திரு.S C சேகர்

சிறுதானிய ஆர்வலர், தொழிலதிபர் திரு.S C சேகர் அவர்களின் நச்சென்ற பேட்டி

1901

கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற, அதிசய மனிதரின் அகஷா  வெற்றி பயணம்: Akshaa millet

 

தொழில்கள் பல செய்து, பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுத்து, பல இளம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டிய 64 வயதில் , இளைஞர்போல் சுறுசுறுப்பாக இயங்கும் S.C சேகரை அவரது அலுவலகத்தில் சந்தித்து அவரது விரிவான பேட்டி இதோ:

பல்லாண்டுகளாய் பல நோய்களின் போராடினேன், அதற்கான மருந்து உணவு தான் என கண்டுபிடித்தேன் “உணவே மருந்து” அந்த உணவு சிறுதானியத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என கண்டேன். இன்று ராகி, வரகு, குதிரைவாலி என பல சிறு தானியங்களில் தயாராகும், பல உணவுப் பொருட்களை தயாரித்து வெற்றிகரமான விற்பனை செய்து வருகிறேன். நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்னும் பிரார்த்தனையை இதற்கு காரணம்.

 

கேள்வி: பிளாஸ்டிக் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி என பல தொழில்களில் வெற்றிக் கொடி நாட்டிய தாங்கள் இத்துறையை தேர்வு செய்ய காரணம் என்ன

பதில்: பல ஆண்டுகளாய் ஓய்வின்றி ஆடி ஓடி உழைத்து, அதிக நேரம் ஓட்டல்களில் வெளியூர்களில் சாப்பிடவேண்டிய நிலை. ஒருநாளும் சரியான வேளையில் சாப்பிடவில்லை.

இந்நிலையில் நீரழிவு, ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகிய நோய்கள் வர தொடங்கின. உடலை பரிசோதித்த குடும்ப மருத்துவர், நண்பர்களும் சரி ஒரே பதிலை கூறினார்கள். உணவு பழக்கத்தை மாற்றுங்கள் மூன்று வேளையும் சிறுதானிய உணவுகளை தேர்வு செய்யுங்கள். அதன் மாற்றத்தை விரைவில் நீங்கள் உணர்வீர்கள் என்று ஒரு சேர கூறினார்கள்.

அதன்படி சிறுதானிய உணவுகளை உண்ண தொடங்கினேன். மூன்று மாதங்களில் சர்க்கரை அளவு குறைந்து. ரத்த அழுத்தம் குறைந்து, மன அழுத்தம் ஒரே சீராக இருந்தது, ஆச்சரியமாய் இருந்தது. மகிழ்ச்சி.

இன்னும் எடை குறைந்து இருந்தது, கொழுப்பின் அளவு குறைந்து எதற்கும் கோபப்படும் என் சுபாவம் மாறியது. மனதில் அமைதி குடியேறியது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நாம் போல் எத்தனை கோடிப் பேர் அவதிப்படுகிறார்கள், அவர்களுக்கு இதை தெரிவிக்க வேண்டும் என கருதினேன். அப்படி ஒரு முயற்சியில் இறங்கி சிறு தானிய பொருட்களை தயாரித்து குறைந்த இலாபத்தில் விற்று தமிழக இளைஞர்களை மீட்க வேண்டும், இதை ஒரு வியாபாரமாக கருதக்கூடாது இது ஒரு “புனிதக் கடமை என எண்ணினேன்”.

சென்னையில் 4 லட்சம் பேருக்கு இலவச உடல் பரிசோதனை செய்தோம் அதில் 71% சதம்வீதம் பேருக்கு நீரழிவு, ரத்த அழுத்தம், ரத்தசோகை, அதிக எடை போன்ற நோய்கள் இருந்தன. மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறியதைக் கேட்டு மிகமிக மனதுக்கு கஷ்டமாக இருந்தது எனவே தான் சிறுதானியங்களை சிறு தானியங்களால் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களை தயாரித்து குறைந்த லாபத்தில் விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கினேன்.

கேள்வி: 60 வயதில் தொடங்கி இருக்கிறீர்கள் இதற்குமுன் என்ன தொழில் செய்தீர்கள் உங்கள் இளமைக் காலம் பற்றி கூற முடியுமா?

பதில் : தாராளமாக சிறுவயதில் படிக்கவே கஷ்டப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் சேர்ந்தவன் நான். என்னை பேட்டி கண்ட ஒரு எழுத்தாளர் என்ன எழுதினார் தெரியுமா?

என் பெற்றோரிடம் ஒரு சிங்கிள் நயா பைசாகூட முதலீடாக பெறாமல் தானே உழைத்து சம்பாதித்த சம்பளத்தில் தொழில் தொடங்கி முன்னேறியவர் S.C சேகர் என எழுதினார். அதுதான் 100% உண்மை கிளீனிங் பவுடர் போன்ற பொருள்களை தயாரிப்பு, பிளாஸ்டிக் கவர் தயாரிப்பு, பிளாஸ்டிக் மூலப்பொருட்களை இறக்குமதி, ரியல் எஸ்டேட் என பல தொழில்கள் செய்தேன்.

SC SEKAR

என்னிடம் பணிபுரிந்த பலர் இந்த தொழில் தொழில்களில் வெற்றிகரமாக உள்ளனர். ஆனால் அதில் கிடைக்காத மன நிறைவு இந்த “அக்ஷயா” உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கிடைக்கிறது.
இந்த வணிகத்தை இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும், ஏற்றுமதி செய்ய வேண்டும்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டதுண்டு. இயற்கை விவசாயமும், சிறு தானிய உணவு அவரது இரு கண்கள் போன்ற லட்சியங்கள் எனக் கேள்விப்பட்டு அவரது புத்தகங்களை எல்லாம் தேடிப் படித்தேன். சிறுதானியங்களின் மகத்துவத்தை அறிந்தேன்.

 

கேள்வி: எப்படி இந்த ட்ரேட்மார்க் கண்டுபிடித்தீர்கள்?

பதில் : பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தை மூட வேண்டிய அவசியம் வந்தபோது நானும் என் மனைவியும் “அக் ஷா” என்னும் வார்த்தையே தேர்வு செய்தோம். இதன் அர்த்தம் அப்போது தெரியாது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என வள்ளுவர் கூறியாதல் முதலில் இந்த “அ”என்னும் பெயரில் தொடங்கலாம் என முடிவு செய்தோம்.

ஆனால் சில நாட்களில் இந்த வார்த்தைக்கு “கடவுளின் ஆசீர்வாதம்” என பொருள் என எனது நண்பர் ஒருவர் கூறியபோது அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

 

கேள்வி: தங்கள் தயாரிப்புகளை பற்றி கூறுங்கள்:

பதில் : உடலுக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கும் இந்த உணவுப் பொருட்கள் இந்தியாவின் ஒவ்வொரு சமையலறையிலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்த நவீன உலகுக்கு ஏற்ற உணவு சிறுதானிய உணவு என அனைவரும் புரிய வைக்கும் வரை ஓயமாட்டேன்.

மக்களுக்கு சிறுதானியம் பற்றி நன்கு தெரிகிறது, ஆனால் அதை எப்படி வாங்கலாம், எப்படி தயாரித்து உணவாக உட்கொள்ளலாம், என தெரியவில்லை இதில் பொங்கல் ,அடை, சேமியா என பல உணவுப் பொருட்களை தயாரிக்கலாம்.

எளிதில் குழந்தைகளுக்கும் கூட சீரணம் ஆகும் என என் மனைவி எடுத்துச் சொன்னார்கள் இந்த நேரத்தில் என் மனைவி மேனகா சேகருக்கு மக்கள் சார்பாக நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.இன்றுவரை எங்கள் தயாரிப்புகளை சோதனை செய்வதும் அறிவுரை வழங்கி தரத்தை சோதிப்பது என் மனைவிதான்.

கேள்வி: இந்த உணவில் தன்மை பற்றி கூறுங்கள்:

இந்த சிறுதானிய உணவுகள் எனக்கு ஆரோக்கியம் தந்தன, நோய்கள் ஓடிவிட்டன சுறுசுறுப்பு தானே வந்தது, நல்ல தூக்கம் வருகிறது, மனது அமைதியாக இருக்கிறது. சிறு தானிய உணவை உட்கொண்டால் எந்த நோயும் அணுகாது.

 

கேள்வி :உங்களுக்கு பிடித்த உணவு எது?

பதில்: நான் பல நாடுகள் சுற்றி பல நகரங்களில் 5 ஸ்டார் ஹோட்டல்களில் உணவுகள் சுவைத்தவன். ஆனால் இன்று எனக்கு பிடித்த உணவு கம்மங்கூழ் தான். ஒவ்வொரு இளைஞனும் தினமும் ஒருமுறை கம்மங்கூழ் மோருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

 

கேள்வி: இன்றைய இளைஞர்களுக்கு தாங்கள் ஆலோசனை:

நான் சென்னைக்கு வரும்போது எந்த பணமும் கொண்டு வரவில்லை ஆனால் பல தொழில்களை என் மூத்த அண்ணன் ஒன்று சேர்ந்து செய்து விற்பனை உத்திகளை கற்றேன்.

இந்த சிறுதானிய உணவு பற்றிய இன்றைய இளைஞர்களுக்கு அறிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த சிறுதானிய உணவுகள் மகத்துவம் பற்றிய பல ஊர்களிலும், விழிப்புணர்வு முகாம்கள் நடத்த இருக்கிறேன்.

இதன் விற்பனையாளராக ஏஜெண்டுகளாக பணியாற்ற பல இளைஞர்களுக்கு வாய்ப்பு தர விரும்புகிறேன்.

சந்திப்பு:

சிறுதொழில்முனைவோர்.காம் மின் இதழுக்காக :

உயர்திரு :
M.ஞானசேகர் அவர்கள் 95662 53929
தொழில் ஆலோசகர்
சென்னை

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி

அனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 5 மட்டுமே !

 

விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி 6000 பெற விண்ணப்பிப்பது எப்படி

 

விவசாய சந்தை வாங்க விற்க
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *