வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020 | TN Ration Shop Recruitment 2020:

TN Ration Shop Recruitment 2020:- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. அதாவது தற்பொழுது திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளுவர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

 

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு மொத்தம் 1423 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு  செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த ரேஷன் கடை விற்பனையாளர் பணி மற்றும் கட்டுநர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல் கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

 

 

TN Ration Shop Recruitment 2020 – தமிழ்நாடு ரேஷன் கடை வேலை 2020 அறிவிப்பு விவரம்:-

நிறுவனம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் (District Recruitment Bureau)
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள் நியாயவிலைக்கடை விற்பனையாளர் (Sales Person) & நியாயவிலைக்கடை கட்டுநர் (Packer)
மொத்த காலியிடங்கள் 1423
சம்பளம் sales person ரூ. 5,000/- packers ரூ. 4,250/-
பணியிடம் திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளுவர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.07.2020, 15.07.2020, 18.07.2020, 20.07.2020 & 31.07.2020

கல்வி தகுதி:-

  • Sales Person பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • Packer பணிக்கு 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

 

 

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு நன்றி