விவசாயிகளுக்கு கறவை மாடு இலவசம்

விவசாயிகளுக்கு கறவை மாடு இலவசம்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில், கறவை மாடுகள் (Dairy cows) வழங்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • திருச்சி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சார்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பழங்குடியின விவசாயிகள் (Tribe) மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
  • 50 பேருக்கு முழு மானியத்துடன் கறவை மாடுகள் (Dairy Cows) வழங்கப்படுகின்றன.
  • தகுதி மூப்பு மற்றும் முன்னுரிமை அடிப்படையில் கறவை மாடுகள் வழங்கப்படும்.
  • பயனாளிகள், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவராகவும் பழங்குடியினராகவும் இருக்க வேண்டும்.
  • விதவையர் மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • கிராம ஊராட்சியில்நிரந்தரமாக வசிப்பவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
  • தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

    • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2
    • சாதி சான்றிதழ்
    • வருமானச் சான்று
    • இருப்பிடச் சான்று
    • குடும்ப அட்டை
    • ஆதார் அட்டை
    • வங்கிக் கணக்கு புத்தகம்
    • வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பதற்கான சான்று
    • பால் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராகப் பதிவுச்சான்று

    ஆகியவற்றின் நகல்களுடன் துறையூர் பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் வரும் ஜனவரி மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    தகவல்
    க.சிவராசு,
    திருச்சி மாவட்ட ஆட்சியர்