கெட்டு போன நிலத்தை 60நாட்களில் திரும்ப பெறுவது எப்படி??? how to prepare land for organic in tamil :
20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்தது, அவை முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும்… அவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டு போன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டு விடும்..
20 வகையான விதைகள் :
4 தானியங்கள்
சோளம்
கம்பு
திணை
சாமை, கேழ்வரகு
4 பருப்பு
பாசி பயிர்
உளுந்து
தட்ட பயிர்
கொள்ளு
துவரை, அவரை, மொச்சை
4 எண்ணெய் வித்து
ஆமணக்கு
நில கடலை
எள்ளு
சூரிய காந்தி
4 வாசனை பொருட்கள்
கடுகு
வெந்தயம்
மல்லி
சோம்பு
4 உர செடி
பச்ச பூண்டு
அகத்தி
செனப்பு
நரி பயிர்
பனி பயிர்
இந்த 20 வகையான விதைகளை ஏக்கற்கு 20 முதல் 25 கிலோ வீதம் கலந்து அவைகளில் பொடி வகைகளை மண் மற்றும் குப்பைகளுடன் சேர்த்து கொள்ளவும், நடுத்தர விதைகளை தனியாகவும், பெரிய விதைகளை தனியாகவும் பிரித்து கொண்டு 3 சுற்றுகளாக விதைத்தால் ஓவ்வொன்றும் முளைத்து வளரும். பாதி செடிகள் 60 நாட்களில் பூ வைக்கும். அந்த தருணத்தில் இச்செடிளை மடித்து உழுவ வேண்டும். அவ்வாறு செய்த செடிகளை 10 நாட்கள் அப்படியே விட்டால் அவை மக்கி அந்நிலத்தை விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக மாற்றுகிறது..
– இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி