Iyarkai Uram

ரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்

இயற்கை உரம்:

விவசாய நிலங்களின் கழிவுகளை தீயிட்டுக்கொளுத்துவதால் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க இந்தப் புதிய முறை பெரிதும் கைகொடுக்கிறது. அதாவது வெறும் 5 ரூபாய் மாத்திரைகளைக் கொண்டு, கரைசல் தயாரித்து, நிலத்திற்கு தெளிப்பதன் மூலம், விளைநிலங்களின் கழிவுகளை எளிதில் மண்ணுக்கு உரமாக மாற்றிவிடலாம்.

எரிக்கும் முறை (Burning Method)

பொதுவாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை முடித்தபின்பு, விவசாயக் கழிவுகள் தேங்கிவிடும். இதனை அப்புறப்படுத்த ஏதுவாக, நிலத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, அதன் சாம்பலை மண்ணுக்கு உரமாகக்குவதை, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகள் அழிவதுடன், காற்று மாசுபாடு அதிகரித்து பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது.

புதிய மாத்திரை(New Capsule)

எனவே இம்முறையைத் தவிர்த்து, மாற்று வகையில், விவசாய விளை நிலக்கழிவுகளை எளிதில் மண்ணுக்கு உரமாக மாற்றுவதற்காக, பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Agricultural Research Institute IARI) விஞ்ஞானிகள் புதிய வகை மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், விவசாயிகளின் நிதிச்சுமையைப் போக்குவதற்காக, இந்த மாத்திரை வெறும் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைநிலக்கழிவுகளை உரமாக மாற்ற குறைந்தபட்சம் 4 மாத்திரைகள் போதும். இக்கரைசலில் உள்ள பூஞ்சாணங்கள், பயிருக்கு நன்மைசெய்யும் பூச்சிகளைப் பாதுகாப்பதுடன், மண்ணையும் பொலபொலப்பானதாக மாற்றிவிடுகிறது.

கரைசலை எப்படித் தயாரிப்பது? (How to prepare solution)

  • 150 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கலந்து கொதிக்கவைக்கவும். அப்போது அதில் உள்ள மாசுக்கள் அனைத்தும் வெளியே வந்துவிடும்.
  • சூடு ஆறியவுடன், 5 லிட்டர் தண்ணீரில் கலக்கவும். பின்பு 50 கிராம் கடலை மாவு (Gram Flour) சேர்க்கவும்.
  • இந்தக் கலவையுடன் 4 மாத்திரைகளைப் போட்டுக் கலக்கவும். இதனைத் தயாரிக்கப் பெரிய அளவிலான மண்பானை அல்லது பிளாஸ்டிக் டிரம்களைப் பயன்படுத்துவது நல்லது.
  • வெதுவெதுப்பான இடத்தில் இந்தக் கரைசலை 5 நாட்கள் வைக்கவும்.
  • மேலே ஆடை போன்று படியும். அதனை அவ்வப்போது நன்கு கலக்கிவிடவும்.
  • தயாரிக்கும்போது, முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்கவேண்டியது அவசியம்.
  • பின்னர் தண்ணீரில் இந்தக் கரைசலைக் கலந்துவிடவும். இந்த 5 லிட்டர் கரைசல், 10 குவிண்டால் கழிவுகளை உரமாக மாற்றப் போதுமானது.

மேலும் விபரங்களுக்கு 011 2584 3375 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி