palam leaf plate tamil

குடிசை தொழில் பனை மர இலை தட்டு தயாரிப்பு

இலை தட்டு (leaf plate) தயாரிப்பு ..!

நீங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சுயதொழில் செய்ய வேண்டுமா? அப்படி என்ன தொழிலை செய்வது என்று யோசிக்கிறீங்களா ?

இந்த சிறந்த எண்ணத்திற்கு பனை மர தட்டு தயார் செய்து விற்பனை செய்யலாம். இவற்றின் மூலம் அதிக லாபம் பெறலாம்.


விளம்பரம் :தூய நாட்டுக்கோழி முட்டைகள் மற்றும் நாட்டுக்கோழி தமிழகம் முழுவதும் டெலிவரி செய்யப்படும்: 96777 11318


 

இந்த தொழில் சுற்றுச் சூழலுக்கு எந்த ஒரு தீங்கையும் விளைவிக்காதவை அதேபோல் ஆடு மாடுகளுக்கு நல்ல தீவனமாகவும், மண்ணில் எளிதில் மக்கக்கூடியதாகவும், மண்வளத்தை பாதுகாக்கிறது என்பதால் சந்தையில் தற்போது அதிகம் வரவேற்கப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு முதல் பிளாஸ்ட்டிக் கவர் மற்றும் தட்டு பயன்படுத்த கூடாது என்று தடைவிதித்துள்ளதால், இந்த பனை மர தட்டு தயார் செய்து நல்ல லாபத்தை பெறமுடியும்.

பனை மர இலை தட்டு தயாரிப்பு – கட்டிடமைப்பு:

குடிசை தொழில் என்பதால் வீட்டில் இருந்தே பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலரும், மிக எளிதாக செய்துவிடமுடியும், இந்த தொழில் செய்வதற்கு அதிக முதலீடு மற்றும் இடவசதிகள் தேவையில்லை. குறைந்த முதலீட்டில், வீட்டில் ஒரு சிறிய அறை இருந்தாலே போதுமானது.

குடிசை தொழில் பனை மர இலை தட்டு தயாரிப்பு – மூலப்பொருட்கள்:

இந்த தொழில் மந்தார இலை, பனை மர இலை, பாக்கு மர இலை ஆகிய இலைகளை கண்டிப்பாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் தட்டு தயார் செய்வதற்கு, கை ஊசி, நூல் ஆகிய பொருட்கள் தேவைப்படும்.

குடிசை தொழில் பனை மர இலை தட்டு (leaf plate) தயாரிக்கும் முறை:

பனை மர இலைத்தட்டு தயார் செய்வதற்கு அதிகளவு மந்தார இலைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.


விளம்பரம் : அறக்கட்டளை ஆரம்பித்து அரசு சலுகை மூலம் வருமானம் பெற:9655295851


மந்தார இலை ஒரு மூட்டை ரூ. 100 விற்கப்படுகிறது. ஒரு மூட்டை மந்தார இலைகளை கொண்டு 200 கிலோ இலை தட்டுகளை தயார் செய்திட முடியும்.

முதலில் பச்சை மந்தார இலைகளை ஒரு கயிற்றில் கோர்த்து, வெயிலில் ஒருவாரம் வரை காயவைக்க வேண்டும்.

பின்பு நன்றாக காய்ந்த இலைகளை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

பிறகு இலைகளை சுத்தம் செய்து, இலைகளில் மடிப்புகள் இல்லாமல், சமம் செய்து அதன் மேல் துணியை சுற்றி, அதன் மேல் அகலமான கல் வைத்து இலையை சமன்படுத்த வேண்டும்.

பின்பு தைக்க பயன்படுத்தும் குச்சிகளை மூன்றாக பிளந்து, தயார்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு குறிப்பிட்ட இலைகளை திரும்பவும் ஒரு முறை அகலமான கல் வைத்து இலையை சமன்படுத்த வேண்டும்.

இவ்வாறு 10 முதல் 13 இலைகளை சேர்த்து ஒரு பனை மர இலை தட்டு (leaf plate) உருவாக்கலாம்.

100 இலை தட்டு (leaf plate) கொண்ட ஒரு கட்டு மந்தார இலை தட்டு (leaf plate) ரூபாய் 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

குடிசை தொழில் பனை மர இலை தட்டு தயாரிப்பு – சந்தை வாய்ப்பு:

இலை தட்டு (leaf plate) தயாராகியதும், கோயில், ஹோட்டல் என்று அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம்.

மேலும் பயற்சி மற்றும் விவரம் பெற :
மதுரை ஹோம் சயின்ஸ் காலேஜ்
0452 242 2684.

இயக்குநர்
பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம்
பிள்ளையார்பட்டி
செல்போன்: 77088 20505, 94885 75716.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.


விளம்பரம் : தரமான பேரிச்சம்பழம் மொத்த விலையில் கிடைக்கும்: +91 93854 53353


Comments

One response to “குடிசை தொழில் பனை மர இலை தட்டு தயாரிப்பு”

  1. Hello Sir ,I am Ganesan .I need detail about mushroom cultivation .Kindly explain about

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *