muyal valarpu

முயல் வளர்ப்பு சுய தொழில்

2427

முயல் வளர்ப்பு சுய தொழில்

முயல் வளர்ப்பு எதற்காக ?
  • குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது.
  • சாதாரண தீவனத்தை உட்கொண்டு அதனை சிறந்த இறைச்சியாக மாற்றும் திறன்
  • இறைச்சிக்காகவும், உரோமத்திற்காகவும், தோலுக்காகவும் வளர்க்கலாம்
முயல் வளர்ப்பு யாருக்கு ?
 நிலமற்ற விவசாயிகள், படிக்காத வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலாகும்.
முயல் வளர்ப்பின் பயன்கள் என்ன ?
  • முயல் வளர்ப்பின் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான தரமான  இறைச்சியை உற்பத்தி செய்து செலவை குறைக்கலாம்
  • முயல்களுக்கு தீவனமாக எளிதில் கிடைக்கும் இலை, தழைகளையும், வீட்டில் வீணாகின்ற காய்கறிகளையும், குறைந்த அளவு தானியங்களையும் கொடுக்கலாம்
  • இறைச்சி முயல்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இறைச்சி முயல்கள் மூன்று மாத வயதில் 2 கிலோ உடல் எடையை அடைகின்றன.
  • முயல்களின் குட்டி ஈனும் திறன் மிக அதிகம்
  • முயல் இறைச்சியில் மற்ற இறைச்சிகளை விட அதிக அளவு புரதச் சத்தும் (21%) குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் (8 %) உள்ளது. அதனால் முயல் இறைச்சி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது
முயல் இனங்கள் மற்றும் கிடைக்குமிடம்
இறைச்சி வகை இனங்கள்

அதிக எடை உள்ள இனங்கள் (4-6 கிலோ எடை)

  • வெள்ளை ஜெயண்ட்
  • சாம்பல் ஜெயண்ட்
  • பிளமிஸ் ஜெயண்ட்

    வெள்ளை ஜெயண்ட் – அதிக எடையுள்ள இனம்

நடுத்தர எடை உள்ள இனங்கள் (3-4 கிலோ எடை)

  1. நியூசிலாந்து வெள்ளை
  2. நியூசிலாந்து சிவப்பு
  3. கலிஃபோர்னியா

குறைந்த எடை உள்ள இனங்கள் (2-3 கிலோ எடை)

  1. சோவியத் சின்சில்லா
  2. டச்சு வகை

  சோவியத் சின்சில்லா – குறைந்த எடையுள்ள இனம்

உயர்தர வெள்ளை ஜெயண்ட் மற்றும் சோவியத் சின்சில்லா இனங்கள் கிடைக்குமிடம்

கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்

04286 -266491, 266492

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.மேலும் தங்களுக்கு தெரிந்த தொழில் மற்றும் துணுக்குகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நல்ல விசயத்தை இந்த உலகம் அறிய செய்யோம். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *