நெற்பயிரைத் தாக்கும் பழ நோய்

நெற்பயிரைத் தாக்கும் பழ நோய் – கட்டுப்படுத்த சில இயற்கை வழிமுறைகள்!

பழ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நெல் மணிகளை உழவியல் மற்றும் ரசாயன முறைகளில் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து பார்ப்போம்.

நெல் பழ நோய் (Paddy fruit disease)

நெல் பழ நோய் அஸ்டிலாஜீனாய்டியா வைரன்ஸ் என்னும் பூஞ்சணத்தால் உண்டாகிறது. சாதாரணமாக இந்நோய் நெற் கதிரின் ஒரு சில நெல்மணிகளில் மட்டும் தென்படும். இந்நோய் பாதிக்கப்பட்ட நெல்மணிகள் மஞ்சள் நிறமாக மாறி, மிருதுவான பந்து போன்று 1 செ.மீ அளவுக்கு வளரும்.

நெல் மணிகள் முதிர்ச்சி அடையும் போது, மஞ்சள் நிறம் கரும் பச்சை நிறமாக மாறும். தற்போது, இந்நோய் வேகமாக பரவி கணிசமாக மகசூல் இழப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

இப்பூசணம் பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்களை எளிதாகத் தாக்கும் தன்மை கொண்டது. அதிகமான மழை மற்றும் காற்றில் அதிகமான ஈரப்பதம் ஆகியவை இந்நோய் பரவ சாதகமாக இருக்கின்றன.

மண்ணில் அதிகமான தழைச்சத்து மற்றும் காற்று ஆகியவை இந்நோய் அருகில் உள்ள வயல்களுக்கு பரவ ஏதுவாக உள்ளது. மேலும், பின்பருவ பயிர்களில் இந்நோய் அதிகம் தென்படுகிறது.

இந்நோயை கீழ்கண்ட முறைகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

பூஞ்சாணக் கொல்லி (Fungicide)

  • நெல் விதைகளை கார்பண்டசிம் என்ற பூசணக் கொல்லியை பயன்படுத்தி ஒரு கிலோவிதைக்கு 2 கிராம் என்ற அளவில் விதைநேர்த்தி செய்து வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நெல் மணிகளை நோயின் ஆரம்ப நிலையில் அழிக்க வேண்டும்.
  • இதனால், இந்நோய் அருகில் உள்ள நெற்பயிர்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தலாம். தழைச்சத்தை பிரித்து, இடைவெளி விட்டு இட வேண்டும்.

 உழவியல் முறைகள் (Plowing methods)

  • இந்நோய் அதிகமாக தாக்கும் இடங்களில், முன்பருவ நடவு செய்ய வேண்டியது மிக மிக முக்கியம்.
  • பயிர்கள் ஈரமாக இருக்கும் பொழுது, வயல்களில் உரம் இடுதல் மற்றும் களை எடுத்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
  • அறுவடைக்கு முன்பு பழ நோய் பாதிக்கப்பட்ட மணிகளை பிரித்து எடுத்து அழிப்பதன் மூலம் அடுத்தப் பருவத்திற்கு வயலில் நோயின் தீவிரமாவதை தடுக்க முடியும்
  • இரசாயன முறைகள் (Chemical methods)

    நெற்பயிர் புடைப் பருவத்தில் இருக்கும் போது ஒரு முறையும், 50% பூக்கும் பருவத்தில் இருக்கும் போது, ஒருமுறையும் கீழ்கண்ட ஏதாவது ஒரு பூசணக் கொல்லியை தெளிப்பதன் மூலம் இந்நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

    பிராப்பிகனாசோல் 25 ஈ. சி எக்டருக்கு 500 மிலி (அல்லது) காப்பர் ஹைட்ராக்ஸைடு 77 டபிள்யூ. பி. ஹெக்டேருக்கு 1.25கிலோ பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம் என கோயம்புத்தூர், வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *