது, தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் விதி முறைகளின் படி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
 2. அங்கக உற்பத்தி செய்பவர் சமர்பித்த திட்ட ஆவணத்தை விதிமுறைகளின்படி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்
 3. தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது மண், நீர் மாதிரி, கழிவுகள், விதைகள், பயிர் திசுக்கள், பயிர் விலங்கு மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் பற்றிய மாதிரியை அனுப்ப வேண்டும்.
 4. அனுப்பபட்ட மாதிரியை 17025 ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட வேண்டும். இதற்கான கட்டணத்தை உற்பத்தி செய்பவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 5. கள ஆய்வின் போது, அங்கக உற்பத்தி செய்யும் நபருடன் பேட்டி காண வேண்டும். ஆய்வாளர் மற்ற தகவல்களையும் சேகரிக்க வேண்டும்.
 6. ஆய்வு முடிந்தவுடன், சரிபார்ப்பதற்கான பட்டியல் மற்றும் ஆய்வு அறிக்கை தயார் செய்ய வேண்டும். உற்பத்தி செய்பவரிடமிருந்து  கையெழுத்து வாங்க வேண்டும்.
 7. குறிப்பிட்ட அங்கக உற்பத்தி செய்பவர் மற்றும் மதிப்பீ்ட்டாளருக்கு  சரிபார்க்கும் பட்டியல், ஆய்வறிக்கையை அனுப்ப வேண்டும்.
 8. மதிப்பீட்டாளரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆய்வறிக்கைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். ஏதாவது தகவல் மேலும் தேவைப்பட்டால் உற்பத்தி செய்பவருக்கு தெரிவிக்க வேண்டும்.
 9. விதிமுறைகளின் படி இல்லாமல் இருந்தால், உற்பத்தியாளர்களிடமிருந்து விளக்கம் கேட்க வேண்டும்.

 1. குழு சான்றளிப்பு விதிமுறைகள்பொதுவாக தேவைப்படுபவை
இந்த அமைப்பு விவசாயி குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், ஒப்பந்த உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் பிரிவுக்கு அளிக்கப்படுகிறது
 1. உற்பத்தி குழு ஒரே மாதிரியான உற்பத்தி அமைப்பு மற்றும் ஒரே மாதிரியான புவியியல் அமைப்புக்கு உள்ளாகவும் இருக்க வேண்டும்.
 2. 4 எக்டருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் அதற்கு அதிகமாக உள்ளவர்கள் ஒரு குழுவின் கீழ் வருவார்கள். இவர்களை தனித்தனியே ஆய்வு செய்ய வேண்டும். பண்ணையின் மொத்த பரப்பு குழுவின் மொத்த பரப்பில் 50 க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
 3. பதப்படுத்துபவர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒரு குழுவின் கீழ் வருவார்கள் ஆனால் அவர்கள்  தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையில்  வருடந்தோறும் ஆய்வு செய்யபட வேண்டும்.
குழுவின் அமைப்பு
 1. குழுக்கள் சட்ட அளவில் மதிப்பும், தனிப்பட்ட அமைப்பாகவும் இருக்க வேண்டும்
 2. உள்கட்டுபாட்டு அமைப்பை அந்த குழுக்கள் வைத்திருக்க வேண்டும்.
 3. தனிப்பட்ட செயல்பாடுகளை செயல்படுத்துவதற்காக அந்தக் குழுவிலிருந்து தனிப்பட்ட நபர்கள் குழுக்கள் அமைக்க வேண்டும்.
 4. உள்கட்டுப்பாட்டு அமைப்பை அமல்படுத்துவதற்கும், ஏற்படும் பிரச்சனைகளை அறியவும் உள் தர அமைப்பு கையேடு ஒன்றை அந்த குழுக்கள் உருவாக்க வேண்டும்
குழு சான்றளிப்புக்கான உள் விதிமுறைகள்
 1. தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் வழி முறைகளின் கீழ் உள்ளூர் மொழியில் உள் விதிமுறைகள் தயாரிக்கப்படும்.
 2. உற்பத்தி பிரிவின் வரையறை, மாற்றுவதற்கான முறை, இணை உற்பத்தி, மாற்றுவதற்கான காலம், அனைத்து உற்பத்தி பிரிவுக்கான உற்பத்தி விதி முறைகள், அறுவடை மற்றும் அறுவடையின் சார் செய்முறைகளை உள்ளடக்கி உள் விதிமுறைகள் இருக்க வேண்டும்.
 3. வாங்குவதற்கான வழிமுறை, வர்த்தக வழிமுறை, பதப்படுத்துவதற்கான வழிமுறைகளை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
சான்றளிப்புக்கு மானியம் வழங்குதல்
 1. தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை, பதிவு சான்றிதழ், பரிமாற்ற சான்றிதழ், பொருள் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
 2. சான்றளிப்பு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவைக் கொண்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது
 3. நோக்கத்திற்கான சான்றிதழ்
சான்றளிப்புக்கு மறுப்பு தெரிவித்தல்
 1. விதிமுறைகளுக்கு அங்கக செயல்பாடுகள் ஒத்துவராமல் இருந்தால், உற்பத்தி செய்பவருக்கு சான்றிதழ் பற்றித் தெரிவிக்க வேண்டும்.
 2. தமிழ்நாடு சான்றளிப்புத் துறை சான்றிதழ் வழங்கும் முன் பிழைகளைத் திருத்த வேண்டும்.
 3. மற்றொரு சான்றிளிப்பு அமைப்புடன் இணைந்து உற்பத்தி செய்பவராக இருந்தால், புதிய விண்ணப்பத்தை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
 4. தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை விண்ணப்படிவத்தில் உள்ள பிழைகளை சரிபார்க்க வேண்டும்.
 5. சான்றிதழ்கள் மறுப்பு பற்றி உற்பத்தியாளருக்கு எழுத்து மூலம் அறிக்கை தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழங்க வேண்டும்.

 1. சான்றளிப்பை தொடருதல்
 1. சான்றளிப்பை தொடர வேண்டுமானால், கட்டணம் செலுத்தி பதிவை புதுப்பிக்க வேண்டும்.
 2. உற்பத்தி(அ) கையாளுவதற்காக புதுப்பிக்க வருடாந்திர அறிக்கையை உற்பத்தியாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
 3. புதுப்பிப்பதற்கான சான்றிதழ்களை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை சரிபார்க்க வேண்டும்.
மேல்முறையீடு
 1. சான்றிதழ் மறுப்பு, தடைவிதிப்படி போன்றவற்றிற்கு எதிராக பதிவு செய்த உற்பத்தியாளர் மேல் முறையீடு செய்யலாம்.
 2. அறிக்கையில் குறிப்பிட்ட நாளில் (அ) 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு அதிகாரிகளின் முடிவை கடைசி முடிவாகும்.

8.அங்கக சான்றளிப்பிற்காக தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகள் தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகளை பதிவிளக்கம் செய்தல் மேலும் விபரங்களுக்கு:
இயக்குநர்,
அங்கக சான்றளிப்புத் துறை, 1424 A, தடாகம் சாலை, ஜி.சி.டி. அஞ்சல்
கோயமுத்தூர் – 641 013, தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி: 0091 422 2432984, தொலைபிரதி: 0091 422 2457554,
மின்னஞ்சல்: info@tnocd.org, வலைத்தளம்: www.tnocd.net
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *