விதை பந்து

விதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்

4300

விதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம் | விதை பந்து

இன்று சுற்றுப்புறச் சூழல் மற்றும் இயற்கை யில் மேல் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் காரணமாக மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உள்ளது.

மேலும் மரம் வைத்து பாதுகாத்து வளர்க்க முடியாத தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மரம் செடிகொடிகளை பசரி அளித்து கொண்டிருந்தனர். அதேபோல் தற்போது விதைப்பந்துகளை பரிசாக வழங்கி வருகின்றனர். இதனடிப்படையில் விதைப்பந்துகளை உற்பத்தி செய்து நாமே விற்பனை செய்தால் நல்ல லாபமும் இந்த சமுதாயத்திற்கு நாம் நல்லது சென்ற செய்தோம் என்ற மன திருப்தியும் 100% கிடைக்கும்.

விதைப்பந்து என்றால் என்ன:

களிமண், செம்மண், பசுஞ்சாணம் போன்ற கலவையின் உள் விதைகளை வைத்து பந்துபோல் அல்லது கோலி உருண்டை அளவு சைஸில் செய்வததே விதைப்பந்து ஆகும்.

விதைப்பந்து இல் உள்ள சிறப்பு இயல்பே நாம் எந்த இடத்தில் அதை போடுகிறோமோ அந்த இடத்தின் பருவ நிலை மற்றும் தட்பவெப்பநிலை சூழ்நிலைகளைத் தாங்கி வளரக்கூடிய தன்மை அந்த விதைக்கு கிடைக்கும்.

விதை பந்து தயாரிக்கும் முறை

  • தோட்டத்து மேல் மண் (செம்மண் / களிமண்)
  • விலங்கு கழிவு (மக்கிய ஆடு அல்லது மாட்டு எரு / பசுஞ்சாணம் / மண்புழு உரம்)
  • நாட்டு மர விதைகள்
  • மண்:விலங்கு கழிவு: விதை = 5 : 3 : 1 என்ற அளவில் எடுத்து விதையை உள்ளே வைத்து மூட வேண்டும்.
  • மேலே குறிப்பிட்டுள்ள விகிதத்தில் சிறிதளவு நீரூற்றி பிசைந்து நடுவே, சேகரித்த விதைகளை வைத்து நிழலில் உலர்த்தி, பின் வெயிலில் ஒருநாள் காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் விதை பந்துகளில் வெடிப்பு  எதுவும் ஏற்படாமல் நன்கு காய்ந்து விடும்.
  • நாம் உருவாக்கிய இந்த விதை பந்து பிற பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். குறிப்பாக பறவைகள், எறும்புகள், எலி போன்றவைகளிடமிருந்து ஒரு ஆண்டு வரை பாதுகாக்கும்.
  • விதை பந்தில் கலந்துள்ள சாணமானது, நுண்ணுயிர்களை உருவாக்கி,  செடியின் வேர், மண்ணில் எளிதில் சென்று  தன்னை  மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.

 

விதைக்க ஏற்ற மரங்கள்

  • வேம்பு
  • புங்கன்
  • கருவேல்
  • வெள்வேல்
  • சந்தனம்
  • சீத்தா
  • வேங்கை
  • மகிழம்
  • வாகை
  • கொய்யா
  • புளி
  • ஆலமரம்
  • அரசு
  • புன்னை
  • வில்வம்
  • வள்ளி
  • கருங்காலி
  • நாகலிங்கம்

இவ்வகை நாட்டு மரங்கள் விதை பந்து தயாரிக்க உகந்தவை.

 

விற்பனை வாய்ப்பு:
இன்று தனியார் நிறுவனங்களும் தனிநபர்களும் விதை பந்துகளை பரிசாக வழங்கி வருகின்றனர். அதேபோல் திருமணம் காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் பரிசாக இந்த விதைப்பந்து பை வழங்கப்பட்டு வருகிறது.

எனவே விதை பந்துகளை அழகாக செய்து, மிக சிறப்பாக பேக்கிங் செய்து அந்த நிறுவனங்களின் பெயர்களை அந்த பேக்கிங்கில் அச்சிட்டு விற்பனை செய்ய இயலும். இதில் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச செலவு என்றால் பேக்கிங் மட்டுமே. மேலும் இந்த பேக்கிங் விலையும் மிகக் குறைந்த விலையில் நம்ம பெற இயலும்.

சொல்லப்போனால் விதைப்பந்து தயாரிப்பு மற்றும் விற்பனை தொழிலை வெறும் மூவாயிரத்தில் செய்து மாதம் 20 ஆயிரம் வரை வருமானம் பெற இயலும்.

விதைப்பந்தின் பேக்கிங் ஐடியாவை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

இந்த புதிய விதையை நமது சிறுதொழில்முனைவோர்.காம் வாசகர்களிடம் கொடுத்தாச்சு, அதை மரம் ஆக்குவதும், மக்க செய்வதும் உங்கள் கைகளில்.

 

நன்றி மற்றும் சுதந்திர தின வாழ்த்துக்களுடன் 
திரு. முருகானந்தம்
BJP  மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி  செயலாளர்

சிவகங்கை
9943847847

Keywords : விதை பந்து, விதை பந்து விற்பனை, விதைப்பந்து கிடைக்கும் இடம், விதைப்பந்து தயாரிக்கும் முறை, விதை பந்து கிடைக்கும் இடம், விதை பந்து எங்கு கிடைக்கும்.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி

அறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா

ரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி

ரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *