கிசான் கிரெடிட்

PM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்

PM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம் | கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card)

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 18 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த திட்டம் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இதை தெரிந்துக்கொண்டால் அதிக விவசாயிகள் பயன் பெற முடியும். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் (Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme)

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-Kisan) என்ற திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு மூன்று தவணையாக இந்த பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் துவங்கப்பட்டு 18 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 9 கோடி 96 லட்சம் விவசாயிகளுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா நெருக்கடி நிலையை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. விவசாயிகளின் பணத்தேவையை அறிந்து இந்த திட்டத்தில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது, இதனால் கடந்த 2018 ஆண்டு இந்த திட்டம் துவக்கத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதால் சுமார் 9 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இதற்கான அடுத்த தவணை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. எனவே விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயனடைய இன்றே பதிவு செய்யுங்கள், PM – Kisan திட் மாற்றங்கள்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள், இந்த திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு சுய பதிவு முறையை அறிமுகப்படுத்தியது.

விவசாயிகளுக்கு சுய பதிவு செய்வதற்கான வசதி : கிசான் கிரெடிட் கார்டு

வேளாண் துறை மூலம் பதிவு செய்யப்பட்டு வந்த திட்டம் தற்போது எளிமையாகப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் ஆன்லைனில் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும். விவசாயி வருவாய் பதிவு, ஆதார் அட்டை, மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு எண் இருந்தால் போதும். அவர், pmkisan.nic.in அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்திற்கு சென்று Farmers corner-ல் அவர்களுக்கான விவரங்களை பதிவேற்றி இத்திட்டத்தில் இணைத்துகொள்ள முடியும்.

நிலையை அறிந்து கொள்வதற்கான வசதி

இந்த திட்டத்தில் நீங்கள் பதிவுசெய்த பிறகு, உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை அறிய நீங்கள் வேளாண் துறை அலுவலகத்திற்கு செல்ல தேவை இல்லை. நீங்கள் இதனை உங்கள் வீட்டிலேயே இருந்து அறிந்துகொள்ளலாம். ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை பதிவிட்டு மத்திய அரசின் அதிகாரபூர்வ பக்கத்தில் விவசாயிகள் தங்கள் நிலையை சரிபார்க்கலாம்.

உங்கள் விண்ணப்ப நிலையை பதிவு செய்ய அல்லது சரிபார்க்க விரும்பினால், PM-Kisan அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பார்வையிடவும் – https://pmkisan.gov.in/

கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card)

மத்திய அரசு அண்மையில் அறிவித்த ஆத்மநிர்பர் சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. இதில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் கீழ் உள்ள 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் அட்டை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கிசான் அட்டை வழங்கும் திட்டமும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக, இதில் பல்வேறு வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது .கடந்த மாதம் வரை வங்கிகள் இதுவரை மொத்தம் ரூ .62,870 கோடியை 70.32 லட்சத்திற்கும் அதிகமான கிசான் கிரெடிட் கார்டு தாரர்களுக்கு காரீஃப் பயிர்களுக்கான நடவு பணிகளுக்கு கடன் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Kerwords: கிசான் கிரெடிட் கார்டு, கிரெடிட் கார்டு பெறுவது எப்படி, கிசான் கார்டு பயன்கள், கிசான் கடன் அட்டை விண்ணப்பம், கிசான் கார்டு விண்ணப்பம், கிசான் கிரெடிட் கார்டு பயன்கள், உழவர் அட்டை பெறுவது எப்படி, கிசான் கடன் அட்டை விண்ணப்பம் pdf, பயிர் கடன் பெற

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி