umbrella 4234837 640

மழைக்கால தொழில் நீங்க ரெடியா?

4289

மழைக்கால தொழில் நீங்க ரெடியா | புதிய தொழில்கள் 

ஏதேனும் ஒரு தொழிலை மையமாகக் கொண்டு பெருந்தொகையை முதலீடு செய்து, வியாபாரம் செய்வது ஒரு வகை. சிறிய முதலீடு செய்து, குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு சிறு வியாபாரம் செய்வது மற்றொரு வகை. அதேநேரத்தில் அந்தந்த பருவத்திற்கு ஏற்ப சொற்ப முதலீட்டில் புதுப்புது வியாபாரம் செய்து அவ்வப்போது லாபம் பார்க்கும் வியாபாரிகளும் இருக்கிறார்கள். இந்த வியாபாரங்களைத்தான் சீசனல் பிஸ்னஸ் (Seasonl Business) என்பார்கள்.

ரூ 55000 தில் ஆட்டு பண்ணை அமைக்க அழைப்பு

மழைக்காலத் தொழில் (Rain season Business)

இந்தியாவில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. எனவே மலை சார்ந்த, இயற்கை எழில் சூழ்ந்த இடங்களைச் சேர்ந்தவராக இருந்தால், அவர்களுக்கு மழைக்கால வியாபாரம் வெகுவாக சூடுபிடிக்கும்.

குறிப்பாக தமிழகமாக இருப்பில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த வியாபாரத்தைச் செய்யலாம். அதேபோல் நீங்கள் அதிகம் மழை பொழிவைப் பெறும் பகுதிகளைச் சேர்ந்தவராக இருந்தால், உங்களுக்கு இந்த தொழில் மிகவும் கைகொடுக்கும்.

அது என்ன தொழில்?

அதுதான் மழைகால ஆடைகள் விற்பனை. அதாவது ஸ்வெட்டர்(Sweter), ஜெர்க்கின்(Gherkin), ரெயின்கோட் (Rain Coat), குடை, ரப்பர் ஷூ(Rubber Shoe), சாக்ஸ்(Sacks), க்ளவுஸ் (Glouse), வாட்டர் ப்ரூஃப் ஸ்கூல் பேக்(Water Proof School Bag) இப்படி இன்னும் பல பொருட்கள் உள்ளன.

குறைந்த முதலீடு (Small Investment)

வெறும் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தாலே போதும். கடைவைத்து பெரியளவில் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றை மொத்தமாக வாங்கி, நல்ல லாபத்தில் விற்பனை செய்யலாம்.

ஏனெனில் இது மழைக்காலத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் என்பதால், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் இவற்றுக்கென செலவு செய்வது வழக்கம். எனவே இயற்கையின் வரப்பிரசாதமான மழையையும், நீங்கள் காசாக்கிக் கொள்ளலாம். வருடா வருடம் வாங்க வேண்டிய பொருட்கள் என்பதால், நிரந்திர வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் கட்டயாம் வாங்குவார்கள்.

30 சதவீதம் லாபம் (Benefit)

மொத்தமாக வாங்கி சில்லரை வியாபாரம் செய்வதால் 25 முதல் 40 சதவீதம் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. துவக்கத்தில் குறைந்த லாபத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுவது அதிக வாடிக்கையாளர்களைக் கவர வழிவகை வகுக்கும்.

இடத்தைத் தேர்வு செய்தல் (Location Selection)

இன்னும் பெரிய அளவில் செய்ய நினைத்தால், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலோ, மார்க்கெட்டிலோ இவ்வகையிலான சிறிய கடை அமைக்க வேண்டும். ஆக இங்கு, இடம் தேர்வு என்பது மிக மிக முக்கியம்.

கடையின் முன்பு கண்களைக் கவரும் வகையிலான நிறங்களைக் கொண்ட நாற்காலிகளைப் போடுவது. வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும். கவர்ச்சிகரமான தள்ளுபடிகளையும், காம்போ ஆஃபர்களையும் (Combo offer) அறிவிப்பது வியாபாரம் சூடு பிடிக்க உதவும்.

பொருட்களை எங்கு வாங்கலாம்?

மழைக்கால ஆடைகளை டெல்லி போன்ற நகரங்களில் இருந்து கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக டெல்லியில், நேரு பேலஸ் , சென்ட்ரல் மார்க்கெட், சதார் பஜார், சாந்தினி சோக், உள்ளிட்ட சில மொத்த விலை மார்க்கெட்களில் இந்த ஆடைகள் மற்றும் பொருட்கள் மிகக் குறைந்த விலைக்கே கிடைக்கின்றன.இவ்விடங்களில் குறைந்த விலைக்கு வாங்கி வந்து, உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும்போது 30 சதவீதம் வரை உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

ரூ 55000 தில் ஆட்டு பண்ணை அமைக்க அழைப்பு

டோர் டெலிவரி (Door Delivery)

இல்லத்தரசிகளுக்கும் இந்த வியாபாரம் பெரிதும் உதவும். சுயஉதவிக்குழுவைச் சேர்ந்தவராக இருந்தால், அக்குழுவில் உள்ள உங்களுக்கு தோழிகளுக்கே இந்த ஆடைகளை விற்பனை செய்வது எளிது.

அதிலும், வீட்டிற்கே கொண்டு சென்று டோர் டெலிவரி(Door Delivery) செய்தால், வியாபாரம் களைகட்டத் தொடங்கிவிடும். அதையும் இலவசமாக செய்வதை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புவார்கள்.

Keywords: புதிய தொழில்கள், புதிய தொழில்கள் 2020, லாபகரமான தொழில், டீலர் தொழில் 2020, லாபம் தரும் சிறு தொழில், siru tholil list, magalir suya thozhil in tamil

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *