காப்பகம்

சிறுவர் மற்றும் முதியோர் காப்பகம் தொடங்குவது எப்படி ?

4865

சிறுவர் மற்றும் முதியோர் காப்பகம் தொடங்குவது எப்படி | muthiyor illam thodanguvathu eppadi

இந்த சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என, பல நல்ல மனங்கள் தவிக்கும்.  ஆனால் அவர்களுக்கு இதுபோன்ற சமூக சேவைகளை செய்வது எப்படி அதற்கு என்ன பதிவுகள் தேவை, யாரை அணுகுவது மற்றும் அதற்கான நிதி உதவி பெறுவது எப்படி போன்ற விஷயங்கள் தெரிவதில்லை எனவே அவர்களுக்கு வழி காட்டும் பொருட்டு, TONY பொது தொண்டு நிறுவனத்தின், தலைவரும், பிரபல அறக்கட்டளை ஆலோசகரும் ஆகிய திரு. A.அந்தோணி புஷ்பதாஸ் MA, BL அவர்களின் பதில், இந்த வார சிறப்பு பதிவாக. நமது சிறுதொழில்முனைவோர்.காம் மின்னிதழில்.

பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்ட ஒரு (Trust) அறக்கட்டளையின் செயல்பாடுகளில் ஒன்றுதான் காப்பகம் தொடங்குதல் இது மாணவர்களையும் முதியவர்களையும் சேர்த்தோ அல்லது தனித்தனியாகவோ தொடங்கலாம்.

எங்கு, எப்படி காப்பகத்தை தொடங்குவது

  1. சிறுவர் இல்லத்தை பொருத்தவரை பள்ளிகளின் அருகிலே அல்லது தனியாகவோ , சொந்தம் அல்லது வாடகை கட்டிடத்தில் துவங்கலாம்.
  2. மருத்துவ உதவி, போக்குவரத்து, பாதுகாப்பு போன்றவற்றை உறுதிசெய்யவேண்டும்.
  3. தங்கும் அறை, தூங்கும் அறை, படிக்கும் இடம்,நோய் தாக்கியவரை தனிமை படுத்தும் இடம், சமையல் அறை, பொருள்கள் பாதுகாப்பு அறை ,வரவேற்பு அறை மற்றும் தூய குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்றவற்றையும், மாணவர்கள் மாலை நேரத்திலேயே விளையாட திடல் அருகில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • முதியோரை பொறுத்தவரை கட்டிலுடன் கூடிய படுக்கை அறைகள், உயரமான படிக்கட்டுகள் இல்லாமலும் அவசர மருத்துவ உதவிக்கு ஒரு மருத்துவ உதவியாளரை உடன் வைத்திருக்க வேண்டும்
  • அவர்களுக்கு பொழுதுபோக்கிற்கு டிவி, தின பத்திரிக்கை மற்றும் யோகா பயிற்சி மாலை நேரங்களில் வீட்டின் காம்பவுண்ட் உள்ளே நடைபயிற்சி செய்ய ஏதுவான அமைப்பும் தங்களது உறவினர் மற்றும் நண்பர்களோடு தனித்து பேச வரவேற்பு மற்றும் விருந்தினர் அறை இருப்பது அவசியம்

காப்பகத்தை அறக்கட்டளை அல்லதா தனிநபர் தொடங்கலாமா

தொடங்கலாம் , அரசிடம் (DSW )அதற்கான விண்ணப்பம் பெற்று பதிவு செய்து கொள்ளலாம். தங்கும் முதியவரிடம் அதற்கான பணத்தையும் வசூல் செய்து கொள்ளலாம்.

ஏன் அறக்கட்டளை மூலமாக  காப்பகம் நடத்த வேண்டும்

1882 இந்திய டிரஸ்ட் சட்டப்படி இரண்டு நபர்களுக்கு மேற்பட்டு பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டு, வரைமுறைக்கு உட்படுத்தப்பட்டு, IT தாக்கல் செய்யப்பட்ட ஒரு அமைப்புதான் டிரஸ்ட். இது ஒரு தனி நபர் அல்ல ஒரு பொது சேவைக்கான அமைப்பாகும். அரசிடமிருந்து நிதி பெறுவதற்கும், வங்கி கடன் பெறுவதற்கும் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் மானியம் பெறவும், FCRA என்ற பதிவுக்கு பின் வெளிநாட்டு நிதி பெறவும் முடியும். ஆகையால் அறக்கட்டளை காப்பகம் நடத்த முக்கியமாக கருதப்படுகிறது.

காப்பகம் தொடங்க தேவையான ஆவணங்கள்:

  1. அறக்கட்டளை பத்திரப்பதிவு
  2. காற்றோட்டமான அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டிட அமைப்பு
  3. தீப்பிடிக்காத கட்டிடம் அதற்கான FIRE CERTIFICATE.
  4. சானிடரி சான்றிதழ்
  5. கட்டிட வரைபடம் மற்றும் பொறியாலயலரிடம் , தங்கும் நபர்களுக்கான போதிய இடவசதி சான்று.
    கட்டிடத்தின் உறுதி தன்மைக்கு சான்று
  6. இவற்றோடு சேர்த்து முக்கியமானதாக (சோசியல் டிபன்ஸ் டிபார்ட்மெண்ட்) சமூக பாதுகாப்புத் துறையில் பெறும் அனுமதிச் சான்று இருக்க வேண்டும்.

மேலும் தங்கள் சந்தேகத்திற்கு விளக்கமும், விவரமும் பெற அழைக்கவும் :

 

திரு. A. அந்தோணி புஷ்பதாஸ் MA, BL
வழக்கறிஞர் & அறக்கட்டளை ஆலோசகர்
+91 98427 71145

 

 

 

Keywords : சிறுவர் மற்றும் முதியோர் காப்பகம் தொடங்குவது எப்படி , how to start ngo in tamil, டிரஸ்ட் பதிவு செய்வது எப்படி, அறக்கட்டளை தொடங்குவது எப்படி ,  டிரஸ்ட் தொடங்கும் முறைகள், அறக்கட்டளைக்கு பணம் பெறுவது எப்படி, how start trust in tamilnadu, how start trust in tamil. முதியோர் இல்லம் தொடங்கும் முறை, சிறுவர்காப்பகம் தொடங்குவது எப்படி, muthiyor illam thodanguvathu eppadi

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *