swot analysis tamil

தொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்

3475

தொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ் | Business Management Tips in Tamil | swot analysis tamil

தொழில் துறையில் புதிதாக கால்வைப்பவர்கள் எந்தத் தொழிலில் இறங்கு கின்றனரோ அத்தொழில் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது புதிதாக இறங்கும் தொழில் பற்றிய சாதக, பாதக அம்சங்கள், எதிர்கால வாய்ப்புகள், பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பார்த்து சரியென முடிவெடுத்து பின்னர் களமிறங்க வேண்டும். ஸ்வாட் அனலிசிஸ்

பலரது ஆலோசனைகளை கேட்டு தகவல்களை அறிந்து கொண்டாலும் சுய சிந்தனையுடன் தொழிலில் இறங்க வேண்டும். சரியாக ஆராயாமல் தொழிலைத் தொடங்கி விட்டு,  சரிவர நடத்த முடியாமல் திண்டாடுவதையும், மூடுவிழா நடத்துவதையும் நாம் பார்க்கிறோம். ஒருவர் எந்தத் தொழிலை செய்யப்போகிறோம் என்பதை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அத்தொழிலை அவரது அடுத்த தலைமுறையினரும் தொடரும் வண்ணம் அமைத்தால்தான் அத்தொழிலின் வெற்றி முழுமையடையும். தொடங்கும் தொழில் பற்றியும் அத்தொழிலில் இருக்கும் பலம், பலவவீனம், வாய்ப்புகள், பின் விளைவுகள் போன்றவற்றையும் முதலில் கண்டறிய வேண்டும். இதற்கு ஸ்வாட் அனலிசிஸ் (swot analysis tamil) முறை பயன்படுகிறது.

ஸ்வாட் என்பதன் விரிவாக்கம்
SWOT-என்பது
S     – -strength –பலம்
W    – weakness – பலவீனம்,
O    – oppotunities – வாய்ப்புகள்
T    -threats – பின்விளைவு பற்றிய பயம்
உதாரணமாக வாழைக்காய் சிப்ஸ் உற்பத்தி செய்யும் தொழில் ஒன்றுக்கான ஸ்வாட் அனலிஸிஸ் அமைப்போம்.

 

S  (strengths)

 • மூலப்பொருட்கள் அதிகம் கிடைக்கும்.
 • தயாரிக்கும் முறை எளிது.
 • குறைந்த  முதலீடு, அதிக லாபம்.
 • உடனடியாகவும் விற்கலாம். பேக்கிங் செய்தும் விற்கலாம்.
 • பலரும்  விரும்பும் பண்டம். சிப்ஸ் பிரியர்களால் பெரிதும் விரும்பப்படும்

 W (weakness)

 •  மூலப்பொருட்களை வெகு தொலைவிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
 • மூலப்பொருளான வாழைக்காயை நீண்ட நாட்களுக்கு இருப்பு வைக்க முடியாது.
 • விற்பனையாகாமல் மீறும் நிலையில் அதிக நாள் தாங்குவது அரிது.

 O (opportunities)

 •  மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்கலாம்.
 •  தனியுரிமைக் கிளைகள் அமைத்து விற்பனையை அதிகரிக்கலாம்.
 •  பலவித (பிறவகை) சிப்ஸ்களையும் தயாரித்து வளர்ச்சி காண வாய்ப்புண்டு
 • வேளாண் பொருள் மூலப்பொருளாக இருப்பதால் அரசின் ஒருசில சலுகைகள் கிடைக்க வாய்ப்புண்டு.

 T (threats)

 •  பருவமழை போன்ற இயற்கைச் சீற்றத்தால் மூலப்பொருட்கள் கிடைப்பது அரிதாகலாம்.
 • போட்டியாளர்கள் அதிகரிக் கலாம். ஸ்வாட் அனலிசிஸ்
 • எண்ணெய் பண்டம் என்பதால் அதனைத் தவிர்க்க குறிப்பிட்ட தரப்பினர் நினைக்கலாம்.
 • போக்குவரத்து வாடகை அதிகரிக்கலாம்.

 

மேற்கண்ட தொழிலில் சாதகமான நிலையே காணப்படுகிறது. பாதகமான நிலை இருந்தபோதிலும் அதனை சரி செய்தோ, மாற்று ஏற்பாடு செய்தோ நிவர்த்தி செய்யும் வாய்ப்புள்ளது.  எனவே இத்தொழிலை தொடங்க முயற்சிக்கலாம். தொழில் அமைக்கும் பகுதி, விற்பனை வாய்ப்பு, போட்டியாளர்கள் போன்ற விவரங்களை ஆராய்ந்து பின்னர் தொழிலைத் தொடங்க முயற்சிக்கலாம்.

 

மேலேகூறப்பட்ட சிப்ஸ் தயாரித்து விற்கும் தொழிலானது ஒரு உதாரணம் தானே தவிர ஆலோசனை அல்ல. ஸ்வாட் அனலிசிஸ் செய்து பாதகமான அம்சங்கள் அதிகம் தென்பட்டால் அத்தொழிலைக் கைவிட்டு, வேறு தொழிலுக்கு முயற்சிப்பது நல்லது.

 

இவ்வாறு தொழில் துவங்கும் முன் ஸ்வாட் அனலிசிஸ் செய்து பார்த்து தொடங்கினால் தொழில் வெற்றியடைய ஏதுவாகும்.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *