eTractor

வேளாண்மை புதிய கண்டுபிடிப்புகள் ஒரு லட்சத்தில் டிராக்டர் (eTractor)

2460

வேளாண்மை புதிய கண்டுபிடிப்புகள் | வேளாண்மை தகவல்கள்

வேளாண்மை புதிய கண்டுபிடிப்புகள் ஒரு லட்சத்தில் டிராக்டர் (eTractor)

ஆமாம். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு நிறுவனம் CSIR தாயாரித்துள்ள வெறும் ஒரு இலட்சம் மதிப்பிலான டிராக்டர். விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பாக இது அமையும்.

இது சார்ஜ் செய்யக்கூடிய டிராக்டர். முழுதாக சார்ஜ் போட்டால் ஒரு மணி நேரம் வேலை செய்யும். இதனை இன்னும் மேம்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. வயல் அருகே சூரிய ஆற்றலில் மின்சாரம் சேமிப்புக் கலன் வைத்து அதிலிருந்து இந்த டிராக்டருக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டு விவசாயிகள் வேளாண்மையில் உற்பத்தியை மேம்படுத்தலாம். வரும் காலத்தில் இந்த டிராக்டர் அனைத்து விவசாயிகள் வயல்களிலும் நிற்பது சாத்தியத்துக்கு பக்கத்தில்.

ரூ.999 கபசுர குடிநீர் கஷாயம் விற்பனை செய்ய முகவர்கள் தேவை : தொடர்புக்கு :99527 19883

 

ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்

‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ (Zero Budget Natural Farming) – இது கர்நாடக மாநிலத்தில் வேளாண் ஆர்வலர் திரு. சுபாஷ் பாலேக்கர் மற்றும் கர்நாடக ராஜய ரைத்த சங்கம் இணைந்து 25 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுக்கப்பட்டு அங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு இலாபம் ஈட்டிக்கொடுத்த ஒரு நல்ல வேளாண் முறை. பிறகு தென் மாநிலங்களில் பல இடங்களில் இந்த ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

இயற்கையைச் சார்ந்து பெரிதாக செயற்கை உரம் எதுவும் இல்லாமல் கடன் வாங்குவதற்கான அவசியமின்றி விதையிலிருந்து உரம் வரை, மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவதென நாமே செய்து தன்னிறைவுடன் செய்யப்படும் விவசாய முறை தான் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் என்பது.

அறிவியல் வளர்ச்சியோடு இயற்கைக்கு இயந்த விவசாயமும் உற்பத்தியை அதிகப்படுத்தும் என்ற நம்பிக்கையில் “ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை மேற்கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும், அதன் மூலம் வருகிற 75 வது சுதந்திர தினத்திற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையை அடைய வழி செய்ய முடியும்” என்று நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த முறையை நமது மத்திய அரசே ஊக்குவிப்பதாலும், ICAR இந்த முறையில் உள்ள உற்பத்தி சாத்தியக்கூறுகளைப் பற்றி மேற்கொண்டு ஆய்வுகள் நடத்தி வருவதாலும், வரும் காலத்தில் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

 

Keywords: வேளாண்மை தகவல்கள், வேளாண்மை புதிய கண்டுபிடிப்புகள், வேளாண்மை துறை மானியம், வேளாண்மை கட்டுரை, வளரும் வேளாண்மை

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published.