Jan djan account details in Tamil

வங்கிக்கணக்கில் பணம் இல்லாத போதும், ரூ.5 ஆயிரம் எடுக்க உதவும் ஜன் தன் அக்கவுன்ட்

ஜன் தன் வங்கிக்கணக்கு | Jan Dhan Account details Tamil :

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிப்பவரா நீங்கள். அப்படியானால், 5 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்ள உங்களுக்கு உதவுகிறது ஜன் தன் வங்கிக்கணக்கு.

ஜன் தன் வங்கிக்கணக்கு (Jan Dhan Account)

வங்கிக்கணக்கு இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டிற்கு ஒரு வங்கிக்கணக்கை உருவாக்கும் வகையில் மோடி அரசால், ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் ( Jan Dhan Account) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, ஏழரைகோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது. இதில் இதுவரை 53 சதவீதம் வங்கிக்கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால் இன்னமும் இது ஒரு சேமிப்பு கணக்கு என்றே மக்கள் தவறுதலாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

உண்மையில் இது சேமிப்பு கணக்கு அல்ல. அடிப்படையில் சேமிப்பு கணக்கில் இந்த திட்டம் வந்தாலும், சேமிப்பு கணக்கில் இல்லாத சில சிறப்பு சலுகைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

சிறப்பு காப்பீடு

இந்த வங்கிக்கணக்கு தாரர்கள் குறைந்த பட்ச இருப்புத் தொகையை வைத்திருக்கத் தேவையில்லை. மாதத்திற்கு 4 முறை பணம் எடுத்துக்கொள்ளும் வசதி (Withdrawal), ஏடிஎம் கார்டு (ATM Card) இவற்றுடன் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பீடும் வழங்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், கணக்கு தாரர், விபத்தில் சிக்கி மரணம் அடைய நேரிட்டால், 2 லட்சம் ரூபாய் வழங்க வகைசெய்யும் ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது. Jan djan account details in Tamil

ஓவர் டிராஃப்ட்

இந்த திட்டத்தின்படி 5 ஆயிரம் ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் (Over Draft) எடுத்துக்கொள்ளலாம். அதாவது இந்த வங்கிக்கணக்கில், பணம் கையிருப்பு இல்லாத போதிலும் (Zero Balance) 5 ஆயிரம் ரூபாய் ஓவர் டிராஃப்ட் எடுத்துக்கொள்ளும் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிபந்தனை

இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள உங்கள் ஜன் தன் வங்கிக்கணக்கு, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம்.

ஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்திருந்தாலே போதும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த ஆறு மாதங்களில், வங்கிக்கணக்கில் பணம் கையிருப்பை பராமரித்திருக்க வேண்டியதும், பணப்பரிமாற்றம் செய்திருக்க வேண்டியதும் அவசியம்.

சாதாரணமாக வங்கிக்கணக்கு தொடங்கத் தேவைப்படும் ஆவணங்கள் (Documents) மட்டும் போதும். ஜன் தன் கணக்கு தொடங்க போதுமானது வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை.

PMJDY விண்ணப்பம்

பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா விண்ணப்ப படிவத்தை பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஏதாவது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

வாடிக்கையாளரை தெரிந்துக் கொள்ளுங்கள் விவரங்கள் (KYC details)

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அடையாள ஆவணம், முகவரிச் சான்று மற்றும் வாடிக்கையாளரை தெரிந்துக் கொள்ளுங்கள் விண்ணப்பத்தையும் முழு விவரங்களோடு பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

எந்த வங்கியில் ஜன்தன் யோஜனா கணக்கு துவங்கப்போகிறீர்களோ அந்த வங்கி கிளைக்கு கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள். ஆவணங்களை சரிப்பார்த்த பிறகு கணக்கு திறக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கொரோனா நிவாரணமாக மத்திய அரசு மாதம் ரூ500 வீதம் 3 மாதங்களுக்கு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Keywords : ஜன்தன் வங்கி கணக்கு ஆரம்பிப்பது எப்படி, ஜன் தன் வங்கிக் கணக்கு, ஜன்தன் வங்கி கணக்கு தொடங்குவது எப்படி, ஜன்தன் வங்கி கணக்கு என்றால் என்ன, Jan Dhan Account details Tamil,

விளம்பரம்

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி