அடுமனைப் பொருட்கள்

அடுமனைப் பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி

368

அடுமனைப் பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருட்கள் மற்றும் மிட்டாய்கள் தயாரிப்பு குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. விருப்ப முள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு, பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், விவசாயிகளுக்கு புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்துதல், அறுவடையின்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் என பல்வேறு வழிகாட்டுதலை அளித்து வருவதுடன், தொழில் முனைவோராக வேண்டும் என்ற கனவு கொண்டவர்களுக்கு அவ்வப்போது பயிற்சி அளித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும்12 மற்றும் 13ம் தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்தப்பயிற்சி சிறு தொழில்முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே, பயிற்சியின்போது கீழ்க்காணும் அடுமனைப் பொருட்கள், சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகள் எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  • சிறப்பு அம்சங்கள்
  • ரொட்டி வகைகள்
  • கேக் மற்றும் பிஸ்கட்
  • சாக்லேட்
  • கடலை மிட்டாய்
  • சர்க்கரை மிட்டாய் வகைகள்

இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் ரளைய ஆர்வலர்கள் ரூ.1,500.00+ 8% GST செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சி நடைபெறும் இடம்
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் / 641003

பேருந்து நிறுத்தம்
வாயில் எண்7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641003

கூடுதல் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் / 641003 என்ற முகவரியிலும், 0422/6611268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி
Leave a Reply

Your email address will not be published.