fig1 7

50000 இலவச விவசாய மின் இணைப்பு

50000 இலவச விவசாய மின் இணைப்பு

தமிழகத்தில் விவசாயத்திற்கு என இலவசமாக மின் இணைப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த மின் இணைப்பிற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

வீடு, தொழில் சாலை, நிலம், வணிகப் பிரிவுகளில் மின் இணைப்புப் பெற விருப்பம் உடையவர்கள் மின் வாரிய இணையதள முகவரியான www.tangedco.gov.in என்ற இணையதளதிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதால் விவசாயிகள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேவையான ஆவணங்கள்

  • தொலைபேசி எண்
  • வீட்டு முகவரி
  • நிலத்தின் பட்டா
  • நிலத்தின் சிட்டா
  • நிலத்தின் சர்வே எண்
  • விஏஓ சான்றிதழ்
  • தடையில்லா சான்றிதழ்

எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • www.tangedco.gov.in என்ற இணைய தள முகவரிக்குச் செல்லவும்
  • Apply Online- இல் LT New Service ரைட் கிளிக் செய்ய வேண்டும்.
  • அந்த பக்கத்தில் Apply-க்கு கீழே உள்ள New Service Connection-Agri என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது, மொபைல் எண்ணை உள்ளிட்டு ஓடிபி பெறவேண்டும்.
  • ஓடிபி-யை உள்ளிட்டதும் விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம்.
  • அடுத்ததாக, விண்ணப்பதாரர் வகை, பகுதி முதலான விவரஙகளான மாவட்டம்,
  • வட்டம், கிராமம் முதலானவைகளைப் பூர்த்திச் செய்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்களான பெயர், முகவரி, மொபைல் எண் முதலானவற்றைக் கொடுத்தல் வேண்டும்.
  • அதன் பின்பு Agriculture and its allied activities என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்போது, நிலத்தின் பட்டா எண், சர்வே எண் முதலான நிலத்தின் விவரங்களைப் பூர்த்திச் செய்தல் வேண்டும்.
  • விஏஓ சான்றிதழ், தடையில்லா சான்றிதழ் முதலான தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பதிவுக்கட்டணம் ரூ. 118 -ஐச் செலுத்தி விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன் பெறுங்கள்.

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *