new business ideas

ஜீரோ முதலீட்டில் கிராமப்புற தொழில் வாய்ப்பு மாதம் 30 ஆயிரம் வருமானம்

9403

ஜீரோ முதலீட்டில் கிராமப்புற தொழில் வாய்ப்பு மாதம் 30 ஆயிரம் வருமானம்

சிறுதொழில் முனைவோர்.காம் இணையதளம் கிராமப்புறத்தில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் பொருட்டு ரூபாய் ஜீரோ முதலீட்டில் மாதம் 30 ஆயிரம் வரை வருமானம் பெறும் தொழில்களை இங்கு அட்டவணைப்படுத்தி உள்ளோம்.

பிரண்டை சேகரிப்பு மற்றும் விற்பனை:
கிராமப்புறங்களில் அனைத்துப் பகுதிகளிலும் பிரண்டை தாராளமாக கிடைக்கும், இதைப் பறித்து சுத்தம் செய்து அருகிலுள்ள நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியும். மேலும் சமூக வலைதளங்களில் விளம்பரம் மூலமாகவும் விற்பனை செய்வது மிகவும் எளிது தங்களிடம் இந்த பொருள் இருக்கும் என்று தெரிந்தாலே வாங்குவதற்கு அதிக நபர்கள் உள்ளனர்.

ஆவாரம்பூ சேகரிப்பு மற்றும் விற்பனை:
ஆவாரம்பூ கிராமப்புறத்தில் இதுவும் சாதாரணமாக கிடைக்கும் சிறந்த ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது சுகர் மற்றும் பல வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆவாரம் பூ, இலை, வேர், பட்டை ஆகியவற்றை விற்பனை செய்ய முடியும் இதை டீ பவுடராக செய்து விற்பனை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். மேலும் இதில் இட்டிலி பவுடரும் செய்ய முடியும்.

கீரை வகைகள்:
கிராமப்புறங்களில் பல வகையான கீரை வகைகள் உள்ளன. இவற்றை பறித்து சுத்தம் செய்து நகர்ப்புறங்களுக்கு விற்பனை செய்ய இயலும் உதாரணமாக சிறுகுறிஞ்சான், முருங்கைக்கீரை, ஆப்ப கீரை மற்றும் பல வகைகள் உள்ளன.

மூலிகை சேகரிப்பு மற்றும் விற்பனை:
நாயுருவி செடியை வேர் இலை மற்றும் அரிசி ஆகியவை அதிக அளவில் தேவைப்படுகிறது இதை முழு செடியாகவும் கிலோ கணக்கில் விற்பனை செய்ய இயலும். இதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் செய்து விற்பனை செய்யும் பொழுது லாபம் பல மடங்கு பெருகும்.

சிவகரந்தை:
சிவகரந்தை கிராமப்புறங்களில் உள்ள வயல்களில் அதிக அளவில் காணப்படும் ஒரு பொருளாகும். கிராமப்புறத்தில் இதை கொட்டாங்கரந்தை என்று அழைப்பார்கள். இதை பவுடர் செய்து விற்பனை செய்வது மூலம் 100 கிராம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய இயலும். சந்தையில் அதிக தேவை உள்ள ஒரு பொருளாகும். இதை முழு செடியாகவும் கிலோ கணக்கில் விற்பனை செய்ய இயலும். மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம்.

துத்திக் கீரை:
துத்திக் கீரை மூலம் நோய்க்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. எனவே துத்திக் கீரை மற்றும் துத்திக்கீரை பவுடருக்கு அதிக வரவேற்பு உள்ளது எனவே இதை பறித்து சுத்தம் செய்து முழுதாக விற்பனை செய்யலாம். மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம்.

வேப்பம் பூ :
வேப்பம் பூ மிகச் சிறந்த கிருமி நாசினி மற்றும் உடல் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஒரு அபூர்வ பொருளாகும். கிராமங்களில் வேப்பம்பூ சீஸனில் அதிக அளவில் கிடைக்கப்பெறும். இதை சேகரித்து சுத்தம் செய்து பொடியாக அல்லது அப்படியே முழு பொருளாகவும் விற்பனை செய்யலாம். மேலும் இதில் வத்தல், வடகம் செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் பெறமுடியும்.

வேப்பம் பட்டை:
கிராமப்புறத்தில் வேப்ப மரங்கள் அதிக அளவில் காணப்படும் இதிலுள்ள முற்றிய பட்டைகளை பொடியாக அரைத்து விற்பனை செய்யும் பொழுது நல்ல லாபம் பெற முடியும்.

ஆலம் பட்டை:
கிராமப்புறத்தில் ஆலமரமும் வெகுவாக காணப்படும். இதிலுள்ள பட்டை மற்றும் இலைகளை பொடியாக அரைத்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் காண முடியும்.

அரசமரம் :
அரச மரத்தில் உள்ள இலை குச்சி மற்றும் பட்டை அதிக தேவை உள்ளது இவற்றை அப்படியே வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம், அல்லது பொடியாக அரைத்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் காணமுடியும்.

புளியம்பட்டை:
புளிய மரத்தில் உள்ள பட்டைகளை பொடியாக அரைத்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் காண முடியும்.

முருங்கை விதை:
கிராமப்புறங்களில் முருங்கை மரம் வெகுவாக காணப்படும் முருங்கை விதைகளுக்கு உலக அளவில் அதிக அளவில் தேவை உள்ளது ஏனெனில் இது ஆண்மை பெருக்கியாகவும், எதிர்ப்பு சக்தியாகவும் உடலில் பயன்படுகிறது எனவே இவற்றை சேகரித்து பொடியாக செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் காண முடியும்.

சீந்தில் கொடி:
சீந்தில்கொடி என்பது ஓர் ஒட்டுண்ணி தாவரம் ஆகும். கிராமப்புரத்தில் இது வெகுவாக காணப்படும் இந்த மூலிகை தெரிந்தவர்கள் பறித்து சுத்தம் செய்து விற்பனைக்கு அனுப்பலாம் அல்லது பொடி செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

விற்பனை வாய்ப்பும் விற்பனை முறையும்:
மேலே கூறப்பட்ட அனைத்து தொழில்களும் முதலீடே இல்லாமல் பண்ணக்கூடிய ஒரு தொழிலாகும். இதை எளிதாக சமூக வலைதளங்கள் மூலமாக விற்பனை செய்ய இயலும். தங்களிடம் உள்ள பொருள்களை அழகாக போட்டோ எடுத்து அதை சிறந்த வார்த்தைகளால் அழகுபடுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டால் நல்ல விற்பனை வாய்ப்பு கிடைக்கும்.

மூலிகை விற்பனை மூலம் மதம் ரூபாய் 30000 வரை முயற்சி இருந்தால் எளிதாக வருமானம் ஈட்ட முடியும். குடிசை தொழில் வகைகள், குடிசை தொழில் பட்டியல், லாபம் தரும் சிறு தொழில், கிராமப்புற தொழில் வாய்ப்பு.

உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக மேலே குறிப்பிட்ட அனைத்து பொருள்களுக்கும் சந்தை வாய்ப்பு எளிது.

மேலும் இந்த தொழில்களை பற்றி விளக்கம் வேண்டுமெனில் அருகிலுள்ள கேவிகே கிளைகளை அணுகலாம் அல்லது www.nattumarunthu.com

நன்றி

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *