சாணம் விற்பனை

ஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க

ஆட்டு சாணம் விற்பனை | Village Based Business Ideas in Tamilnadu

நகர்புறத்தில் உள்ளவர்கள்தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பை தெரிந்து கொண்டு செயலில் இறங்குகின்றனர். மேலும், இவர்களுக்கு தேவையான 80 சதவீத மூலப்பொருள்கள் கிராமங்களில் இருந்துதான் கிடைக்கிறது.

கிராமங்களில் உள்ள மக்கள் புதிய வாய்ப்பைகளை தெரிந்து, செயலில் இறங்கினால் மிக அதிகமாக வருமானம் பெற முடியும் என்பதற்கு சிறந்த ஓர் எடுத்துகாட்டு, இந்த ஆட்டு சாணம் விற்பன. ஆட்டு சாணத்தில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் காரணமாக இயற்கை விவசாயத்தில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் பாலைவனத்தில் விவசாயம் செய்ய அதிக அளவில் ஆட்டு சாணம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இந்தியாவில் 1 கிலோ ஆட்டு சாணம் அமோசான் மற்றும் பிளிப்கார்ட் – டில் ரூபாய் 200 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆதாரம்

நிச்சயமாக.

விற்பனை என்ன ? நீங்களே ஏற்றுமதியே கூட செய்யலாம்.

ஆட்டு புழுக்கையை சேமித்து அதனை ஆட்டு சாணமாக்கி, உரமாக்கி 5 / 10 / 25 / 50 கிலோ முட்டைகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி சாத்தியம் தான்.

மேலே காணும் அட்டவணையில் ஆட்டு புழுக்கை / சாணம் பயன்படுத்துவதால் உள்ள பயன்களை பற்றிய சில தகவல்களை நாம் அறியலாம்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில ஆட்டு சாணம் ஏற்றுமதி செய்பவர்களின் பட்டியலை இங்கே பகிர்கிறேன்.

01. டாக்டர் பி.விமலநாதன், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர், அஜினெக்ஸ் பிசினஸ் வென்ச்சர்ஸ் பி லிட் & அஜில் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ், # 1/263 ஏ, தேவரசம்பட்டி, ஏ.ஜெட்டி ஹள்ளி, தர்மபுரி – 636 807 மொபைல் : 98949 99830

இணைய முகவரி : http://www.agileindiaexports.com/

02. திரு முருகேசன், இயக்குனர், விஜய் எக்ஸ்போர்ட்ஸ், # 4/85 A, அய்யனார் கோவில் தெரு, அலவகோட்டை, சிவகங்கை – 630 553 மொபைல்: 99651 07335

இணைய முகவரி : www.vijayexports.net.in

03. திரு. ICA அருண், # 97 ஜG/7A/1, 3வது தெரு, டீச்சர்ஸ் காலனி (மேற்கு), தூத்துக்குடி – 628 008 மொபைல்: 98946 14630 தொலைபேசி: 0461 – 2311995 மின்னஞ்சல்: hkintut@gmail.com

இணைய முகவரி : https://homekrafts.webs.com/

இந்த புதிய விதையை நமது சிறுதொழில்முனைவோர்.காம் வாசகர்களிடம் கொடுத்தாச்சு, அதை மரம் ஆக்குவதும், மக்க செய்வதும் உங்கள் கைகளில்.

நன்றி மற்றும் சுதந்திர தின வாழ்த்துக்களுடன் 
திரு. முருகானந்தம்
BJP  மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி  செயலாளர்

சிவகங்கை
9943847847

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி


Comments

One response to “ஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க”

  1. MAGALINGAM

    Sir எங்களிடம் ஆட்டு புழுக்கை மற்றும் இயற்கை சார்ந்த பொருட்கள் இருக்கு அதனை விற்பனை பண்ண வழி முறை தெரியல அதன் விவரம் சொல்லுங்கள் உதவுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *