new business ideas

அதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள் சிறு தொழில்கள்

3021

அதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள்: சிறு தொழில்கள்

சைக்கிள் வாடகை :

 ஆரோக்கியத்தின் மீது அக்கறை இன்று அதிகமாகி வருகிறது. எனவே மீதிவண்டிகளின் தேவை இன்று அதிகரித்து வருகிறது. மீதி வண்டி வாடகை நிலையம் நல்ல தொழில் வாய்ப்பு ஆகும்.

சமூக வலைதள மார்க்கெட்டிங்:

 சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு தெரிந்தவர்களின் பொருள் அல்லது சேவைகளை விற்பனை செய்து கொடுக்கலாம். அதற்க்கு சேவை கட்டணம் பெறலாம். எந்த நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது, மக்களை கவரும் வண்ணம் எழுத்து திறமை வேண்டும்.

யோகா வகுப்பு :

  ஆரோக்கியத்தின் மீது அக்கறை இன்று அதிகமாகி வருகிறது, எனவே சிறிய இடத்தில் நன்கு யோகா தெரிந்த ஆசிரியர்களை கொண்டு யோகா வகுப்பு நடத்தலாம். நல்ல வருமானம் உறுதி.

கிளீனிங் சர்வீசஸ் :

  இன்று அனைத்து ஊர்களிலும் வீடு மற்றும் டாய்லெட் கிளீனிங் செய்ய வேலை ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் கட்டணம் அதிகம். ஆட்களை நீங்கள் நியமித்து, உங்கள் பகுதியில் சிறிய அளவில் விளம்பரம் செய்து அதிக சேவைகளை பெற்று இலாபம் பெறலாம்.

உள்ளூர் செய்தி இணையம் :சிறு தொழில்கள்
ஒரு மாவட்டம் அல்லது ஒர் பெரிய நகரத்துக்கு மட்டும் செய்தி வழங்கும் இணைய சேவை ஆரம்பிக்கலாம்.இதில் உள்ளூர் செய்தி, தகவல்கள் பதிவு செய்யலாம். இதில் உள்ளூர்விளம்பரம் மற்றும் கூகிள் விளம்பரம் மூலம் வருமானம் பெற முடியும். மேலும் ஒரு தகவலை நொடி பொழுதில் உலகம் முழுவதும் உங்களால் பரப்ப முடியும்.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




One thought on “அதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள் சிறு தொழில்கள்

  1. N M Vignesh

    பூஜை பன்னீர் தயாரிக்கும் முறை பற்றி தெரியப்படுத்த முடியமா ஐயா.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *