துளசி

மூலிகை சானிடைசர் தயாரிக்கலாம் வாங்க

மூலிகை சானிடைசர்:

கொரோனா வைரஸ் (Corona Virus) மிக வேகமாக பரவி வரும் நிலையில், பாதுகாப்பிற்காக அனைவரும் பயன்படுத்துவது தான் சானிடைசர் (Sanitizer). சோப்பு போட்டு கைகளைக் கழுவுவது, மிக நல்லது. சோப்பு இல்லாத இடத்தில், சானிடைசரை பயன்படுத்தலாம். ஆனால், தொடர்ந்து பலமுறை இதனைப் பயன்படுத்துவதால், உடலில் வேறு சில பாதிப்புகள் வரக்கூடும் என்று எச்சரிக்கின்றனர், மருத்துவ விஞ்ஞானிகள். ஏனெனில், சானிடைசரில் கெமிக்கல்ஸ் (Chemicals) அதிகம் கலந்துள்ளது.

 

யாரெல்லாம் சானிடைசரை பயன்படுத்தக் கூடாது:

தைராய்டு, கல்லீரல் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கைகளை சானிடைசரால் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதற்கு மாற்றாக, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கிருமி நாசினியைப் (Gems Killer) பயன்படுத்தினால், பக்க விளைவுகள் இன்றி, பாதுகாப்பாக இருக்கும்.

 

மூலிகை சானிடைசர்:

நம் நாட்டு மூலிகையில், முதல் மூலிகையாகத் திகழும், வேப்பிலை (Neem) தான், அந்த மூலிகை சானிடைசர். வேப்பிலை, நொச்சி இலை மற்றும் மாவிலைகள் ஆகியவற்றை உலர்த்தி, அரைத்து, பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தினசரி காலையில் குளிப்பதற்கு முன், மேற்படி தயாரித்த பொடியில் ஒரு பிடி எடுத்து, ஒரு குடம் கொதி நீரில் போட்டுக் காய்ச்சுங்கள். 15 நிமிடம் நன்கு கொதித்த பின், இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடியைக் (Turmeric) கலந்து, இறக்கி ஆற வையுங்கள். அவ்வளவு தான் மூலிகை சானிடைசர் தயார்.

 

பயன்படுத்தும் முறை:

மூலிகை சானிடைசரை நன்கு ஆறிய பின், சம அளவு தண்ணீர் கலந்து, வீட்டில் வையுங்கள். தேவைப்படும் போது, இதன் மூலம் கை, கால், முகத்தை கழுவ வேண்டும். அடிக்கடி இதை கொண்டு நன்கு கழுவி வரலாம். இதைப் பயன்படுத்தும் நேரத்தில், சோப்பைத் தவிர்க்கவும். ஒரு நாளைக்கு ஆறு முறை இதைக் கொண்டு கழுவி விட, இது மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படும். காலையில் பல் துலக்கும் போது, இதைக் கொண்டு வாய் கொப்பளிக்கலாம் அல்லது குளிக்க விரும்பினால், ஒரு குடம் தண்ணீரில், இதைக் காய்ச்சி அதே அளவு தண்ணீர் கலந்து, சூடு பொறுக்குமளவில் குளிக்கலாம்; ஆனால், சோப்பு உபயோகிக்கக் கூடாது.

 

பாதுகாப்புக் கவசம்:

வேப்பிலை, மஞ்சள் கலந்த கஷாய தண்ணீர் உடம்பில் ஊறி, வியர்வைத் துளி வழியே, தோலின் புறத்துளை வழியாக, சிறிதளவு உள்ளே செல்லும். இது தான் அன்றைய நாள் முழுவதும், நமக்கு பாதுகாப்பு தரும் கவசமாகப் (Protective Shield) பயன்படும். அதனால், இந்த மூலிகை சானிடைசரை தினசரி வாய் கொப்பளிக்க வும். முகம், கை, கால் கழுவி, குளிக்கவும் பயன்படுத்தினால், எந்த வித வைரஸும் (Virus) நம்மை நெருங்காது. இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உடம்பில் வேப்பிலையின் சாரம், தோலுக்கு அடியில் படிந்து, கிருமிகளின் நஞ்சை (Poison) முறித்து விடும்.

 

நஞ்சு முறிக்கும் மூலிகை சானிடைசர்:

ஒரு மாதம் உபயோகித்த பின், கொசு கடித்தால் கொசுக் கடி நஞ்சு முறிக்கப்படுவதுடன், எதிர்விளைவாக கடித்த கொசு, சில நிமிடங்களில் மடிந்து போவதைக் காணலாம். இவ்வாறாக, இந்த மூலிகை சானிடைசர் தயாரித்து பயன்படுத்தி வர, வைரஸ் நோய்களில் இருந்து தப்பலாம். இதில் பக்க விளைவு ஏதும் இல்லை என்பது தான், இதன் தனி சிறப்பு!

நன்றி: Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி