நாட்டுக்கோழி பண்ணை

நாட்டுக்கோழி வளர்க்க 50% மானியத்துடன் அருமையான திட்டம்

4032

நாட்டுக்கோழி

தொழில் முனைவோராக முயற்சிக்கும், இளைஞர்களுக்கு வந்துவிட்டது அற்புதத் திட்டம். தற்போதைய காலகட்டத்தில், எல்லாமே டெக்னாலஜி என்ற நிலையில் தான் உள்ளது. கோழியிலும் பிராய்லர் கோழி வந்த பின்பு, நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் எண்ணத்திலும், நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும் (Encourage) திருவள்ளூர் மாவட்டத்தில் 50% மானியத்தில் வந்துவிட்டது அருமையான திட்டம். திருவள்ளூர் மாவட்டத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் இணைந்து மானியம் (Subsidy) பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

 

 

50% மானியத்துடன் நாட்டுக்கோழி:

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் (National Agricultural Development Program) கீழ் 2020 – 21ம் ஆண்டில் தொழில் முனைவோர் (entrepreneurs) வளர்ச்சிக்கு, நாட்டு கோழிகள் ஒன்றியத்தில் தலா 3 பேருக்கு மிகாமல், 50 சதவீதம் மானியத்துடன் (50% Subsidy) கிராம ஊராட்சியில் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 2500 சதுர அடி நிலப்பரப்புடைய கொட்டகையில், 1000 கோழிகள் (Chickens) பராமரிக்கும் திறனுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி (ம) விண்ணப்பிக்கும் முறை:

கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராகவும், முந்தைய ஆண்டுகளில் (2012 – 2017) கோழி வழங்கும் திட்டத்தில் மற்றும் தேசிய கால்நடை முகமை திட்டத்தில் (National Livestock Agency program) பயன் பெற்றவராக இருக்ககூடாது. விதவைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோருக்கு முன்னுரிமையும் (priority), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு 30 சதவீதம் முன்னுரிமையும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவோர், அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில், கால்நடை உதவி மருத்துவர்களை (Veterinary assistant physicians) அணுகி, ஒரு வாரத்துக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள், அரசின் இத்திட்டத்தைப் பயன்படுத்தி, வாழ்வில் தொழில் முனைவோராக கால்தடம் பதியுங்கள்.

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com

மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *