how to open jan dhan account in tamil

ஜிரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்க மாநில அளவிலான இலவச உதவி எண்

ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் | how to open jan dhan account in tamil

வங்கிக்கணக்கு இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டிற்கு ஒரு வங்கிக்கணக்கை உருவாக்கும் வகையில் ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் (PM Jan Dhan account) தொடங்கப்பட்டது. இந்த ஜன் தன் கணக்கினை எந்த வங்கயில் வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம். இதற்கு எந்த கட்டாய இருப்பு தொகையும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் இதுவரை 53 சதவீதம் வங்கிக்கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன.

 

இந்த ஜன் தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு, கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக மாதம் அவர்களின் வங்கி கணக்கில் 500ரூபாய் மத்திய அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 20 கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஜன் தன் கணக்கு தொடர்காக விவரங்களை அறிந்துக்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கு இலவச உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜன் தன் வங்கி கணக்கு தொடங்குவது குறித்து விவரங்களை அறிந்துக்கொள்ள முடியும். ஜன் தன் வங்கி விவரங்களை தெரிந்துக்கொள்ள தமிழ்நாடு: 18004254415, பண்டிச்சேரி: 18004250016 என்ற இலவச எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். வங்கிக்கணக்கில் பணம் இல்லாத போதும், ரூ.5 ஆயிரம் எடுக்க உதவும் ஜன் தன் அக்கவுன்ட்.

வங்கிக்கணக்கைத் தொடங்குவது எப்படி?

நீங்கள் ஜன் தன் வங்கி கணக்கைத் தொடங்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் பின்பற்றுங்கள்

  • பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா விண்ணப்பப் படிவத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தோ அல்லது ஏதாவதொரு வங்கி இணையதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அடையாள ஆவணம், முகவரிச் சான்று ஆகியவற்றை இணைத்து அதனோடு KYC விவரங்களை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  • நீங்கள் ஜன் தன் கணக்கு திறக்க நினைக்கும் வங்கி கிளைக்கு இந்த ஆவணங்கள் மற்றும் கணக்கு திறப்பதற்கான விண்ணப்பத்தையும் எடுத்துச் செல்லவும்.
  • உங்கள் ஆவணங்களை முறையாகச் சரிபார்த்த பின்னர், உங்கள் வங்கிக் கணக்கு திறக்கப்படும்.

விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள்

  1. ஓட்டுநர் உரிமம்
  2. ஆதார் அட்டை
  3. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகடவுச்சீட்டு (Passport)
  4. நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card)
  5. தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை (மாநில அரசு அலுவலரால் கையொப்பம் இடப்பட்டது)
  6. அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணம்.

 

Keywords: how to open jan dhan account in tamil, jan dhan yojana benefits in tamil, jan-dhan yojana tamil nadu, jan dhan yojana 2020 in tamil, ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம்

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி