ஹைட்ரோபோனிக்ஸ்

அரசு மானியத்தில் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பசுந்தீவனம்

2818

ஹைட்ரோபோனிக்ஸ்:

ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண்ணில்லா விவசாயம். ஆம், தாவரங்கள் மண்ணில்லாமல் வெறும் தண்ணீரை மட்டும் எடுத்துக்கொண்டு வளரும் முறையே ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும். தற்போது வளர்ந்து வரும் வேளாண்மை பரிமாணங்களில் இதுவும் கவனம் ஈர்த்தவை.

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைகளுக்கு  பசுந்தீவனம் தயாரிப்பதில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் சிறிய தொகையில் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது  கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மிகவும் முக்கியமானதாகும் பசுந்தீவனம்  உற்பத்தி செய்வதில் விவசாயிகள் பலர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பச்சை தீவனம் என்பது கால்நடைகளுக்கு இயற்கையான உணவாகும்  தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்வதற்கான அதன் உற்பத்தி கால்ந,டை விவசாயிகளிடையே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது பச்சை தீவனத்தின் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான இடைவெளி கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாயிகள் மாற்று தீவனம் அல்லது வேறு தீவன உற்பத்தி முறையை தேடுகின்றனர்.

21 ஆம் நூற்றாண்டில் பசுந்தீவன உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்திய கலை தொழில்நுட்பத்தின் நிலை ஹைட்ரோபோனிக்ஸ் ஆகும்.

பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்:

கால்நடைகளுக்கான இயற்கையான உணவாகவும், பாலின் கொழுப்பு சதவீதத்தை மேம்படுத்தவும் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தது. வைட்டமின் ஏ தொகுப்பிற்கு உதவுகிறது, வைட்டமின் ஏ இனப்பெருக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த செலவில்  கால்நடைகளுக்கு ஆரோக்கியம் மேம்படவும் சிறந்ததாக கருதப்படுகிறது

ஹைட்ரோபோனிக்ஸ் தீவன உற்பத்தியின் நன்மைகள்:

  • 480 சதுர அடி பரப்பளவில் தினமும் ஆயிரம் கிலோ உற்பத்தி செய்யலாம் இதுவே நம் பழைய முறையில் 5 முதல் 30 ஏக்கர் வரை நிலம் தேவைப்படும்.
  • 95% அளவிற்கு நீர் சேமிப்பு மற்றும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
  • ஆண்டு முழுவதும்  உற்பத்தி செய்யலாம்.
  • அறுவடை காலம் வெறும் 8 நாட்கள் தான்.
  • உழைப்பு ஆற்றல் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
  • எந்த பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தாமல்  தீவனம் முற்றிலும் இயற்கையாக வளர்க்கப்படுகிறது.
  • சத்தான தீவனம்- விதை மற்றும் வேருடன் ஹைட்ரோபோனிக் தீவனம் (முளை பாய்) சுவையான தன்மையுடனும் சிறந்த  ஊட்டச்சத்துக்கள் உடனும் கால்நடைகளுக்கு புரதச்சத்து நிறைந்தவையாகும் இருக்கும்.

ஒன்று அல்லது 2 கால்நடைகள் வளர்க்கும் ஏழை கிராமப்புற விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக தினசரி 15 முதல் 30 கிலோ தீவனத்தை உற்பத்தி செய்யும் TANUVAS-LOW Cost hydroponic device உருவாக்கியுள்ளனர் எதிர்வரும் காலங்களில் ஹைட்ரோபோனிக்ஸ் முறையை பசுந்தீவனங்கள் உற்பத்தி செய்ய சிறந்த முறையாக விவசாயிகள் தேர்வு செய்வார்கள் என்றும் அதனை கருத்தில் கொண்டு இதுபோன்ற சாதனங்கள் உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதில் தீவனமாக மஞ்சள் மக்காச்சோளம், ராகி, சோளம், கம்பு, திணை, கொள்ளு ஆகியவை வெற்றிகரமாக வளர்க்கப்பட்டு கால்நடைகளுக்குத் தீவனமாக கொடுத்ததில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

கால்நடைகள் விரும்பி உண்ணக் கூடிய வகையிலும் இருக்கிறது ஏனெனில் சதைப்பற்று உள்ளதாகவும் சுவையாகவும் இருக்கிறது.

வணிகரீதியாக கிடைக்கும் ஹைட்ரோபோனிக் சாதனங்கள் பெரிய அளவிலான உற்பத்திக்காக குறிப்பாக நடுத்தரம் முதல் பெரிய அளவிலான கால்நடை பண்ணைகளின் தீவனத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இந்த சாதனங்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால் சிறு விவசாயிகள் இது போன்ற சாதனங்கள் வாங்க இயலாததால் TANUVAS –  low cost hydroponic device 40 கிலோ/நாள் உற்பத்தித் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் ஒரு அரை தானியங்கி சாதனமாகும் இதில் தெளிப்பான்கள், ஸ்விச் பகல் நேரத்தில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் கைமுறையாக இயக்கப்பட வேண்டும். இதில் ஏர் கூலர் மற்றும்  வெளியேற்ற விசிறி உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 25 -28° வெப்பநிலையில் பராமரிக்க நாள் முழுவதும் வேலை செய்கிறது. ஒளிச்சேர்க்கைக்கு இரவு நேரங்களில் இயக்க வேண்டிய எல்இடி விளக்குகள் சாதனத்தின் உள்ளே வழங்கப்படுகிறது. பகல் நேரங்களில் சூரிய ஒளி அனுமதிக்க  பேனல்கள்  பொருத்தப்பட்டுள்ளது, பயன்படுத்தப்படும் நீர் ஒரு தொட்டியில் சேகரிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு மறுசுழற்சி செய்யப்படும் அதன் பிறகு தொட்டியை புதிய தண்ணீரில் நிரப்ப வேண்டும் சாதனம் எட்டு வரிசைகளைக் கொண்டது ஒரு வரிசையில் நான்கு தட்டுகள் வைத்திருக்கும் திறன் கொண்டவை ஒவ்வொரு தட்டிலும் ஒன்று முதல் இரண்டு கிலோ வரை விதை போடலாம் தீவனம் 5 முதல் 12 கிலோ வரை கிடைக்கும் விரும்பிய எந்த இடத்திற்கும் நகர்த்த சக்கரங்களுடன் வழங்கப்படுகிறது. இந்த சாதனத்திற்கு 25 சதுர அடி இடம் போதுமானதாக இருக்கும். இது எளிய மற்றும் கிராமப்புற விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது இந்த சாதனத்தை ஆர்டர்  அளித்து தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி பண்ணையிலிருந்து  பெற்றுக்கொள்ளலாம். தற்பொழுது 20 கிலோ உற்பத்தி திறன் கொண்ட பச்சை நிற துணி ஹைட்ரோபோனிக் கருவியை விவசாயிகள் மானியத்துடன் பெற்று பயன்படுத்திக்கொள்ளும் வகையில்  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது.

தொகுப்பு: சு.அ.யாழினி, இளங்கலை வேளாண்மை மூன்றாம் ஆண்டு, புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி.

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *