நாட்டுக்கோழி பண்ணை

100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு

3873

100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு:

தமிழகம் முழுவதும்  பெண்களுக்கு, அசில் ரக கோழி வளர்ப்புக்கு 100 சதவீத மானியத்தில் குஞ்சுகள் வீதம் வழங்கப்பட உள்ளன.

கோழி வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 400 பேர் வீதம் 5,600 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய 25 அசில் ரக கோழிக் குஞ்சுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

பெண்களுக்கு வாய்ப்பு (Call for ladies)

பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ள இத்திட்டத்திற்கு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தில் பதிவு பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 

விதிகள்  (Norms)

  • அந்தந்த கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
  • ஏற்கனவே, விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு அல்லது செம்மறியாடு மற்றும் கோழி வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள், இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.
  • விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • 30 சதவீதம்  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  • தகுதியான ஏழைப் பெண் பயனாளிகள் தங்களது கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் இம்மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




One thought on “100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *