online jobs from home without investment in tamil

வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யலாம்

8405

வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யலாம்| online jobs from home without investment in Tamil

வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் பணியாற்றுவதன் மூலம் ( highest paying freelance jobs in tamil ) கூடுதல் வருமானம் ஈட்ட நினைப்பவர்களுக்கு Freelancer பணிகள் மிகப்பெரிய நம்பிக்கையை தருகின்றன. அதிலும் சில குறிப்பிட்ட துறைகளில் Freelancer பணிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிகளவில் Freelancer பணிகள் கிடைக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை. அதே நேரம் மிகவும் அரிய சில பிரிவுகளில் கிடைக்கும் Freelancer பணிகளை செய்ய உரிய ஆட்கள் இல்லாததால், பிற பிரிவுகளைக் காட்டிலும் அதில் கூடுதல் வருமானமும் கிடைக்கும். உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்களின் பணிகளை செய்து முடிக்க, Freelancer-களை நாடுகின்றனர். சம்பந்தப்பட்ட பணியை செய்து முடிக்கத் தேவையான திறமை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாராளமாக அந்தப் பணியை உங்களுக்கு கேட்டு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் இன்று மிகப்பெரிய இணைப்பு பாலமாக விளங்குவதால், 99% பணிகள் ஆன்-லைன் மூலமாகவே நடைபெறுகின்றன.

 

நூற்றுக்கணக்கான Freelancer பணிகள் ஆன்லைன் தேடலில் கிடைத்தாலும், சுமார் 10 முதல் 15 பிரிவுகள், மிக அதிக வேலை வாய்ப்புகளை கொண்டவையாக கருதப்படுகின்றன.அதுபற்றிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் விரிவாக அளிக்கப்பபட்டுள்ளன.

 

வெப் டெவலப்மெண்ட் & டிசைனிங் ( Web Development & Designing )

இந்த துறையில் Freelancer பணிகள் ஏராளமாக இருப்பதால், எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். 2015ம் ஆண்டு நிலவரப்படி, Most wanted Freelancer பணிகளில் இந்த வெப் டெவலப்மென்ட் & டிசைனிங் ஏழாவது இடத்தில் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இதனை எளிதாக கற்றுக் கொள்ளலாம் என்பதால், இந்த துறையில் Freelancer-களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகவே இருக்கிறது. எனினும், தனித்துவமான கண்ணோட்டம் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு டிசைன் செய்பவரே, இந்த துறையில் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும். Designing மற்றும் Coding மட்டுமின்றி .NET, Java, Dreamweaver உள்ளிட்டவை தெரிந்திருப்பதும், WordPress பற்றி அறிந்திருப்பதும் இந்த பிரிவில் Freelancer-களுக்கு ( ( best freelance jobs 2020 in tamil ) மிகவும் கை கொடுக்கும்.

 

கிராஃபிக் டிசைனர் ( Graphic Designing ) online jobs from home without investment in tamil

கிராஃபிக்ஸ் டிசைனிங் என்பது முற்றிலும் வேறு மாதிரியான பிரிவு. பத்திரிகைகள், வார இதழ்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு கிராஃபிக்ஸ் பணிகளை செய்து கொடுக்க வேண்டும். இதுமட்டுமல்லாது, ஆயத்த ஆடை தயாரிப்பு துறையிலும், கிராஃபிக்ஸ் Freelancer டிசைனர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, தொழில்ரீதியாக உரிய பயிற்சி மற்றும் சில Course-களை படித்த பிறகு இந்த துறையில் Freelancer-ஆக கால்பதித்தால், கூடுதல் வாய்ப்புகளை பெற முடியும்.

 

எஸ்.இ.ஓ ( Search Engine Optimization ) -SEO

தற்போதைய டிஜிட்டல் சூழலில் Search Engine Optimization (SEO)என்பது மிகவும் பிரபலமாக பேசப்படும் விஷயமாகி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்கு பார்வையாளர் வருகையை அதிகரிக்கச் செய்ய என்னென்ன அடிப்படை விஷயங்களை செய்ய வேண்டும் என்பதை செய்வது தான் SEO-வின் பணியாக இருக்கிறது. குறிப்பாக Search Engine எனப்படும் தேடு பொறிகளின் மூலமாக (யாஹூ, பிங், கூகிள்) மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலமாக ஒரு சம்பந்தப்பட்ட தளத்தின் பார்வையாளர் எண்ணிக்கையை SEO கற்றுக் கொண்ட நபரால் உயர்த்த முடியும். அதாவது, இணையதளம் உபயோகிப்பவர், தனது தேவைக்காக இணையதளத்தில் உள்ள Search Engine-ல் தேடும் போது, சம்பந்தப்பட்ட தளத்தை பிரதனமாக முன்னிறுத்துவதன் மூலம், அந்த நபரின் வருகையை இணையதளத்திற்கு உறுதிப்படுத்த முடியும். இந்தப் பணியை செய்யும் SEO-வில் உரிய அனுபவம் பெற்றவர்களுக்கு Freelancer வாய்ப்புகள் ( most in demand freelance jobs 2020 in tamil) அதிகளவில் காத்திருக்கின்றன.

 

பிளாக் ரைட்டர் – வலைப்பூ எழுத்தாளர் ( Article and Blog Writing )

பத்திரிகை துறையில் செய்திகளை வழங்குவது ஒரு விதம் என்றால், ஒரு நிறுவனம் சொல்லும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை பற்றி, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எழுதித் தருவது வேறொரு விதம். அந்த வகையில் Blog Writing பணிகளுக்கு ஏராளமான Freelancer வாய்ப்புகள் கிடைக்கின்றன. தொலைக்காட்சி விளம்பரங்கள் என்பதை தாண்டி, இணையதளத்தில் தங்களின் பொருட்களை, தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென பிரத்யேக வலைத்தளம்/Blog வைத்திருக்கின்றன. எனவே, அவர்கள் விரும்பும் விதத்தில், அவர்களின் படைப்புகள் குறித்த அடிப்படை விஷயங்களை அவர்கள், சம்பந்தப்பட்ட Blog-ல் பதிவு செய்கின்றனர். இதன் மூலம் அதிகளவு வாடிக்கையாளர்களிடம் அதனை விளம்பரப்படுத்த முடியும் என்பதால், Article மற்றும் Blog Writing பிரிவில் Freelancer வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறது.

 

மொழிபெயர்ப்பாளர் ( Translation ) online jobs from home without investment in tamil

மொழிபெயர்ப்பு பிரிவில் பல லட்சம் Freelancer வாய்ப்புகள் உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. நாளேடு விளம்பரத்தில் தொடங்கி MNC நிறுவனத்தின் தயாரிப்புகளை பிராந்திய மொழிகளில் பிரபலப்படுத்துவது வரை அனைத்து தேவைக்கும் Translation மிக அவசியமான விஷயமாகி விட்டது. இதுமட்டுமின்றி, இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள், வெப் சீரிஸ், netflix, amazon prime போன்ற நிறுவனங்கள், திரைப்படங்கள், நாடகங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன. இந்த பணிகளுக்கு Freelance Translator-கள் அதிகளவில் தேவைப்படுவதால், வேலைவாய்ப்புகளும் அதிகளவில் இருக்கின்றன. இந்திய மொழிகள் மட்டுமல்லாது, அயல்நாடு மொழிகளான Japanese, French, Chinese, German உள்ளிட்டவற்றை அறிந்துள்ளவர்களுக்கு நல்ல வருவாய் ஈட்டும் வேலையும் இந்தப் பிரிவில் கிடைக்கும். இவை தவிர Language Interpreter என்ற அடிப்படையில், ஆன்-லைனிலும் Freelance வாய்ப்புகளை பெற முடியும்.

 

சோஷியல் மீடியா மேஜேனர்ஸ் ( Social Media Managers )

சமூக வலைதளங்களின் அபரிமித வளர்ச்சி அதனை நிர்வகிப்பதற்கான வேலைவாய்ப்புகளையும் அதிகரித்திருக்கிறது. அந்த வலையில் ஒரு நிறுவனத்தின் பிசினஸ் யுக்தி மற்றும் அந்த நிறுவனம் சார்ந்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ள Social Media பேருதவியாக இருக்கிறது. சிறிய காபி ஷாப் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை சமூக வலைதளங்களை பயன்படுத்தி, தங்களது பிராண்டுகளை முன்னிலைப்படுத்தும் முயற்சியை முன்னெடுக்கின்றன. எனவே, நிறுவனங்களின் சமூக வலைதளங்களை மேலாண்மை செய்யும் Freelancer பணி வாய்ப்புகள் ( freelance projects in tamil ) ஏராளமாக உருவாகி வருகின்றன.

 

வீடியோ எடிட்டர்ஸ் ( Video Editors )

யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், Freelance Video Editor பணி வாய்ப்புகள் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. Avid, FCP உள்ளிட்ட சாஃப்ட்வேர் அனுபவம் உள்ளவர்கள், தங்களுடைய வீட்டில் இருந்தப்டியே Freelance பணிகளை மேற்கொள்ள முடியும். இந்தப் பணியிலும் Creativity என்பது மட்டுமே ஒவ்வொரு Freelance-ஐயும் தனித்துவமாக காட்டும் என்பதால், அனுபவம் அவசியம். தற்போதைய சூழலில், ஒவ்வொரு வீடியோவிலும் ஏதாவது ஒரு தனித்துவமான விஷயம் இருந்தால் மட்டுமே, அது வாடிக்கையாளர்களை அல்லது இணையவாசிகளை கவரும் என்பதால், அந்த அம்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு காரணியாக Freelance Video Editor திகழ்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. online jobs from home without investment in tamil

 

கல்வி கற்பித்தல் ( Teaching and Tutoring )

கற்பித்தல் துறை என்பது குருகுல கல்வி ஆரம்பித்த காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்தாலும், இணையதளம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, உலகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளன.உதாரணமாக, இந்தியாவில் ஆசிரியர் பயிற்சி பெற்ற ஒருவர், அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி குழந்தைக்கு, ஆன்-லைன் மூலமாகவே அனைத்து பாடப் பிரிவுகளை கற்பிக்க முடியும். இதற்கான வாய்ப்புகளை பெற்றால், ஒரு சில மணி நேரம் பயிற்றுவிக்க, அமெரிக்க டாலர்களில் வருமானம் பெறலாம். மேலும், இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளை தெரிந்தவர்கள், ஆன்-லைன் மூலமாகவே மொழிப் பயிற்சியும் அளிக்க முடியும் என்பதால், Freelance பணிகளும் ( freelance jobs from home in tamil ) இதில் ஏராளமாகவே கிடைக்கின்றன.

 

இவை தவிர கீழ்கண்ட பிரிவுகளிலும் குறிப்பிடத்தக்க அளவு Freelance பணிகள் கிடைக்கின்றன.

Data Entry Jobs

Legal Services

Photography

Human Resource Management

Architecture Services

Logo Design and Illustration

Game Development

3D Modelling and CAD

Branding and Public Relations

Admin Support or Assistance

Logo Making

Poster Design

மேற்கூறிய பிரிவுகளில் கிடைக்கும் Freelancer பணிகளை ( freelance jobs for students in tamil ), பயன்படுத்திக் கொண்டு, அதன் மூலம் வருமானம் ஈட்டும் அதே நேரம், உரிய தகுதிகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் அந்த வருமானத்தை பல மடங்காக பெருக்கிக் கொள்ள முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் எந்தெந்த முன்னணி இணையதளங்கள் Freelancer பணிவாய்ப்புகளை வழங்குகின்றன என்று இனி பார்க்கலாம்.

1) ஃப்ரீலான்ஸ் இந்தியா ( Freelance India )

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இந்த இணையதளம், Freelancer வாய்ப்புகளை அளிப்பதில் முதன்மையான தளங்களில் ( best website for freelancing in india ) ஒன்றாக கருதப்படுகிறது. இலவச பயனாளர் சேர்க்கை மற்றும் கட்டண பயனாளர் சேர்க்கை என இரு விதமான பயனாளர் சேர்க்கையை இந்த இணையதளம் வழங்குகிறது. பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் இந்த தளத்தில் உங்களின் மெம்பர்ஷிப்பிற்கு ஏற்ப Freelance பணிகள் கிடைக்கும். இதன் User Interface மற்றும் User Experience design மிகவும் சிக்கலானதாக இருப்பதால், எல்லோராலும் இந்த இணையதளத்தின் செயல்பாடுகளை முதல் முறையிலேயே புரிந்து கொள்வது கடினம். online jobs from home without investment in tamil

 

2. அப்ஒர்க் ( Upwork )

Freelance பணிகளுக்கென இந்தியாவின் மிக முன்னணி இணையதளம் இருக்கிறது என்றால், அது இந்த Upwork தளம் தான் என்று தைரியமாக கூறலாம். பெரும்பாலான பிரிவுகளில், அனுபவம் வாய்ந்த மற்றும் புதுமுக தொழில் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கிறது இந்த இணையதளம். Pinterest, Panasonic, Zendesk மற்றும் Unilever போன்ற பல முன்னணி நிறுவனங்கள் Upwork தளத்தின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர். முன் அனுபவம் இல்லாத Fresher ஆக இருந்தாலும், கூட உங்களுக்கு ஏற்ற துறையில், Freelance வேலையை நீங்கள் இந்த தளத்தில் பெற முடியும்.

 

3. ஃப்ரீலான்சர்.com ( Freelancer.com )

சிறிய நிறுவனங்கள், தங்கள் பணிகளை Freelance முறையில் வழங்க இந்த இணையதளத்தை ( freelance tamil websites ) விரும்பி நாடுகின்றனர். இந்தியாவின் மிகச் சிறந்த பலனளிக்கும் Freelance இணையதளமாக இது கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட பிரிவில், கொடுக்கப்பட்டுள்ள Freelance பணிக்கு, யாரெல்லாம் விண்ணப்பித்துள்ளனர், அவர்களின் தகுதி, திறமை என்னவென்று கூட, இதில் உறுப்பினராக இணைபவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தளத்தின் வடிவமைப்பு இருப்பது சாதகமான அம்சம். முன் அனுபவம் இல்லாத Freelance ஆக இந்த தளத்தில் இணைந்து, பணி வாய்ப்புகளை பெறுவது ஆரம்பத்தில் சற்று சவாலானதாக இருந்தாலும், ஒன்றிரண்டு பணிகளை சிறப்பாக நீங்கள் முடித்துக் கொடுத்தால், உங்கள் Profile மதிப்பு படிப்படியாக கூடும். அதன் பின்னர் Freelance பணி வாய்ப்புகள் உங்களை தேடி அதிகளவில் வரக் கூடும்.

 

4. ட்ரூலான்சர் ( Truelancer )

அதிக வருவாய் அளிக்க கூடிய Freelance பணிகள், இந்த இணையதளத்தில் அதிகம் இடம்பெற்றிருக்கும் என்பதால், அனுபவ வாய்ந்த Freelancer-கள் இந்த தளத்தை அதிகம் விரும்புகின்றனர். வெப் டிசைனிங், மார்க்கெட்டிங், லோகோ டிசைன், கம்ப்யூட்டர் புரோகிராமிங், காப்பி ரைட்டிங் என பல்வேறு பிரிவுகளிலும் Freelance பணி வாய்ப்புகள் இந்த தளத்தில் அதிகளவில் இருக்கிறது. பணிகளை நிறைவு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய வருவாய் கிடைப்பதையும் இந்த இணையதளம் உறுதி செய்வது, இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

 

5) 99 டிசைன்ஸ் ( 99Designs )

டிசைனிங் பிரிவில் Freelance பணிகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற இணையதளமாக இது திகழ்கிறது. இணையதளம் டிசைனிங், டி-ஷர்ட் லோகோ பிரசுரம் உள்ளிட்ட இதர பணிகள் தான் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. 99Designs இணையதளத்தில் Freelancer ஆக பணியாற்றுவது என்பது, போட்டிகளில் பங்கேற்பதற்கு சமமானதாக இருக்கும். ஏனென்றால், இங்கு போட்டிகளும், திறமை வெளிப்படுத்தும் தன்மையும் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

 

6) இவாண்டோ ஸ்டூடியோ ( Evanto Studio )

வெப் டிசைனிங், அனிமேஷன், வீடியோ எடிட்டிங் போன்ற பிரிவுகளில் குறுகிய கால அல்லது நீண்ட கால Freelance பணிகளை தேடுபவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் இந்த இணையதளம். இங்கு பதிவு செய்து கொண்ட Freelancer-கள் தங்களின் திறமையை பிரதிபலிக்கும் வகையில் சாம்பிள், எதிர்பார்க்கும் சம்பளம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து வைத்திருப்பார்கள். இவற்றை பார்வையிடும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறமையாளரை தேர்வு செய்து Freelance பணியை வழங்கும்.

 

7) டாப்டல் ( Toptal )

இந்தியாவில் உள்ள மற்ற Freelancer தளங்களை போல் அன்றி, இந்த இணையதளத்தில் ( best website for freelancing in tamil ) அனுபவம் மிக்க Freelancer-கள் மட்டுமே பயனாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறிப்பாக, பயனாளராக தேர்வு செய்யப்படும் முன்பாக சம்பந்தப்பட்ட துறையில் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பயனாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வளவு கெடுபிடி ஒருபக்கம் இருந்தாலும், Airbnb, Emirates, JP Morgan போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக இருப்பதால், ஊதியமும் அதிகமாகவே கிடைக்கும். online jobs from home without investment in tamil

 

8) ஒர்க் அன் ஹையர் ( WorknHire )

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணிகளை செய்து கொடுக்கும் இந்த இணையதளம், Freelancer-களின் பாதுகாப்பான முறையில், ஏமாற்றப்படாமல், பணி செய்ததற்கான கட்டணத்தை பெறவும் வழி வகை செய்துள்ளது. மேலும், Freelancing செய்பவர் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இருக்கும் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களையும் இந்த தளம் வழங்குவதால், எதிர்காலத்தில் மேலும் பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் இந்த தளம் கை கொடுக்கிறது.

 

9) குரு ( Guru )

அனுபவம் வாய்ந்த Freelancer-களுக்கு இந்த தளத்தில் ஏராளமான பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. தங்களின் முந்தைய பணிகளின் Sample-களை காண்பித்து, புதிய பணி வாய்ப்புகளை பெறவும் இந்த தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. பல லட்சம், பகுதி நேர வேலை வாய்ப்புகள் இந்த தளத்தில் இடம்பெற்றிருப்பதால், முக்கியமான Freelancer பணிகளை இந்த தளம் தவற விடுவதில்லை. ஏல முறையில் பணி வாய்ப்புகளை வழங்கும் இந்த தளத்தில், Freelancer-களுக்கான கட்டணம் 100% கிடைப்பதை உறுதி செய்ய escrow payment முறையும் பயன்படுத்தப்படுகிறது. online jobs from home without investment in tamil

 

மேலே குறிப்பிட்ட இணையதளங்கள்( Top Freelancing Sites In India ), இந்தியாவில் Freelancer பணிகளை கொடுக்கும் சிறந்த தளங்களாக திகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஸ்டார்ட் அப் எனப்படும் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் பணிகளை முடிக்க, இதுபோன்ற இணையதளங்களிலேயே பணி வாய்ப்புகளை அளிக்கின்றன. அந்த வகையில், Freelancer பணிகள் மூலம் வருவாய் ஈட்ட நினைப்பவர்களுக்கு, இந்த தளங்கள் உதவிகரமாக இருக்கும்.

 

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி

விளம்பரம்
5 thoughts on “வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *