nattu kozhi valarpu murai

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்!

18350

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம் : நாட்டுக்கோழி மானியம்

விளம்பரம் : முதல் தரமான நாட்டுக்கோழி மற்றும் குஞ்சுகள் விற்பனைக்கு : 8883136152, 96777 11318

”தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆகும் செலவில் 25 சதவிகிதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது.

“உடனே அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தையும் மற்றும் விரிவான விளக்கத்தையும் பெறவும் . அனைத்து மாவட்டத்திலும் இந்த திட்டம் தற்போது படிப்படியாக செயல்படுபட்டு வருகிறது. முன்பதிவு அவசியம்”

இதைத்தவிர நபார்டு வங்கியின் சார்பில் 25 சதவிகித மானியம் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவிகிதத் தொகை பயனாளிகள் தங்களின் சொந்தச் செலவிலோ வங்கிக் கடனாகவோ செலவிட வேண்டும். தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் நிதி அளவு ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 25 சதவிகிதமும் இறுதியாக நபார்டு வங்கி மூலம் 25 சதவிகிதமும் மானியமாக வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு ரூ.45,750 வரை மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் இம்மானியத்தை பெறத் தகுதியானவர்கள். நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பதாரர் பெயரிலோ அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ போதிய நிலம் இருக்க வேண்டும்.

கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கும் கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவர்களிடம் பண்ணைகள் அமைக்கப் போதிய நிலம் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே கொட்டகை அமைத்த பயனாளிகள் புதிய கொட்டகை அமைத்துக் கொள்ளவும் கோழிப் பண்ணைகளை விரிவாக்கம் செய்து கொள்ள ஆர்வமும் உள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வாய்ப்புகள் உள்ளன.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மாவட்டந்தோறும் செயல்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்கள் மூலம் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். எனவே, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.”

Keywords : நாட்டுக்கோழி மானியம், நாட்டுக்கோழி மானியம் 2020, இலவச கோழி வழங்கும் திட்டம் விண்ணப்பம், கோழி பண்ணை அமைக்க ஆகும் செலவு,  நாட்டு கோழி வளர்ப்பு pdf, நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2021

 


மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு நன்றி

விளம்பரம் : முதல் தரமான நாட்டுக்கோழி மற்றும் குஞ்சுகள் விற்பனைக்கு : 8883136152, 96777 11318




4 thoughts on “நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்!

  1. சிவசண்முகராஜன்.ஹ

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது எங்கள் தோட்டத்தில் இந்த கோழி வளர்ப்பு முறை பின்பற்ற முயற்சி செய்கிறேன் 24/1 24/2 ல் சர்வே எண் கிராமம் வரத்தப்ப நாயகன் பட்டி கை பேசி 877280690 மற்றும் BSNL 9150919502

    Reply
      1. Vikay

        இந்தத் திட்டத்தின் இத்திட்டத்தின் மூலம் கோழி வளர்ப்பதற்கு ஆர்வமாக உள்ளது

        Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *