packShotPuree copia

சீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்

1948

சீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்

காற்று உள்ள போதே தூற்றி கொள், என்பது பழமொழி. அதேபோல் சரியான வழியில் பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த தொழில் ஏற்றது.
இந்த கோடைதான் தங்களுக்கு வருமானத்தை அள்ளி தர போகும் அட்சய பாத்திரம் ஆகும்.கோடைகாலத்தை சமாளிப்பது என்பது அனைவர்க்கும் மிக பெரிய சவால் ஆகும். மக்கள் தங்கள் தாகத்தை தணிக்கவும், உடலில் குளிர்ச்சியை தக்க வைக்கவும் இளநீர் மற்றும் பழ ஜூஸ் வகைகளை விரும்பி அருந்துகின்றனர். கோடையில், பல கடைகள் புதிதாக முளைத்து இருப்பதை பார்த்து இருப்பீர். அதே போல் நாமும் ஓர் கடை ஆரம்பிக்க போகிறோம். ஆனால் மற்றவர் செய்வதை போல் இல்லாமல், நாம் புதிதாய் ஓர் ஜூஸ் விற்பனை செய்தால் தான் நாம் வெற்றி பெற முடியும்.
எனவே, சுருள் பாசி லெஸி செய்து விற்றால் அதிக வருமானம் கிடைக்கும். மேலும் இது மக்களுக்கு புதிதாய் தோன்றும் . மேலும் சுருள் பாசியில் அதிக சத்து அடங்கி உள்ளது. அதிக குளிர்ச்சி தர கூடியது.
சீசன் க்கு ஏற்ற சின்ன பிசினஸ் பெரிய இலாபம்
பயன்கள்:
ஸ்பைருலீனாவில் -சுருள் பாசியில் உள்ள ஊட்டச் சத்துக்களின் பட்டியல் :-
புரதம் :-               55% முதல் 65% வரை.
தாதுக்கள் :-       இதில் அனைத்து வகையான தாதுக்களும் உள்ளன.   உடலைச்  சீராக   இயக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும்  உதவுகின்றது.
மக்னீசியம், நைட்டனின் ஏ, பீட்டாகரோட்டின் வைட்டமின்  B6, B12, ரும்புச்சத்து, ஹார்போஹைடிரேட்,  காமாலினோலினிக் மமிலம், சூப்பர் ஆக்ஸைடு, டிஸ்மியூட்டேஸ்  (SOD)  போன்றவைகளும் உள்ளன.
விண்வெளி ஆராய்ச்சி மேற் கொள்பவர்கள் உணவு உட்கொள்ள இயலாது எனவே இதை கேப்சூலாக எடுத்துக் கொள்வார்கள் 1கிலோ காய்கறி பழங்களில் உள்ள சத்துக்கள் 1கிராம் ஸ்பைருலினாவில் உள்ளது
செய்முறை :
வீட்டில் மிக்ஸி இருந்தால் வெறும் ரூபாய் 1000 முதலீட்டில் ஆரம்பிக்க முடியும். செய்முறையும் மிகவும் எளியது ஆகும் .100 மில்லி நல்ல கட்டியான தயிரில் தேவையான அளவு சக்கரை சேர்த்து 2 கிராம் சுருள் பாசி பவுடரை கலந்து மிக்ஸியில் அடித்தால் சுவையான, சத்தான கோடைக்கு ஏற்ற குளிர் பானம் ரெடி.
உற்பத்தி செலவு & லாபம்:
தயிர், சக்கரை, கப்பு, தண்ணீர் மற்றும் மின்சார செலவு எல்லாம் சேர்த்து ரூபாய் 9 ஆகும். ரூபாய் 25 க்கு ஒரு ஜூஸ் விற்றால் இலாபம் 15 ரூபாய் கிடைக்கும். மக்கள் தொகை அதிகம் உள்ள இடத்தில், சுருள் பாசியின் நன்மைகளை பட்டியல் யிட்டு பிட் நோட்ஸ் கொடுத்து விழிபுணரைவை ஏற்படுத்தினால், காலை 11 மணி முதல் நண்பகல் 3 மணி வரை மட்டும் விற்பனை செய்தால் குறைந்தது 100 முதல் 150 ஜூஸ் வரை விற்பனை செய்ய முடியும்.

ஒரு நாள் இலாபம் மட்டும் ரூபாய் 1500 வரை பெற முடியும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *