தார்பார்க்கர் பசு

தினமும் 17 லிட்டர் பால் தரும் தார்பார்க்கர் பசு வேண்டுமா ?

தினமும் 17 லிட்டர் பால் தரும் தார்பார்க்கர் பசு வேண்டுமா ? tharparkar cow seller in tamil nadu

 

தமிழ்நாட்டில் தார்பார்க்கர் மாடு வளர்ப்பில் முன்னோடியாக இருப்பவர்களில் ஒருவரான மணிசேகர் :

‘‘ கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ‘தார்பார்க்கர்’ ரக பசு மாட்டை தமிழகத்துக்கு முதன்முதலாக நான் கொண்டு வந்தேன். அது வளரும் விதத்தைப் பார்த்து பலரும் கேட்டதால் எல்லோருக்கும் வாங்கி கொடுக்கத் தொடங்கினேன். இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட மாடுகள் தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளன.

 

ராஜஸ்தானின் ‘தார்’ பாலைவனத்தில் உள்ள காய்ந்த புற்களையும், தழைகளையும் தின்று வளருகிறது இந்த மாடு. வெள்ளை நிறத்தில் பார்ப்பதற்கு அழகாக உள்ள இந்த மாட்டின் பூர்வீகம், சிந்து சமவெளி. ‘காங்கிரேஜ்’ என்ற இனத்தைச் சேர்ந்த மாடுகள் சிந்து சமவெளி காலத்தில் வளர்க்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இந்த மாட்டின் உருவ பொம்மைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதே வம்சாவழியில் வந்ததுதான் தார்பார்க்கர் மாடு.

இந்த மாட்டை ராஜஸ்தானில் உள்ள விவசாயிகள் கயிறு போட்டு கட்டி வைப்பதில்லை. பகல் முழுதும் மேய்கின்றன. ஒரே ஒரு வேளை மட்டும் போனால் போகட்டும் என்று பருப்பு நொய் கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு மாடு 10 முதல் 18 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. அதைப் பார்த்து, ‘எந்தத் தீவன செலவும் இல்லாமல் இவ்வளவு பால் கொடுக்கிறதே’ என்று ஆச்சர்யப்பட்டுதான் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தேன்.tharparkar cow seller in tamil nadu

 

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் மாட்டை லாரியில் கொண்டு வந்ததால் ஓர் ஆண்டு வரை பயண அயர்ச்சி தீரவில்லை அதற்கு. கயிறு போட்டு மாட்டுபட்டியில் கட்டியதாலும் பிரச்னை. எனவே, இங்கு வந்த ஓர் ஆண்டு வரை 7 முதல் 10 லிட்டர் பால்தான் கொடுத்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் 17 லிட்டர் வரை ஒரு சில இடங்களில் பால் கொடுக்க தொடங்கிவிட்டது. தீவன செலவே. இல்லாமல் வரப்பு ஓரத்தில் கையில் பிடித்துக் கொண்டு மேய்த்தால் கூடபோதும். ஒரு மாடு 18 முறை கூட கன்று போடும். எந்த நோய் நொடியும் தாக்குவதில்லை.

இந்த மாட்டை ராஜஸ்தானில் பத்தாயிரம் ரூபாய்க்குதான் வாங்கி வருகிறோம். லாரி வாடகையுடன் சேர்த்தால் மாட்டின் விலை மொத்தம் 20 ஆயிரம் வந்துவிடுகிறது. இந்த மாடு ஏழை, எளிய மக்களுக்கு ஏற்றது. ஆரம்ப முதலீடுதான் கொஞ்சம் அதிகமாகும். ஆனால், நீண்ட காலம் வருமானம் தரக்கூடியது. tharparkar cow

 

இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில்தான் அதிகளவு வெயில் அடிக்கிறது. இது தார்பார்க்கர் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளது. அதேசமயம், இது பருவத்திற்கு வரும் காலம் அதிகம். 4முதல் 5 வருடங்கள் பிடிக்கும். இந்த மாட்டை தாறுமாறாக கையாண்டால் பால் அளவு குறையும்.” மணிசேகரை தொடர்பு கொள்ள, அலைபேசி: 094493-46487

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி