டிடிசிபி

ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 ஓய்வூதியம் பெற்றிடுங்கள்

1792

ஓய்வூதியம்

குறைந்த வருவாய் ஈட்டும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வுதியம் வழங்கும் வகையில், ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாதந்தோறும் 55 – 200 ரூபாய் மட்டுமே செலுத்தி 60 வயதிற்கு பின்னர் மாதம் 3000 பென்சன் பெறலாம். இதன் முழு விவரம், விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்

ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா – (PMSYM)

நாட்டில் குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினருக்கும் நிதி உத்திரவாதம் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. அந்த வகையில் அமைப்புசாரா துறைகளில் உள்ள ஏழை தொழிலாளர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியால் பிப்ரவரி 2019-இல் பிரதமரின் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 10 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களை இந்த திட்டத்தில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

PMSYM – திட்டத்தில் இணைவதற்கான தகுதி

வீட்டு வேலை செய்யும் பெண்கள், வாகன ஓட்டுநர்கள், பிளம்பர்கள், ரிக்‌ஷா தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலில் உள்ளவர்கள் பயன்பெறலாம்.

 • மாத வருமானம் 15000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
 • 18 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம்
 • EPF/NPS/ESIC கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் இணைய முடியாது.

திட்டத்தின் சிறப்பம்சம்

இந்த திட்டத்தின் மூலம், 60 வயதை கடந்த நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 பென்சன் தொகை வழங்கப்படும்.

பயனாளிகள் பென்சன் பெறும் காலத்திலேயே இறந்துவிட்டால், அவரின் மனைவி/கணவனுக்கு பென்சன் தொகையில் 50 சதவீதம் வழங்கப்படும்.

பயனாளி வழக்கமான பங்களிப்பை வழங்கியிருந்து அவர் 60 வயதிற்கு முன்னர் இறந்துவிட்டால், மனைவி/கணவன் இத்திட்டத்தில் தொடர்ந்து பங்களிப்பு செய்யலாம் அல்லது திட்டத்தில் இருந்து வெளியேறவும் அனுமதிக்கப்படுகிறது.

மாதம் செலுத்தும் தொகை விவரம் 

 • இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் தனது வயதுக்கு ஏற்ப மாறுபட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும்.
 • பயனாளியின் வயது 18 என்றால் மாதம் ரூ.55 மட்டும் செலுத்தினால் போதும்.
 • பயனாளியின் வயது 30க்கு மேல் இருந்தால் மாதம் ரூ.100 செலுத்த வேண்டும்.
 • பயனாளி 40 வயதைக் கடந்தவராக இருந்தால் மாதம் ரூ.200 செலுத்த வேண்டும்.
 • தனது 60 வயது வரை இந்த திட்டத்தில் தொகையை செலுத்துவதன் மூலம் 60 வயதுக்கு பின் மாத ஓய்வூதியமாக ரூ.3000 பெறலாம்.
 • நீங்கள் செலுத்தும் தொகையை மத்திய அரசு மாதம் மாதம் செலுத்தி வரும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents Needed)

 1. வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது ஜன் தன் கணக்கு
 2. ஆதார் அட்டை
 3. மொபைல் எண்

PM-SYM திட்டத்தின் விண்ணப்பிப்பது எப்படி?

திட்டத்தில் இணையும் போதே நாமினிக்களின் பெயரையும் பதிவு செய்யலாம். திட்டத்தில் பதிவு செய்தபிறகு லேபர் யோகி கார்டு வழங்கப்படும். இதற்காக மத்திய தொழிலாளர் துறை சார்பில் பதிவு முகாம்களும் நடத்தப்படுகின்றன. பொது சேவை மையங்கள் வாயிலாகவே இத்திட்டத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *