kokedama

கொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்

3497

கொக்கிடமா | how to make kokedama in tamil

நம்மில்  பலருக்கு அலங்கார செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதில் உள்ள வாய்ப்புக்கள் தெரிவதில்லை. அழகு செடிகள் வளர்ப்பதில் பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அதில் மிக எளிமையாகவும் அழகாகவும் செய்ய கூடிய ஒன்று தான் கொக்கிடமா (kokedama). இந்த ஐடியா முதன்முதலில் தொடங்கியது ஜப்பானில்தான். இது போன்சாய் (Bonsai) போன்ற தொழில்நுட்பம் தான். ஆனால் போன்சாய் செய்வதற்கு அதிக செலவு ஆகும். கொக்கிடமா செய்வதற்கு மண் மற்றும் peat moss இவை இரண்டும் இருந்தாலே போதும். அதனால் இதை ஏழைகளின் போன்சாய் (poor mans bonsai) என்றே சொல்லலாம்.

கொக்கிடமா என்பது தாவரத்தின் வேர் பாகத்தை மண் பந்தினுள் நிறுத்தி அதற்கு மேல்  மென்மையான பசுமையான பாசியை வைத்து அழகுபடுத்துவதுதான். பின்னர் இந்த அமைப்பை குறிப்பிட்ட இடத்தில் அழகுக்கு வைப்பதற்கு ஏற்ப நூலினை வைத்து வடிவமைக்க வேண்டும்.

 

விளம்பரம் : நாட்டுக்கோழி விற்பனை செய்ய முகவர்கள் தேவை : 96777 11318

 

உகந்த தாவரங்கள் 

நிழலில் வளரக்கூடிய, நிழலை அதிகம் விரும்பக்கூடிய தாவரங்கள் இதற்கு பொருத்தமானதாகும். கொக்கிடமா செய்வதற்கு பொருத்தமான சில தாவரங்களின் பெயர்கள்,

1. சென்சிவேரியா

2. ஜாமியோகல்காஸ் ஜாமிஃபோலியா (Zamioculcas zamiifolia – Zz)

3. மணி பிளான்ட் (money plant)

4. அந்தூரியம் (anturium)

5. பிலோடென்ரான் (philodendron)

6. டிராசியேனா (Dracaena)

 

நிழலில் வளரக்கூடிய, நிழலை அதிகம் விரும்பக்கூடிய தாவரங்கள் இதற்கு பொருத்தமானதாகும்.

இவை மட்டுமில்லாமல் வீட்டினுள் வளர்ப்பதற்கு ஏற்ற தாவரங்களும், சதைப்பற்று அதிகம் உள்ள அழங்காரத் தாவரங்களையும், சிறிய வேர்த்தொகுப்பு உள்ள தாவரங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.

செய்முறை 

முதலில் மண் மற்றும் peat moss இரண்டையும் சேர்த்து நாம் எடுக்கும் தாவரத்தினை பொறுத்து சிறிய பந்து போன்ற அமைப்பினை உருவாக்க வேண்டும்.பின்னர் அதனுள் நாம் தேர்ந்தெடுத்த தாவரத்தின் வேர்பகுதியை அந்த பந்தின் நடுப்பகுதியில் வைத்து நூலினால்  கட்டவேண்டும். மேலும் அழகு சேர்க்க பசுமையான பாசியினை அதன் மேல் வைக்கலாம். மேலும் அதை பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சதைப்பற்று அதிகம் உள்ள தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் அதிகமாகவும் peat moss குறைவாகவும் இருக்க வேண்டும். அதே தண்ணீர் அதிகம் தேவைப்படும் தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் குறைவாகவும் peat moss அதிகமாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்தால் போதுமானது. நாம் செய்யக்கூடிய பூச்சட்டிக் கலவை நன்கு காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொக்கிடமாவில் உள்ள வியாபார வாய்ப்பு

1. இன்று திருமண நிகழ்வுகளில் தாம்பூலங்கள் வழங்குவது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. திருமண தாம்பூல பரிசாக இனிப்பு  மற்றும் காரங்களை தருவதே வழக்கமாக உள்ளது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே  விதைகளையும் மரக்கன்றுகளையும் பரிசாக தருகின்றனர். நாம் சற்று வித்தியாசமாக அழகு தாவரங்களையும் பரிசளிக்கலாம். இது நம் உறவினர்களுக்கு நினைவு சின்னமாகவும் மனநிம்மதி தரும் வகையிலும் அமையும்.

2. கார்பொரேட் கம்பெனிகள், பள்ளிகள் மற்றும்  கல்லூரிகளிலும்  ஒப்பந்த அடிப்படியில் இதை நாம் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்து இலாபம் பார்க்கலாம்.

3. இதன் நுணுக்கங்களை நாம் நன்றாக கற்று கொண்டால் மற்றவர்களுக்கு கற்று கொடுத்தும் இலாபம் பார்க்கலாம்.

4. நாம் சொந்தமாக வலைத்தளம் தொடங்கி அதன் மூலமும் விற்பனை செய்யலாம்.

-ப. கோகிலா

 

Keywords: how to make kokedama in tamil, trending business ideas in tamil, new business ideas in tamil 2021, கொக்கிடமா, how to make kokedama in malayalam, kokedama chennai, new business ideas in tamil, new business ideas in tamilnadu 2021, wholesale business ideas in tamil, small business ideas in tamilnadu villages. small business ideas in tamilnadu villages in tamil

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *