புதிய தொழில் வாய்ப்பு

கிருமிநாசினி தெளிப்பான் சேவை: அதிகரிக்கும் தேவை

551

புதிய தொழில் வாய்ப்பு | கொரோனா தொழில் வாய்ப்பு

கோவிட் 19 தொற்றால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. விற்பனையின்மை, இடம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் ஏற்பட்டுள்ள தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால், தொழில்கள் மூடுநிலைக்கு வந்துள்ளது.

ஒவ்வொரு நெருக்கடியான தருணத்திலும் வாய்ப்புகள் உருவாகும் என்ற கூற்றின்படி இக்கட்டான இந்த சூழலில் கிருமிநாசினி தெளிப்பான் சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் இதற்காக வரும் விளம்பரங்களே இதற்கு சாட்சி.

55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை அமைத்து மாதம் 12000 வருமானம் பெற

புதிய வழிகள்

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கோவிட்-19 தொற்று உள்ள நபரின் வீடு, கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும். இது சென்னை மாநகராட்சியின் பொறுப்பு என்றாலும், பணியாளர்கள் தட்டுப்பாடால் இப்பணி தாமதமாகிறது. இதனால் தனியார் சேவையை மக்கள் நாடும் நிலை எழுந்துள்ளது. இதன் விளைவாக ஒரு புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ளது.

பொது முடக்கத்தால், எம் கான் நடத்தி வந்த லெதர் தொழில் மூடும் நிலைக்கு வந்தது. “பொது முடக்கம் முடிவுக்கு வந்த பின்னர் புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தேன். இன்னும் அது முழு வடிவம் பெறவில்லை என்றாலும், கிருமி நாசினி தெளிப்பான் சேவையும் இதில் அடங்கும்.” என்கிறார் 1 சொலுஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான கான். இந்நிறுவனம் சுத்தகரிப்பு சேவையை வழங்குகிறது.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கிருமி நீக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்:

1. நுழைவாயில் பகுதிகள், காரிடார், மாடிப்படிகள், லிஃப்ட், பாதுகாவலர்களின் அறை, அலுவலக அறைகள், மீட்டிங் அறைகள், தேநீர் பகுதி என உட்புறங்களில் உள்ள அனைத்து இடங்களும் 1% சோடியம் ஹைபோகிளோரைட் அல்லது பினாலிக் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

2. மக்கள் அதிகம் உபயோகிக்கும் பகுதிகளான லிஃப்ட் பட்டன்கள், கைப்பிடிகள், இன்டெர்காம், அலுவலக உபகரணங்களான தொலைபேசி, ப்ரின்டர்/ஸ்கானர், மற்றும் மற்ற மெஷின்கள் ஆகியவை தினந்தோறும் இரண்டு முறை சுத்தமான லினென் துணி அல்லது 1% சோடியம் ஹைபோகிளோரைட்டில் முக்கிய துணியினால் துடைக்கப்பட வேண்டும்.

3. அடிக்கடி தொடப்படும் மேஜை, இருக்கை கைப்பிடி, பேனா, ஃபைல், டயரி, கீபோர்ட், மவுஸ், மவுஸ் பேட் மற்றும் டீ/காபி மெஷின் ஆகியவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.

4. மெட்டாலிக் பொருட்களான கதவு கைப்பிடி, செக்யுரிடி பூட்டு ஆகியவை 70% ஆல்கஹால் கொண்டு சுத்தம் செயாலாம், இதற்கு ப்லீச் உகந்ததல்ல.

5. அதிக அசுத்தமான பகுதிகளில் (டாய்லட் பவுல் அல்லது அதன் சுற்றுப்புறங்களில்) கிருமி நாசினியை உபயோகிக்காதீர்கள், அவ்வாறு தெளிக்கும் போது மேலும் தொற்று அதிகரிக்கக்கூடும்.

6. தொற்று பரவாமல் இருக்க, சுத்தப்படுத்திய பின் அந்த துணிகளை (மாப், துடைக்கும் துணி) தனியாக ஒரு பையில் போடவும். கையுறை அணிந்து அந்த பையை கட்டி அப்புறப்படுத்தவும்.

7. சுத்தம் செய்யும் பொருட்களை அடுத்த உபயோகத்திற்கு முன்பு உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும். பக்கட்களை ப்லீச் சொலுஷன் அல்லது சூடான தண்ணீரில் சுத்தம் செய்யவும்.

Source: MoHFW

அறக்கட்டளை தொடங்கி அரசின் நிதி உதவி பெற

அதிகரிக்கும் தேவை

“பல்வேறு தளத்திற்கேற்ப இந்த கிருமி இருக்கும் நிலையில் கெமிகல் நாசினியால் இவற்றை அகற்றிட முடியும். ஆதலால், தொற்று ஏற்பட்ட நபரின் வீட்டை தொற்று உறுதியானவுடன் கிருமி நாசியினால் சுத்தம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது மேலும் பரவாமல் இருக்க உதவும்,” என்கிறார் யா ஃபெசிலிடி சர்வீஸ் நிறுவனத்தின் ஜி சாலமன் ஜசின் ஃபின்னே

புதிய வாய்ப்பை நிலைநிறுத்துதல்

புதிதாக உருவாகியுள்ள இந்த வாய்ப்பு நீடிக்குமா? ஆம், என்கின்றனர் வணிக உரிமையாளர்காள்.

இந்தியாவில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது சென்னை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் தொற்றியியல் நிபுணர்களின் கணிப்புகள் படி, இந்த கிருமி மேலும் சில மாதங்கள் நீடித்திருக்கும். தமிழகத்தில் இந்த தொற்று அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உச்சத்தை தொடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், வீடு மற்றும் அலுவலங்களில் கிருமி நாசினி தெளிப்பான் சேவையின் தேவை அதிகரிக்கும்.

“தற்போதைய சூழலில், கிருமி நீக்கம் சேவை, குறைந்தது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிலைக்கும்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஷாரிக் & கோ நிறுவனர் முகமத் ஷாரிக். இந்நிறுவனம் கட்டுமானத் தொழில் மற்றும் கிருமி நீக்கம் சேவையை வழங்குகிறது.

நீண்ட கால அடிப்படையில், சேவையை மேலும் விரிவாக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று காலம் பின், வீடு மற்றும் அலுவலகங்கள் ஆண்டு ஒப்பந்த(AMC) அடிப்படையில் சேவைகளை தொடர்ந்து பெறலாம். நிறுவனத்தின் அளவு, நேரம் அடிப்படையில் சேவைகளை விரிவாக்கி கொள்ளலாம்.

நில அளவை பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரிய இடம் என்றால் குறைவான யூனிட் கட்டணம் என மொத்த அளவு அடிப்படையில் சதுரடி கட்டணம் நிர்யணிக்கப்படுகிறது.

ரூபாய் 4000தில் இந்த தொழிலை தொடங்க, கெமிக்கல் மற்றும் ஹாண்ட் வாஷ் லிகுட் மொத்தமாக வாங்க :
மேலும் விவரம் அறிய : +91 88383 03139 விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி

ads




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *