இடுப்பு , முதுகு ,கழுத்து வலி முழுமையாக குணமாக உதவும் அற்புத தேனீர்

1673

இடுப்பு , முதுகு ,கழுத்து வலி முழுமையாக குணமாகவும் , நல்ல நினைவாற்றலை அதிகரிக்க உதவும் அற்புத தேனீர்:

 

சித்த மருத்துவம்:

தான்றிக்காய் காபி

தேவையான பொருட்கள்:
தான்றிக்காய் – கால் கிலோ
நன்னாரி – 50 கிராம்

செய்முறை:
மேற்கூறிய பொருட்களை ஒன்றின்டாக இடித்து பின்பு வாணலியில் போட்டு நன்று கருக வறுத்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.

தினமும் ஒரு ஸ்பூன் அளவு தூள் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்டவைத்துக் கொள்ளவும்.பின்பு அதனை வடிகட்டி அதனுடன் பால் மற்றும் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தவும்.இடுப்பு வலி குணமாக

பயன்கள்
இந்த தேனீரை தினமும் அருந்தி வந்தால் இடுப்பு , முதுகு , கழுத்து வலி முழுமையாக நீங்கும் மற்றும் நல்ல நினைவாற்றலை உண்டாக்கும் மேலும் மூலசார்ந்த பிரச்சனைகள் , இரத்தமூலத்திற்கும் மிகச் சிறந்த தேனீர். கழுத்து வலி மருத்துவம்

இரவு படுக்கப் போகும் முன்:

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு:

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும். வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC

சிறுதொழில்முனைவோர் .காம் வாசகர்களுக்காக
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
போன் : 96557 58609
covaibala15@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.மேலும் தங்களுக்கு தெரிந்த தொழில் மற்றும் துணுக்குகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நல்ல விசயத்தை இந்த உலகம் அறிய செய்யோம். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *